ஆஹா.. சரத்குமாருக்கு இந்தப் பதவி காத்திருக்காம்.. இதுதான் ரகசிய டீலாம்!
கூட்டணி சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் முடிந்த பின்னர் அதிமுக கூட்டணிக்கு வந்து சேர்ந்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு ராஜ்யசபா பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதாம்.
பிரசவத்திற்குப் பின் பெண்கள் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
குழந்தை பெற்றெடுத்த அம்மாக்கள் 10 மாத போராட்டத்திற்குப் பிறகு உடல் மற்றும் மனதளவில் சோர்ந்து காணப்படுவார்கள். அவர்களுக்கு சரியான உடல் பராமரிப்பு அவசியம். குறிப்பாக உடல் களைப்பை போக்க உடற் பயிற்ச்சிகள் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
முகத்தை ஜொலிக்கச் செய்யும் கற்றாழை ஜெல்… வீட்டிலேயே தயாரிக்கலாம்…!
கற்றாழை எந்தவித பராமரிப்புகளுமின்றி தானாக வளரக் கூடியது. ஆனால் அதன் பலன் என்பது அளப்பரியது. உடல் ஆரோக்கியம் தொடங்கி சரும ஆரோக்கியம் வரை காப்பதில் கற்றாழை சிறந்த பங்காற்றுகிறது
<!–more–>
.
இதனால்தான் மூலிகை மருத்துவர்கள் வீட்டில் கற்றாழை வளருங்கள் என அறிவுறுத்துகின்றனர். அப்படி உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் முக அழகைப் பராமரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கற்றாழை ஜெல் என கடைகளில் விற்பதை வாங்குவதைக் காட்டிலும் ஆர்கானிக் முறையில் வீட்டில் நீங்களே தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
கற்றாழை இலை – 2
வைட்டமின் C ஆயில் -500 மில்லி கிராம்
வைட்டமின் E ஆயில் – 400 மில்லி மீட்டர்
செய்முறை :
கற்றழைத் தோலை சீவி அதில் உள்ள சதைப் பகுதிகளை மேசைக் கரண்டி வைத்து மழித்து எடுங்கள்.
அந்த ஜெல்லை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியான பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள்.
அதோடு வைட்டமின் C மற்றும் வைட்டமின் E ஆயிலை குறிப்பிட்ட அளவில் ஊற்றி அதையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவே..! அழகை பளபளக்கச் செய்யும் கற்றாழை ஜெல் தயார்.
இதை ஃபிரிஜ்ஜில் வைத்து 1 அல்லது 2 மாதங்கள் பயன்படுத்தலாம்