ஒரு தலைவன் உருவாக அவனது கிரகங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும்! ஜோதிடரின் ஷார்ப் கணிப்பு!

நமது நாட்டில் பல கோடிக்கணக்கில் பணம் வைத்து இருப்பவர் தொழிலதிபதிபர்கள் எல்லாம் அரசியில் இறங்கி தலைவன் ஆக முடியவில்லை. ஆனால் அரசியல் கட்சி தலைவன் எல்லாம் பின்புலத்தில் தொழில் அதிபராக இருக்கிறார்கள்.

சந்து பொந்து விடாமல் கட்சி கொடிகள் கட்சி தலைவர்கள் ஈசல் போல் குவிந்து கிடக்கிறார்கள் அதே ஈசல் போல் முளைத்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள் அரசியல் பொது வாழ்வு என தங்களுடைய ஆயுளை தொலைத்த தலைவர்கள் பலர் உண்டு. நமது உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அது போல்ல தான் சிறு கூட்டம் என்றாலும் சரி பெரும் கூட்டம் என்றாலும் சரி தலைவன் என்பவன் முக்கிய முதன்மை நபராக இருக்கிறார்

ஜாதிக்கு ஒரு தலைவன் மதத்திற்கு ஒரு தலைவன் இனத்திற்கு ஒரு தலைவன் கட்சிக்கு ஒரு தலைவன் ஊர்க்கு பஞ்சாயத்துக்கு ஒரு தலைவன் தொழிற்சங்கத்துக்கு ஒரு தலைவன் கமிட்டிக்கு ஒரு தலைவன் ஏரியவுக்கு ஒரு தலைவன் காலனிக்கு என தலைவன் படைக்கு ஒரு தலைவன் இப்படி திரும்பிய இடமெல்லாம் தலைவர்கள் அலும்பு தாங்க முடியாதபடி இருந்தாலும் இப்படி ஏகத்துக்கும் தலைவர்கள் உருவாக ஜோதிடத்தில் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்

தலைவன் உருவாகும் கிரகங்கள்

சூரியன்: அரசு அதிகார வர்க்க IAS IPS நீதிபதி ராணுவ அதிகாரி போன்ற துறை சார்ந்த தலைவனைசூரியன் உருவாக்கிறது.

சந்திரன்: பொதுமக்கள் திரட்டி மக்களால் தேர்ந்து எடுக்கும் தலைவனுக்கு சந்திரனே காரணம்

செவ்வாய்: சிறு குறு பெரு தொழிற்சங்கம் தலைவன் போலீஸ் ராணுவ தளபதி போன்ற துறைகளில் தலைவனை உருவாக்க செவ்வாய் காரணமாக உள்ளார்.

புதன் : சிறு குறு பெரு வியாபார சங்கத் தலைவன். மார்கெட் கமிஷன் ஏஜெண்ட் சங்கத் தலைவனை வருவாக்கி தருகிறது புதன்

குரு: பிராமண சங்கம் வங்கி, பைனான்சியர் மடம் சாமியார் மடம் கோவில் அறங்காவலர் கல்வி காலேஜ் டிரஸ்ட் போன்ற இனங்களில் தலைவனை உருவாக்கி தருகிறது குரு

சுக்ரன் : பெண்கள் நடத்தும் அனைத்து சங்கம் . சினிமா கலை இலக்கிய துறை சார்ந்த தலைவனை உருவாக்க சுக்ரனே காரணமாக உள்ளார்.

சனி.. : ஜாதி சங்க தலைவன், ஜாதி கட்சி தலைவன் வாகன போக்குவரத்து துறை ரயில்வே சங்க தலைவனை உருவாக்க சனியே காரணமாக உள்ளார்.

ராகு : திருடர்கள், கொள்ளையர்கள் தாதா தீவிரவாதி கூட்டத்திற்கு தலைவனை உருவாக்க ராகுவே காரணமாக உள்ளார்.

கேது : ஆகோரி ஆன்மீக கூட்டத்தின் தலைவன் தெய்வீக மற்றும் மாய மந்திர வித்தைகளின் கூட்டத் தலைவனை உருவாக்கி தருகிறது கேது

மேற்கண்ட கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் தொடர்பு இருந்தால் அந்த துறைகளில் அவர் தலைவன் என்று பெயர் எடுப்பார்.

தலைவனுக்குரிய தகுதியை தரும் கிரகங்கள்

சூரியன் : ஆளுமை திறன் . கட்டுப் கோப்பான வழி நடத்தும் ஆற்றல்

சந்திரன்: பொதுமக்கள் வசியம் மனத்திடம்

செவ்வாய் : வீரியம் மிக்க ஆற்றல் ரத்த பாய்ச்சல் தலைவன் பேச்சு ரத்தத்தில் கலப்பது

குரு : மறதி இல்லாத ஞானம். அறிவுத்திறன் . ராஜ விசுவாசம் ராஜ ரகசியங்களை காப்பது.

சனி.: ஆண்டான் அடிமை தலைவனுக்காக உயிரை கொடுப்பதும் தற்கொலை செய்வதும்.

இந்த 5 கிரகங்கள் உங்களது ஜாதகத்தில் லக்னம் 5, 7, 9.11. ஆகிய பாவங்களில் ஆட்சி உச்சம் நட்பு நிலைகளில் நின்று இருந்தால் அவர் தான் மாஸ் தலைவன் என்கிற பெருமைக்குரியவர்

ஒருவரது ஜாதகத்தில் குறைந்த பட்சம் நான்கு கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் அவர் தான் உலகம் போற்றும் உத்தம தலைவன்.

%d bloggers like this: