டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்

தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இந்த லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தேனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

போட்டி இல்லை

இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் தங்க தமிழ்செல்வன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் இவர் அங்குதான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

அதிமுக வேட்பாளர்

லோக்சபா தேர்தலில் தேனியில் அதிமுக சார்பாக ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இவருக்கு தற்போது ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தேனி ஓ.பன்னீர்செல்வமின் சட்டமன்ற தொகுதி என்பதால் அங்கு அவரின் மகன் ரவீந்திரநாத் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.

எதிர்போட்டி

இந்த நிலையில்தான் அதே தொகுதியில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டு உள்ளார். நேரடியாக ஓ.பி.எஸ் மகனை எதிர்த்து இவர் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் பல்வேறு திட்டங்களோடு தங்க தமிழ்ச்செல்வனை இங்கு களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது

என்ன திட்டம்

ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் இடையே நிகழ்ந்து வரும் மோதல் என்பது அரசியல் வட்டாரங்களில் எல்லோருக்கும் தெரிந்தது. இந்த நிலையில்தான் நேரடியாக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்க்க மிக வலிமையான வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனை டிடிவி களமிறக்கி இருக்கிறார் என்கிறார்கள். எப்படியாவது ரவீந்திரநாத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் டாஸ்க் என்றும் கூறுகிறார்கள்.

%d bloggers like this: