வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி ?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமான வாக்களிக்கலாம் என்று பரவிய தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கலாம் என்றும், இதற்காக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

It has come to our notice that the following FAKE NEWS is circulating on some WhatsApp groups.
It is clarified that you can only apply for voter registration online through https://t.co/oC8AwgyIdK portal pic.twitter.com/OTxjb1zFbA

— Sheyphali Sharan (@SpokespersonECI) February 21, 2019

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், “வரும் மக்களவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது. அதுபோன்ற வசதிகள் செய்யப்படவில்லை. அவர்கள் ஆன்லைனில் வாக்களிக்க வேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

அதுபோன்ற திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. இப்போதைய நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் வாக்களிக்க வேண்டுமென்றால், அவர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, இந்தியாவுக்கு வந்து தனது தொகுதிக்கு சென்று பாஸ்போர்ட்டை காட்டி ஓட்டளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

எப்படி பதிவு செய்வது?

நீங்கள் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்து வாக்களிக்க விரும்பினால் nsvp.in அல்லது ECI Helpline தளத்திற்கு சென்று 6A படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து, உங்கள் கோரிக்கைக்கு பதிவு எண் வழங்கப்பட்டு உரிய இடத்தில், உரிய நேரத்தில் நேரில் சென்று வாக்களிக்க வேண்டிய இடத்தின் விவரம் அனுப்பபடும்.

இதனை அடுத்து, தேர்தல் நாளன்று உங்களது பதிவு எண்ணுடன் பாஸ்போர்ட்டை காட்டி, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்யலாம்.

%d bloggers like this: