Daily Archives: மார்ச் 28th, 2019

கட்டுக்கட்டாய் பணம்… ‘ஹவாலா’ தி.மு.க… ‘ஆம்னி பஸ்’ அ.தி.மு.க!

வியர்க்க… விறுவிறுக்க… வெயிலில் வந்த கழுகாருக்கு, மண்பானைத் தண்ணீர் கொடுத்தோம். சுவைத்துக் குடித்த கழுகார், “தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. மின்வெட்டும் ரெடியாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக இதெல்லாம் விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகப் பதறிப்போய் பல வேலைகளையும் செய்துகொண்டுள்ளது ஆளுங்கட்சி. அதாவது, பிரச்னைகள் ஏதும் வெடித்து விடாமல் அணைபோட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும், தேர்தலுக்கு மறுநாளே அந்த அணை உடைந்துவிடும்” என்றபடி நம் கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.
‘‘ஆளும்கட்சி கூட்டணியின் தேர்தல் வேலைகள் எப்படிப் போகின்றன?’’

Continue reading →

பேட்ட’ பராக்…? பா.ஜ., – அ.தி.மு.க., பகீரத முயற்சி

அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, நடிகர் ரஜினியை பேச வைக்க, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., சார்பில், முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளன. பல தரப்பில் இருந்தும் அழுத்தம் வருவதால், ‘வாய்ஸ்’ கொடுக்க, ரஜினி சம்மதம் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினரிடம் மட்டுமின்றி, அவரது ரசிகர்களிடமும் உருவாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., பொதுத்தேர்தலை சந்திக்கிறது. ஆட்சி மீதுள்ள அதிருப்தி, கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல், மக்களை கவரும் தலைவர் இல்லாமை போன்ற காரணங்களால், தனித்து போட்டியிட்டால், வெற்றி எட்டாக்கனியாகி விடும் என்பதை, அ.தி.மு.க., தலைமை உணர்ந்தது.

Continue reading →

இருவரில் யார் வீழ்ந்தாலும் சிக்கல்தான்!’ – சொந்தத் தொகுதியில் போராடும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

எடப்பாடி, ஓமலூர், சேலம் தெற்கு ஆகிய 3 தொகுதிகளைத்தான் சவால் நிறைந்ததாகப் பார்க்கின்றனர் தி.மு.க-வினர். எடப்பாடி, ஓமலூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு இணையாக வாக்குகளை வாங்கிவிட்டாலே தி.மு.க-வின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

`இருவரில் யார் வீழ்ந்தாலும் சிக்கல்தான்!' - சொந்தத் தொகுதியில் போராடும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

சேலம், தேனி ஆகிய தொகுதிகளின் வெற்றியை தங்களுடைய கௌரவமாக பார்க்கத் தொடங்கிவிட்டனர் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும். `கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் எனத் தேர்தல் பார்ப்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரு தரப்பினரும் பணத்தை வாரியிறைக்கின்றனர்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

ரூ1,000 கோடியில் நம் Facebook Instagram-ஐ கண்காணிக்க தனி algorithm..! வருமான வரித்துறை அதிரடி..!

பிக் டேட்டா என்றால் என்ன..?

ஒரு சாதாரண மனிதனின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துமே பிக் டேட்டா தான். காலையில் எத்தனை மணிக்கு பல் துலக்குகிறீர்கள், எத்தனை மணிக்கு குளிக்கிறீர்கள், எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது, எத்தனை இட்லி சாப்பிடுகிறீர்கள் என நமக்கு சில்லறை விஷயமாக தோன்றும் அனைத்துமே பிக் டேட்டா தான். சரி இந்த பிக் டேட்டாக்களை எங்கு சென்று திரட்டப் போகிறார்கள்.

Continue reading →

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… வாக்கு வங்கி அரசியல், இந்த தேசத்தின் சாபக்கேடு!

ஏதோ ஒரு காரணத்துக்காக முன்பு எல்லா திட்டங்களுக்கும் அனுமதி கொடுத்த ஆண்ட கட்சிகள் இப்போது அவற்றை எல்லாம் அனுமதிக்க மாட்டோம் என வாக்கு வங்கி அரசியலுக்காக மாற்றி மாற்றி பேசுகிறார்கள். இந்த வாக்கு வங்கி அரசியல்தான் இந்த தேசத்தின் சாபக்கேடு.

Continue reading →

மீன், சிக்கன், இறைச்சி- இவற்றில் எது ஆரோக்கியமானது? எதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படாது?

அசைவமா? சைவமா?

பெரும்பாலும் சைவ உணவுகளை சாப்பிடுவதால் எந்த வித பிரச்சினைகளும் உடலில் ஏற்படாது. சில சமயங்களில் ஒவ்வாமை மட்டுமே ஏற்பட கூடும்.

ஆனால், இதற்கு எதிர்மாறானது அசைவ உணவுகள். அசைவ உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் முதல் உடல் எடை கூடும் பிரச்சினை வரை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

Continue reading →

டான்சில் கற்களை ஒரே வாரத்துல கரைக்கணுமா? இத தினம் கொஞ்சம் சாப்பிட்டுட்டு வாங்க…

அறிகுறிகள்

டான்சில் கற்கள் பற்றி இதற்கு முன்னர் கேள்விப்பட்டதுண்டா? இது பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற கற்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, வாயிலிருந்து வெளியேற்றப்படாமல் இருக்கும் நச்சுகள் கால்சிய கூறுகளாக மாறி கடினத்தன்மை பெறும் நிலை தான் இந்த டான்சில் கற்கள் ஆகும். வாய் துர்நாற்றம், தொண்டை வறட்சி, காது வலி, தொண்டை வீக்கம், விழுங்குவதில் சிரமம் போன்றவை இந்த பாதிப்பின் சில அறிகுறிகளாகும்.

பூண்டு

Continue reading →