நீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ளும் நோக்கில் தேசிய தகவல் மையம் eCourts என்ற சேவையை வழங்கி வருகிறது.

eCourts சேவையைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பெரும்பாலான உயர் நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்பட்டு வரும் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு விவரங்களைப் தெரிந்துகொள்ளலாம்.

இந்தச் செயலியை குடிமக்கள், வழக்கறிஞர்கள், காவல் துறை, அரசு நிறுவனங்கள் மற்றும் பிற கார்ப்ரேட் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

eCourts சேவை மூலமாக ஒரு வழக்கின் விவரங்களைப் பெற CNR எண், வழக்கின் நிலை, வழக்கின் காரணம், தேதி போன்ற விவரங்களை வைத்துப் பெறமுடியும். இந்தச் செயலியைப் பயன்படுத்தி வழக்கறிஞர்களால் நீதிமன்ற கட்டணத்தையும் செலுத்த முடியும்.

இந்தச் செயலியில் நாடு முழுவதும் இருக்கும் 18,000 மாவட்ட நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் மற்றும் 21 உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களைப் பெற முடியும்.

ஒரு வழக்கின் நிலை, வகை, அடுத்த வாய்தா எப்போது போன்ற விவரங்களை eCourts செயலி வழங்குகிறது. 3.2 கோடிக்கும் அதிகமான வழக்குகளின் விவரங்கள் இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 5,000 பேர் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதாகக் கூறுகின்றனர்.

ecourts சேவையை, செயலி மற்றும் ecourts.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெறலாம்.

%d bloggers like this: