கை மாறுகிறது பணம்! தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்

தமிழகத்தில் நடக்க உள்ள, லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பதில், பணம் முக்கிய காரணியாக திகழப் போகிறது. பணம் வினியோகத்தில், தங்களுடைய வழக்கமான வழிமுறைகளை மாற்ற, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில், தேர்தல் என்றாலே, மக்களுக்கு கொண்டாட்டம் என்ற, நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில், வேட்பாளர்களுக்கு, ஓட்டு கேட்டு செல்வோருக்கு, வேட்பாளர் தன் செலவில், டீ வாங்கி கொடுப்பார்; வேறு எதுவும் தர மாட்டார்.

பிரியாணி:

கட்சியின் மீதுள்ள பிடிப்பு காரணமாக, கட்சியினர், தங்களுடைய கை காசை செலவழித்து, பிரசாரம் செய்தனர். தற்போது, நிலைமை தலைகீழ். பணம் இருந்தால் தான், எதையும் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஒரு அரசியல் கட்சி வேட்பாளர், ஒரு வட்டத்தில், ஓட்டு கேட்க செல்வதற்கு முன், அந்த வட்ட நிர்வாகிக்கு, குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். அந்த பணத்தில், அவர் வேட்பாளரை வரவேற்க, கூட்டத்தை திரட்டுவார்; சால்வை, பட்டாசு போன்றவற்றை வாங்குவார். அதன்பின், வேட்பாளருடன், வீடு வீடாக செல்ல, ஆட்களை ஏற்பாடு செய்வார். அவர்களுக்கு, 200 அல்லது 300 ரூபாய், மதியம் பிரியாணி வழங்கப்படும்.

இது தவிர, வேட்பாளர்களை வரவேற்று, ஆரத்தி எடுக்கும் பெண்கள்; வீட்டின் முன் கோலமிடும் பெண்கள்; பூ துாவும் பெண்களுக்கு, வேட்பாளர் தனியே செலவழிக்க வேண்டும். இது தவிர, உடன் வரும் வாகனங்களுக்கு, பெட்ரோல், டீசல் செலவு, கட்சியினருக்கு, இரவு மது விருந்து என, பணம் தண்ணீராக செலவாகும். கடந்த சில தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, அதிகரித்து விட்டது. வாக்காளர்களுக்கு, அண்ணாதுரை காலத்திலேயே, பணம் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. அன்று, 5 ரூபாய் வழங்கிய நிலை போய் இன்று, 500, 1,000 வழங்கும் அளவுக்கு வந்துள்ளது. இடைத்தேர்தலில், ஓட்டின் மதிப்பு, 2,000 ரூபாயை தொட்டுள்ளது.

மூன்றாம் நபர்:

மேலும், பணம் கொடுத்தால், வெற்றி பெறலாம் என்ற எண்ணம், அனைத்து கட்சிகளிடமும் ஏற்பட்டு உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் பணம் வழங்கும் பொறுப்பு, மூன்றாவது நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், பணம் மக்களை சென்றடையவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இம்முறை கட்சியினரிடமே, பணம் வினியோகத்தை ஒப்படைக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய்; வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது, மக்களிடம் நேரடியாக சென்றடைந்து விட்டது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை, மூன்றாவது நபரிடம் ஒப்படைத்தால், கட்சியினர் விரக்தி அடைவர். எனவே, இம்முறை கட்சியினர் வாயிலாக, பணத்தை வினியோகம் செய்யலாம். முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை, மூன்றாவது நபரை வைத்து கண்காணிக்கலாம் என, கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இதற்கு நேர் மாறாக, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு

<span>%d</span> bloggers like this: