Daily Archives: மார்ச் 16th, 2019

தமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க!’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் இந்தியா முழுவதும் கூட்டணிகளை முடிவு செய்துவிட்டு, தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையையும் முடித்து, தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் கட்சிகளை நடத்துவதற்கு பெரும் பொருளாதார பலம் தேவை. பொருளாதாரத்தைக் கையாள, கட்சிகள் தங்களுக்கு வரும் நன்கொடைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் தங்கள் கட்சிகளின் வரவு – செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.

Continue reading →

அடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்

இரு நாட்கள் தான் ஆகியிருக்கும்.. தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து. அதற்குள் சாலிகிராமம் இல்லத்திற்கு, இன்று வருகை தந்தார் அடுத்த விஐபி.

அந்த விஐபி வேறு யாருமல்ல, சாட்சாத் தமிழகத்தின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிதான்.
Continue reading →

கோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி?

கோடை காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் 10வயது வரை உள்ள குழந்தைகளுக்கு  பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பமடைந்த பெண்களுக்கு பொதுவாகவே வாந்தி மயக்கம் இருக்கும். மழைக் காலங்களில் வாந்தி இருந்தாலும் உடலில் உள்ள நீர்ச்சத்தை கொண்டு தேகம் அதனை சமன்படுத்தி கொள்ளும். ஆனால் கோடை காலங்களில் வியர்வை மூலம் நீர்சத்து அதிகம் வெளியேறினால் சோர்வு ஏற்படுவதுடன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

Continue reading →

7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா??? ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…

நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணி இறுதியாகும் நிலையில் உள்ளது.

தேமுதிகவை எதிர்பார்த்து பாஜக இருப்பதால் அதிமுகவினால் கூட்டணியை இறுதிசெய்ய முடியவில்லை. ஒரு ராஜ்ய சபா சீட் அன்புமணிக்கு என உறுதியானதால் மீதியிருக்கும் தொகுதிகளில் கட்சியை சார்ந்தவர்கள் போட்டியிடலாம் என நினைத்தனர். ஆனால் கட்சி தலைமையின் முடிவு வேறொன்றாக

Continue reading →

வேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..!

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தன் மகனை களமிறக்கி வெற்றிபெறச் செய்வதற்காக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மாஸ்டர் பிளான் வகுத்திருக்கிறார். இந்த மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் வன்னியர் அல்லாத மாற்றுச் சமூக வேட்பாளர்களைக் களமிறக்க துரைமுருகன் திட்டமிட்டிருக்கிறார். அவரின் இந்தச் செயல் தி.மு.க-வில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைக் கடும் அதிருப்தியடையச் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Continue reading →

ராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்!

ப்ளூ ஜீன்ஸ் பேன்ட், கருப்பு டி ஷர்ட் உடன் வந்த கழுகாரிடம், ‘‘இதெல்லாம் ராகுல் காந்திக்குத்தான் நன்றாயிருக்கும்!’’ என்று கலாய்க்க, ‘‘காஸ்ட்யூமில் என்ன இருக்கிறது… கருத்துகள் எப்படி இருக்கின்றன என்பதுதான் முக்கியம். அதைவிடும்… ராகுல் காந்தியின் தமிழக வருகை, இளைய தலைமுறையிடம் ‘ஸ்கோர்’ செய்திருப்பதாக உற்சாகத்தில் இருக்கிறது, தி.மு.க கூட்டணி’’ என்றார் கழுகார்.

‘‘ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் பெரிதாக உற்சாகத்தைப் பார்க்க முடிய வில்லையே!’’

Continue reading →

எலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’

முற்றிலுமாக மூடிமறைக்க நினைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ விவகாரம் பற்றியெரியத் தொடங்கிவிட்டது. கட்டுக்கடங்காத காட்டுத்தீ போல கைபேசியிலும் கணினியிலும் பரவிய இந்த விவகாரம், தமிழகத்தையே கொதிப்படைய வைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி, கமல்ஹாசன் வரை அனைத்து அரசியல் தலைவர்களும் பேட்டி, அறிக்கை, மனு என்று பொங்கிவிட்டனர். பொள்ளாச்சிக்கே சென்று போராட்டம் நடத்தி, பொதுமக்கள் மத்தியில் ஆவேசம் காட்டினார், கனிமொழி. உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிடக் கூடாது என்று மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

Continue reading →

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

‘இலக்கை அடைவதில் உங்கள் திட்டம் பலனளிக்கவில்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள், இலக்கை அல்ல’ என்றொரு பொன் மொழி உண்டு. எடை குறைப்பு முயற்சிக்கு மிகப் பொருத்தமான பொன்மொழி இது.

Continue reading →

வரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்!

ற்சாகத்துடன் வந்த கழுகாரிடம் கைகொடுத்து, ‘‘கடந்த இதழுக்கு முந்தைய இதழில், ‘கூட்டணி பிஸினஸ், சொதப்பும் சபரீசன், சீறும் சீனியர்கள்!’ என்ற தலைப்பில் நீர் சொன்ன விஷயங்கள் வெளியாகியிருந்தன. அதைப் படித்துவிட்டு மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் பலரும், ‘பூனைக்கு மணிக் கட்டியாகிவிட்டது’ என்று குஷியாகிவிட்டார்கள். பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாடித் தீர்த்துள்ளனர்’’ என்று உற்சாகப்படுத்தினோம்.

Continue reading →

ஷேவிங் க்ரீம் தீர்ந்துபோச்சா?… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்

தினமும் ஷேவ் செய்து கிளீனாக வைத்திருக்கும் பழக்கம் இருப்பவர்கள் காலையில் எழுந்து ஷேவ் செய்ய ரெடியான பின் ஷேவிங் க்ரீம் டப்பா காலியாக இருந்தால் எவ்வளவு எரிச்சல் வரும். இனிமேல் அந்த மாதிரி டென்ஷனெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை.
Continue reading →