பேட்ட’ பராக்…? பா.ஜ., – அ.தி.மு.க., பகீரத முயற்சி

அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, நடிகர் ரஜினியை பேச வைக்க, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., சார்பில், முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளன. பல தரப்பில் இருந்தும் அழுத்தம் வருவதால், ‘வாய்ஸ்’ கொடுக்க, ரஜினி சம்மதம் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினரிடம் மட்டுமின்றி, அவரது ரசிகர்களிடமும் உருவாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., பொதுத்தேர்தலை சந்திக்கிறது. ஆட்சி மீதுள்ள அதிருப்தி, கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல், மக்களை கவரும் தலைவர் இல்லாமை போன்ற காரணங்களால், தனித்து போட்டியிட்டால், வெற்றி எட்டாக்கனியாகி விடும் என்பதை, அ.தி.மு.க., தலைமை உணர்ந்தது.

அதன் காரணமாக, தி.மு.க., கூட்டணிக்கு, கடும் சவால் கொடுக்கும் வகையில், பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., – புதிய தமிழகம் – புதிய நீதிக் கட்சி – த.மா.கா., – என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளை இணைத்து, அ.தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. எனினும், கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பு

ஏற்படவில்லை. அ.தி.மு.க., சார்பில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் தனித்தனியே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும், திறந்த வேனில் நின்றபடி, பிரசாரம் செய்து வருகின்றனர்.
பா.ம.க., நிறுவனர்ராமதாஸ், தே.மு.தி.க., பொரு ளாளர் பிரேமலதா தவிர, கூட்டணியில் உள்ள, மற்ற கட்சி தலைவர்கள் யாரும், பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தமிழக, பா.ஜ., தலைவர்கள், அவர்களுக்கான தொகுதியில் ஒதுங்கி விட்டனர். பிரதமர் மற்றும் பா.ஜ., தேசிய தலைவர்களின் பிரசார தேதி, இன்னும் முடிவாகவில்லை. தற்போதைய நிலையில், அ.தி.மு.க., கூட்டணி பிரசாரம், ‘டல்’ அடித்து வருகிறது.
இதே நிலை நீடித்தால், வெற்றிக்கு சிக்கல் ஏற்படும். எனவே, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, நடிகர் ரஜினி பேசினால், வெற்றி எளிதாக இருக்கும் என்ற கருத்து, கூட்டணியில் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பா.ஜ., தரப்பில், ரஜினியிடம் பேச்சு நடந்து வருகிறது. ரஜினிக்கு வேண்டிய சில பிர முகர்கள், ரஜினிக்கு நெருக்கமான, பா.ஜ., அமைச்சர் கள், அ.தி.மு.க., அமைச்சர்கள் என, பல தரப்பிலும், ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிப்போருக்கு, ஓட்டளிக்கும்படி, ரசிகர்களிடம், ரஜினி கூறியிருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நதி நீர் இணைப்புக்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வின் கூடுதல் தேர்தல்

அறிக்கையிலும், ‘காவிரி – கோதாவரி இணைப்பு, விரைவில் செயல்படுத் தப்படும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதர வாக, ‘வாய்ஸ்’ கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
நேரடியாக, ஆதரவு தெரிவிக்கா விட்டாலும், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நதி நீர் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டதை வரவேற்றோ, பிரதமர் மோடியை ஆதரித்தோ பேசும்படி, ‘ஐடியா’ கொடுத்து உள்ளனர். அவர், இன்னமும் இசைவு தெரிவிக்கவில்லை.
‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும்’ என்ற பழமொழிக்கேற்ப, பல தரப்பிலும் இருந்து நெருக்கடிகள் கொடுத்து, தேர்தல் நெருக்கத்தில், ரஜினி ஆதரவை பெற்று விட லாம் என்ற நம்பிக்கையில், பா.ஜ., – அ.தி.மு.க., நிர்வாகிகள், பகீரத முயற்சி மேற்கொண்டு உள்ளனர். –

%d bloggers like this: