இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா? அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…

எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், சிக்கனமாக இருந்தாலும் பணத்தை சேமிக்க முடியாமல் திணறுகிறீர்களா?. இது உங்களுடைய பழக்கவழக்கத்தால் அல்ல உங்களின் விதியால் ஏற்படும் சோதனையாகும். பழங்கால அறிஞர்களின் கூற்றுப்படி நமது எதிர்காலத்தை கூறும் அடையாளங்களும், சின்னங்களும் நமது உடலுக்குள்ளேயே இருக்கிறது. அதனை சரியாக உணர்ந்து கொண்டால் நாம் அதற்கு முன்கூட்டியே தயாராகி கொள்ளலாம்.

இந்த அடையாளங்கள் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம், பெரும்பாலும் இவை மச்சங்களாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த மச்சங்கள் நமது உடலில் இருக்கும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் மாறுபடும். இந்த பதிவில் எந்தெந்த இடங்களில் மச்சம் இருந்தால் உங்களின் பணக்கஷ்டம் எப்பொழுதும் தீராது என்பதை பார்க்கலாம

சாமுத்ரிகா சாஸ்திரம்

சாஸ்திரங்களில் முக்கியமான ஒன்றான சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி ஒருவரின் உடலில் இந்த எட்டு இடங்களில் மட்டும் மச்சம் இருக்கவே கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களால் ஒருபோதும் பணத்தை சேமிக்கவே முடியாது. நினைத்த செல்வத்தையும், வாழ்க்கையையும் அடைய இவர்களுக்கு பல தடைகள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளும், பணபரச்சினைகளும் இவர்களை விட்டு எப்பொழுதும் விலகாது.

இடது கன்னம்

இடது கன்னத்தில் மச்சம் இருப்பது நல்லதா அல்லது கெட்டதா என்று கூறுவது மிகவும் கடினம். ஏனெனில் இவர்களுக்கு பல வழிகளில் பணம் வந்து சேரும். ஆனால் இவர்களால் அதனை ஒருபோதும் சேமிக்க இயலாது. வரவிற்கு மேல் செலவுகள் இவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.

உதடுகளுக்கு கீழ்

உதடுகளுக்கு கீழ் மச்சம் இருக்கவே கூடாது. ஏனெனில் இவர்கள் எப்பொழுதும் பணம் செல்வழிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதனால் பணப்பிரச்சினைகள் என்பது இவர்களை விட்டு பிரியாத ஒன்றாகும்.

இடது உள்ளங்கை

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் தங்களுடைய வாலிப பருவம் முழுவதும் கடுமையான பணநெருக்கடியை சந்திப்பார்கள். அதற்கு பிறகு பணப்பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் இருப்பினும் இவர்களால் செலவினங்களை தவிர்க்க முடியாது.

இடது கால்

இடது காலில் எங்கு மச்சம் இருந்தாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உங்களின் பணம் எப்படி செலவாகிறது என்பதை உங்களாலேயே உணரமுடியாது. நீங்கள் எவ்வளவுதான் சேமிக்க முயற்சி செய்தாலும் உங்களுடைய பணக்கஷ்டம் ஒருபோதும் உங்களை விட்டு நீங்காது.

சுட்டு விரல்

ஆள்க்காட்டி விரலின் உட்புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சிலசமயம் மிகவும் மோசமான சூழ்நிலைகளை கூட சந்திக்க வேண்டியிருக்கும்.

குருமேடு

உங்களின் குருமேட்டில் அடர்த்தியான மச்சம் ஒன்று இருந்தால் பணத்தால் உங்களுக்கு பாதகமான சூழ்நிலைகள் அடிக்கடி வரும். அதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுபவர்களுடன் எப்போதும் நல்லுறவை வளர்த்து கொள்வது நல்லது. உங்களின் குடும்பம் செல்வச்செழிப்புடன் இருந்தாலும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்பொழுதும் சிரமங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.

இடது புருவத்தில்

உங்கள் இடது புருவத்தின் பின்புறத்திலோ அல்லது மறைவாகவோ உங்களுக்கு ஒரு மச்சம் இருந்தால் பாலியல் விஷயங்களில் நீங்கள் மிகவும் பலவீனமாக இருப்பீர்கள். உங்களின் பாலியல் ஆசைகளுக்காக நீங்கள் அதிக பணத்தை செலவிடுவீர்கள். உங்களை பிடித்திருக்கும் காமப்பேராசை உங்களின் செல்வம் முழுவதையும் அழிக்கும்.

இடது அக்குள்

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் அவர்கள் ஆரோக்கியம் குறித்து அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இவர்களின் வருமானமும், சேமிப்பும் பெரும்பாலும் சிகிச்சைக்காகவும், மருத்துவர்களுக்காகவுமே தீர்ந்து போய்விடும்.

%d bloggers like this: