தேர்தல்.. தமிழகத்தில் எங்கு அதிக பேர் போட்டி.. எத்தனை பெண்கள் போட்டி.. ஆச்சர்ய புள்ளிவிவரம்!

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு தமிழகம் மிக வேகமாக தயாராகிவிட்டது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.39 மக்களவைத் தொகுதிகளில் 1596 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதில் 9 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மீதமுள்ளதில் 845 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 742 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

பாலினம் எப்படி

தமிழகத்தில் இரண்டு தேர்தலுக்கும் சேர்த்து ஆண்கள் 1414 பேரும், பெண்கள் 171 பேரும், திருநங்கை 2 பேரும், வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 779 பேரும், பெண்கள் 69 பேரும், திருநங்கை ஒருவரும் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்

எங்கு அதிகம்

அதிகமாக லோக்சபா தேர்தலில் காஞ்சிபுரம் மற்றும் மத்திய சென்னையில் 11 பேர் போட்டியிடுகின்றனர். தென்சென்னையில் 40 பேர் போட்டியிடுகின்றனர். கரூரில் அதிகபட்சமாக 42 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: