பொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க!

முடி சார்ந்த பிரச்சினைகள் யாருக்கு தான் இல்லை. 1 முடி கொட்டினாலே மலை மலையாக பலரின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்டும். எல்லா வகையான மக்களுக்கும் முடியை பற்றிய கவலை இருக்க தான் செய்கிறது. முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வெள்ளை முடி போன்ற பல பிரச்சினைகள் முடியில் உண்டாகிறது.

முடியில் உண்டாகிற பிரச்சினைகள் நமது உடல் ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முடி கொட்டும் பிரச்சினையை நினைத்து மன அழுத்தம் கூடுதல், இதனால் உடல் நல கோளாறுகள் உண்டாகுதல்.. . இப்படிபட்ட பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க, சில எளிய வழிகள் உள்ளது. அதுவும் நெயை வைத்தே நம்மால் இதற்கு தீர்வு காண முடியுமாம். இது எவ்வாறு சாத்தியம் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நெய்

மிகவும் அருமையான உணவு பொருள் தான் இந்த நெய். உடல் நலத்தை பாதுகாப்பது போன்றே, முடியின் ஆரோக்கியத்தையும் இது சீராக வைக்கிறது. நெயை பற்றிய பல வித் ஆய்வுகள் இவை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றே கூறுகின்றன.

ஜப்பானியர்களின் முறை

ஜப்பானிய ஆராய்ச்சியில் முடியின் வேர் பகுதியில் நெயை தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி ஆரோக்கியமாகும் என கூறப்படுகிறது. அத்துடன் நாம் நினைப்பதை விடவும் முடியின் உறுதி கூடுமாம்.

அடர்த்தி அதிகரிக்கும்

வைட்டமின் ஏ நெய்யில் இருப்பதால் முடியின் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும். அத்துடன் வறட்சியான உங்களின் தலை பகுதி ஈரப்பதத்துடன் காணப்படும். கூடவே தலையில் சுரக்க கூடிய இயற்கையான எண்ணெய் சுரப்பிகளை இது ஊக்குவிக்கும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

MOST READ: இப்படி இருக்குற பானை வயிறை 2 வாரங்களில் தேனை கொண்டு குறைப்பது எப்படி?

முடி உதிர்வு

முடி உதிர்வை மிக வேகமாக கட்டுப்படுத்த இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையான பொருட்கள்…

நெய் 4 ஸ்பூன்

செம்பருத்தி இலை 10

தயாரிப்பு முறை

முதலில் செம்பருத்தி இலையை வெயிலில் உலர்த்தி பொடியாக செய்து கொள்ளவும். அடுத்து இதனுடன் நெய் கலந்து முடியின் வேரில் தடவவும். 30 நிமிடம் கழித்து முடியை சிறிது சிகைக்காய் பயன்படுத்தி அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று விடும்.

பொடுகு தொல்லை ஒழிய

பொடுகு தொல்லையை மிக சுலபமாக போக்க இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையான பொருட்கள்…

நெய் 3 ஸ்பூன்

நெல்லிக்காய் பொடி 3 ஸ்பூன்

தயாரிப்பு முறை

நெல்லிக்காய் பொடியுடன் நெய் கலந்து கொள்ளவும். அதன் பின் தலையில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடத்திற்கு பின்னர் தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். அத்துடன் முடியும் நீளமாக வளரும்.

பொலிவான முடியை பெற

முடியின் வளர்ந்தால் மட்டும் போதாது. அது பார்க்க மிகவும் பொலிவாக இருத்தல் வேண்டும். முடியை பொலிவாக்க சிறந்த வழி வாரத்திற்கு 2 முறை நெய்யை முடியில் தடவி மசாஜ் செய்து வந்தாலே போதுமாம். இந்த குறிப்பு 1 மாதத்திலே முடியை பொலிவாக மாற்றி விடும்.

%d bloggers like this: