Advertisements

மோடியும் முன்ஜாமின் முகமூடிகளும்!

கொளுத்தும் கோடை வெயிலையும் தோற்கடிக்கும் வகையில், லோக்சபா தேர்தல் பிரசாரம், நாடு முழுவதும் சூடுபிடித்து அனல் பறக்கிறது. தப்பித் தவறி கூட, மோடி மீண்டும் அரியணை ஏறி விடக்கூடாது என்பதற்காக, எதிரணியினர் ஏகத்துக்கும்

குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்; அதில், ‘ரபேலும்’ ஒன்று.

இவற்றுக்கெல்லாம் பதிலடியாக, ‘ஜாமின்’ குடும்பம் என, காங்., தலைவர் ராகுலையும், அவர் தாய் சோனியாவையும், மேடை தோறும் வறுத்தெடுத்து வருகிறார், பிரதமர் நரேந்திர மோடி.இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த அளவிற்கு உண்மையென சிறிது ஆராய்வோம்…’நேஷனல் ஹெரால்டு’ வழக்கில், காங்., தலைவர், ராகுலும், அவரது தாய் சோனியாவும் கைது நடவடிக்கையில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில், கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றுள்ளனர்.லண்டனில், 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா மற்றும் மனோஜ் அரோரா மீது, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், சில தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதால்,

வாத்ராவுக்கு பிரதிபலனாக சொத்துக்கள் வாங்கி தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வழக்கில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி, கோர்ட்டில் முன் ஜாமின் பெற்று, வெளியே தைரியமாக உலாவுகிறார் ராபர்ட் வாத்ரா.

காங்., தலைவர் குடும்பத்தின் நிலை தான் இப்படி என்றால், காங்.,கின் இரண்டாம் கட்ட தலைவரான, தமிழகத்தைச் சேர்ந்த, ‘மாஜி’ நிதி அமைச்சர் சிதம்பரத்தின் நிலையோ, பரிதாபமாக இருக்கிறது. ‘ஐ.என்.எக்ஸ்., மீடியா’ ஊழல் வழக்கில் சிக்கி, திக்கு முக்காடி வருகிறார். இவர், இதற்கு முன் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு, அன்னிய முதலீட்டு ஊக்கு விப்பு வாரியம், ஒப்புதல் வழங்கியது. ஆனால், அதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. இருவரும் இவ்வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ளனர். தந்தையும், மகனும் மட்டுமல்ல, தாய் நளினியும் வழக்கு சிக்கலில் மாட்டியுள்ளார். சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு, இவரும் முன் ஜாமினில் உள்ளார்.

இப்படி, முன்ஜாமின்காரர்கள் பட்டியலில், காங்., தலைவர்கள் குடும்பம் இடம் பிடித்து விட்ட நிலையில், தமிழகத்தின் அதன் கூட்டணிக் கட்சியான, தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் பலரும், அந்த பெருமைக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றனர். ‘2ஜி’ வழக்கில், கருணாநிதியின் மகள் கனிமொழி,

Advertisements
%d bloggers like this: