Daily Archives: மார்ச் 30th, 2019

உதயா’ வளர்ச்சிக்கு உதவலாம்… உதயசூரியன் வளர்ச்சிக்கு உதவுமா?

தி.மு.க., தேர்தல் வரலாற்றில், இரண்டாம் கட்ட தலைவர்கள், தமிழகம் தழுவிய அளவில் பிரசாரத்துக்கு வராத தேர்தலாக, இந்த லோக்சபா தேர்தல் இருக்கிறது என்ற விமர்சனங்கள், அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.

கருணாநிதி இருந்தவரை, தமிழகம் தழுவிய தேர்தல் பிரசார பயணத்துக்கு அவர் செல்வதோடு, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், பல்வேறு தொகுதிகளுக்கு சென்று, பிரசாரம் செய்வர். ஒரே சமயத்தில், தி.மு.க., மேல்மட்ட தலைவர்களின் தேர்தல் பிரசாரம் பல்வேறு தொகுதிகளில் நடக்கும். இதன்

Continue reading →

கனிமொழி முன்னிலையிலேயே சண்டை; ரூ.5 கோடி டிமாண்ட்!’ – தெறிக்கவிடும் தூத்துக்குடி தி.மு.க

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வில் நடக்கும் கோஷ்டி சண்டையால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேர்தல் சமயத்தில் மாவட்ட நிர்வாகிகள் நடத்தும் ஈகோ யுத்தத்தைக் கனிமொழி உற்றுக் கவனித்து வருவதால், தேர்தலுக்குப் பின்னர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் எனக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

Continue reading →

எட்டுத் தொகுதிகளில் ரெட் அலர்ட்! – பி.பி ஏற்றும் போலீஸ் ரிப்போர்ட்

கோடைக்காலம் அல்லவா… இம்முறை கழுகாருக்கு இளநீரைக் கொடுத்துவிட்டு, ‘‘உம்மைக் குளிர்விப்பதே, உம்மிடம் உள்ள சூடானச் செய்திகளை வாங்கத்தான்’’ என்றோம். கழுகார், ‘‘நிறையவே இருக்கிறது. குறித்துக்கொள்ளும்’’ என்று தகவல்களைக் கொட்டினார்…
‘‘ஊடகம் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்புகளில், ஆளும் கூட்டணிக்கு எதிரான முடிவுகள் வருவதால் ஆளும்தரப்பு ‘அலர்ட்’ ஆகியிருக்கிறது. திட்டமிட்டதைவிட அதிகமான பணத்தை இறக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது!’’
‘‘அதுதான் ஆம்னி பஸ்களிலும், அதிகாரிகளின் வாகனங்களிலுமே பணம்போவதாக ஏற்கெனவே சொன்னீரே?’’

Continue reading →

கணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும்? அதில் என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும்?

கரண்டி நிலை (Spoon Position)

இளந்தம்பதியினர் பொதுவாக இந்நிலையில் தூங்குவர். இணையில் ஒருவர் பின்னே இன்னொருவர் நெருக்கமாக படுத்து

Continue reading →

இட்லி… அதானே எல்லாம்..!’- உலகம் கொண்டாடும் இட்லி தினம்

சர்வதேச இட்லி தினமான இன்று, பலரும் இட்லி குறித்தான தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இட்லி தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

<!–more–>

ரவா இட்லி, பொடி இட்லி, நெய் பொடி இட்லி, தட்டு இட்லி, தவா இட்லி, சாம்பார் இட்லி, மதுரை இட்லி, குஷ்பூ இட்லி, மல்லிபூ இட்லி என இட்லியைத் தான் இந்த உலகம் எப்படிக் கொண்டாடித் திளைக்கிறது? மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினமாகக் கொண்டாடப்படுவதை இந்தியர்கள் ட்விட்டரில் புகழ்ந்து வருகின்றனர்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான கால நேரங்களை இட்லிகள் தான் அலங்கரித்து வருகின்றன. காலை உணவுகளின் ராஜாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இட்லியின் பெருமைக்குக் கூடுதல் கவுரவம் சேர்க்கும் வகையில் இந்நாள் இட்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த இட்லி ஹோட்டல் நிறுவனரான இனியவன் என்பவரது முயற்சியால் உலக இட்லி தினம் கடந்த 30 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் ஸ்விகி நிறுவனம் நடத்திய ஆய்வில் இட்லியை ஆர்டர் செய்து சாப்பிடுவதில் பெங்களூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது. முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்கள் உள்ளன.

சர்வதேச அளவில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ, லண்டன் மற்றும் நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்கள் இட்லி சாப்பிடுவதில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

ஒரு குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்?

குழந்தைக்கு சர்க்கரை நோய்

இரண்டாவது வகை இது பொதுவாக பெரியவர்களுக்கு மட்டும் உள்ளதாக, முன்பு கருதப்பட்டது. மாறிவருகிற பழக்க வழக்கங்களால் குழந்தைகளுக்கும் வருகிறது.

உங்கள் குழந்தைக்கு நீரழிவு நோய் இருப்பதை எவ்வாறு கண்டறிவது?

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 29.03.2019

ராங் கால் – நக்கீரன் 29.03.2019

Continue reading →