அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?
தி.மு.க., தலைவர்கள் பலரை, ஏன் இந்துக்களுக்குப் பிடிக்கவில்லை’ என்று, என் நண்பர் ஒருவரை கேட்டேன். ‘இந்துக்களை திட்டுவது தான் மத சார்பின்மை என, அவர்கள் நினைப்பதால், பிடிக்கவில்லை’ என்றார் அவர். உண்மைதான்.
மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது, குல்லா அணிந்து, நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு, ‘போஸ்’ கொடுக்கிறார் ஸ்டாலின். கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும், ஏன், ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்; விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமா… அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு?
நின்றுபோன சேமிப்பு… முதலீடு… காப்பீடு… புத்துயிர் தரும் வழிகள்!
ஒருவர் செய்யும் சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் அனைத்தும் முறையாகத் தொடரப்பட வேண்டும். ஆனால், நம்மில் பலர், இதைப் பின்பற்றுவதே இல்லை. அதனால், இன்றைய நிலையில் ஏராளமான சேமிப்புகளும், முதலீடுகளும், காப்பீடுகளும் முடங்கிப்போயிருக்கின்றன. குறிப்பாக, காலாவதியான எண்டோவ்மென்ட் பாலிசிகளின் எண்ணிக்கை அதிகம். இப்படித் தொடர முடியாமல்போனால், அதற்குப் பொருளாதாரரீதியான காரணங்கள் பல இருக்கலாம். முதல் காரணம், பணத்தை நிர்வகிப்பதில் இருக்கும் ஒழுங்கீனம்தான்.
டார்கெட் எட்டு… பணத்தைக் கொட்டு… பதறவைக்கும் 18
அப்பப்பா… கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பைவிட, தமிழகத்தில் எடப்பாடி முதல்வராகத் தொடருவாரா? என்பதற்கான தேர்தலாகவே இந்தத் தேர்தலைப் பார்க்கிறார்கள்” என்றபடி வியர்வை சொட்ட வந்த கழுகாருக்கு, ஜில்லென்று ஐஸ் மோர் கொடுத்தோம்.
“திரும்பவும் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?”
“ஆமாம்! கோட்டை முழுவதும் அந்தப் பேச்சுதான் பலமாக இருக்கிறது. மே மாதத்துக்குமேல் இந்த ஆட்சி நீடிக்குமா… அல்லது புதிய முதல்வர் பதவி ஏற்பாரா… என்கிற சந்தேகம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பலமாக உள்ளது. மூத்த அமைச்சர்கள் பலரும் இந்த ஆட்சி முழுமையாக நீடிக்கும் என்று சொல்லிவந்தாலும் அவர்களில் பலரே கிடைத்தவரை லாபம் என்று இருப்பதைச் சுருட்டிக்கொண்டிருக்கிறார்களாம்.”
“தெளிவாகச் சொல்லும்…