பெண்களை பொறுத்தவரை இந்த 7 குணங்கள் இருக்கும் ஆண்கள்தான் காதல் மன்னர்களாம் தெரியுமா?

பெண்களின் எதிர்பார்ப்பு

ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனெனில் ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதனை சரியாக புரிந்து கொள்ளாததால்தான் பெரும்பாலான ஒருதலை காதல்கள் தோல்வியிலேயே முடிகிறது. பொதுவாக பெண்கள் பணக்கார ஆண்களைத்தான் விரும்புவார்கள், அழகான ஆண்களைத்தான் விரும்புவார்கள் என்று கூறுவார்கள். அதனை முழுவதுமாக மறுக்க முடியாது என்றாலும் முழுமையாக

ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஏனெனில் அதற்க்கு விதிவிலக்கான பெண்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். சமீபத்தில் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் எப்படிப்பட்ட பெண்ணை ஆணை விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பணிவானவர்கள் Vs. அழகான நபர்கள்

பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின்படி உண்மையில் அனைத்து பெண்களும் கமல், அஜித், ஷாருக்கான் போன்ற அழகான ஆண்களை விரும்புவதில்லை. கவர்ச்சிகரமான ஆண்கள் பெண்களை கவரலாம் ஆனால் உண்மையில் பெண்கள் காதலிக்க பணிவான, கருணைமிக்க மற்றும் நகைச்சுவை உணர்வுமிக்க சுமாரான ஆண்களையே விரும்புகிறார்கள்.

குறைபாடு இல்லாத ஆண்கள்

பெரும்பாலான ஆண்கள் பெண்கள் எப்பொழுதும் உடல் அளவில் அழகாக இருக்கும் ஆண்களிடம் எளிதில் விழுந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. ஏனெனில் 72 சதவீத பெண்கள் தனக்கு சரியான ஆண்களை உடல் அளவை பார்த்து தேர்வு செய்வதில்லை என்று கூறியுள்ளனர். பெண்களை ஈர்க்கும் ஆண்களின் உடலமைப்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

உயரம் Vs. குள்ளம்

ஆண்களின் உயரத்தை பொறுத்தவரையில் பெண்களுக்கு பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆண்களின் தன்னம்பிக்கையே பெண்களை அதிகம் ஈர்க்கிறதாம். சொல்லப்போனால் தான் பாதுகாப்பாய் உணரும் ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். பொதுவாக நீண்டகால உறவுகளுக்கு பெண்கள் தேர்வு செய்வது நடுத்தர உயரம் உள்ள ஆண்களைத்தான். சில பெண்களுக்கு உயரமான ஆண்களை பிடிக்கலாம், ஆனால் பெரும்பாலான ஆண்களின் தேர்வு நடுத்தர உயரமுள்ள ஆண்களைத்தான்.

கட்டுமஸ்தான Vs. வலிமையானவர்கள்

வலிமையான ஆண்கள் அனைவரும் கட்டுமஸ்த்தாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பெண்கள் எப்பொழுதும் கட்டுமஸ்தான ஆண்களை விட வலிமையான ஆண்களையே விரும்புகிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் கட்டுமஸ்தான ஆண்களை ஒருசில பெண்களை தவிர யாருமே விரும்புவதில்லை. பெண்களின் பார்வையில் வலிமைக்கும், கட்டுமஸ்தான உடலுக்கும் சம்பந்தமில்லை.

பணக்காரர் Vs. மிடில் கிளாஸ்

ஒவ்வொரு வெற்றிபெற்ற ஆணுக்கும் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவார்கள். இப்பொழுதும் பெண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பது உண்மைதான். பொதுவாக பணக்கார ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று அவர்கள் மீது பழிசுமத்தினாலும், அது முற்றிலுமான உண்மையாக இருப்பதில்லை. பணக்கார ஆண்கள், மிடில் கிளாஸ் ஆண்கள் மற்றும் ஏழை ஆண்களை பொறுத்தவரையில் பெண்களின் அதிக ஒட்டு விழுவது மிடில் கிளாஸ் ஆண்களுக்குத்தான். தனது துணையின் முன்னேற்றத்தில் துணை நிற்க பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.

சிடுமூஞ்சி Vs. நகைச்சுவையாளர்கள்

ஆணின் இதயத்தை தொடுவதற்கான வழி வயிறு என்றால், பெண்ணின் இதயத்தை தொடுவதற்கான வழி நகைச்சுவை ஆகும். இன்றைய காலத்தில் பெண்கள் அலுவலகம் முதல் படுக்கையறை வரை அனைத்திலும் மேலாதிக்கம் செலுத்தினாலும் அவர்களை எளிதில் கரைக்கும் செயல் நகைச்சுவை ஆகும். மோசமான ஒரு நாளிலிருந்து ஒரு பெண்ணை வெளியே கொண்டுவந்து சிரிக்க வைக்கமுடியுமெனில் அந்த ஆண்கள் உறவில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

பணத்திற்கு முக்கியத்துவம் Vs. படைப்பாற்றல்

பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் மற்றும் படைப்பாற்றல் இருக்கும் ஆண்கள் என இருவரிடமும் பழகினர். அவர் பழகி பார்த்த பிறகு பெரும்பாலான பெண்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்களை விட படைப்பாற்றல் அதிகம் இருக்கும் ஆண்களையே அதிகம் விரும்புவதாக கூறுகிறார்கள். வெகுசில பெண்கள் மட்டுமே பணத்தை சேமிக்கும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்களை விரும்புகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.

தாடி இல்லாத ஆண்கள் Vs. தாடி இருக்கும் ஆண்கள்

தாடி இல்லாத ஆண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் பெண்களை கவருவதில் தாடி இருக்கும் ஆண்கள் ஒரு படி மேலே இருக்கிறார்கள். இந்த ஆய்வின் போது தெரிந்த தகவல் என்னவெனில் பெண்கள் சாக்லேட் பாய்களை விட தாடி வைத்து கடுமையாக இருக்கும் ஆண்கள் பெண்களை அதிகம் தவறுகிறார்கள். பெண்களை பொறுத்தவரை தாடி என்பது பொறுமை, முதிர்ச்சி, உணர்ச்சி போன்றவற்றின் அடையாளமாகும்.

%d bloggers like this: