நல்லா தூங்குவீங்களா.. தூங்கிட்டே இருப்பீங்களா?.. அப்படின்னா இந்த வேலைக்கு நீங்கதாங்க பெஸ்ட்!

ஐயோ கடவுளே எழுந்திருக்கணுமா? இன்னும் கொஞ்சம் நேரம் தூக்கட்டுமா? எல்லா நாளும் ஞாயிற்றுகிழமையா இருக்கக் கூடாதா? என்று புலம்புவரா நீங்கள் அப்படின்னா நீங்கதான் 100% இந்த வேலைக்குத் தகுதியானவர்.

அப்படியென்ன வேலை என்கிறீர்களா? எந்த வேலையும் செய்யாமல் சும்மா 60 நாள் தூங்கினால் போதுமாம். அமெரிக்க விண்வெளி நிறுவனமும் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் இணைந்து, செயற்கை புவியீர்ப்பு விசை உள்ள இடத்தில் தூக்கம் வருவது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

விண்வெளியில் செயற்கை புவியீர்ப்பு விசை, விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்கு எந்த அளவு உதவும் என்று தெரிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளபடுவதாகவும் கூறியுள்ளது. மேலும் செயற்கையாக புவியீர்ப்பு விசையை உருவாக்குவதன் மூலம் பல நன்மைகளை அடைய முடியும். இது பல ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் பயனாக இருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

யாரெல்லாம் தேவை?

24 முதல் 55 வயதுடைய 12 ஆண்கள், 12 பெண்கள் இதில் ஈடுபடுத்த உள்ளதாகவும், அவர்கள் படுத்த படுக்கையில் 60 நாட்களுக்கு எதுவும் செய்ய கூடாது என்றும், இதற்காக 18,500 டாலர்களை சம்பளமாக கொடுக்கும் என்றும் கூறியுள்ளது. இது இதிய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 13 லட்சமாகும். படுத்த படுக்கையில் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறி தனமாக இருப்பவர்களே இந்த வேலைக்கு முதல் தகுதியானவர்கள் என்கிறது நாசா.

எங்கு நடக்கிறது?

நாசா மேற்கொள்ளவிருக்கும் இந்த ஆராய்ச்சி ஜெர்மனில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடக்க உள்ளது. தூங்குவது மட்டுமல்லாமல், ஒய்வு, உணவு, குளியல் என அனைத்துமே படுத்த படுக்கையிலேயே செய்ய வேண்டும் என்பதே நாசாவின் ஒரே கண்டி கண்டிசன் என கூறியுள்ளது. இந்த ஆராய்ச்சி நடைபெறும் போது அவர்களின் தசைபலம், இதயத்தின் செயல்பாடு, அறிவாற்றல், உடல் சமன்பாடு, ஆகியவற்றை தொடர்ந்து கவனிக்கப்படும். பங்கேற்பாளர்களில் பாதிபேர் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

உடலியல் வேறுபாடுகள்

இந்த இரண்டு குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கவனித்து செயற்கையான புவியீர்ப்பு விசை எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பதை உறுதி செய்வார்கள். விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால் எடையிழப்பது போன்ற உணர்வு எந்த வித தாக்கத்தை எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை இதன் மூலம் அறிய முடியும். இதன் மூலம் பூமியில் இருக்கும் புவியீர்ப்பு விசை இருப்பது போலாவே செயற்கையாக உருவாக்குவதற்கு இது உறுதுணையாக இருக்கும் என்று நாசாவின் தலைமை மனித ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி தலைமை அதிகாரி லெடிசியா வெகா தெரிவித்துள்ளார்.

விண்வெளி வீரர்கள் மேற்கொள்ளும் பிரச்சனைகள்

விண்வெளி வீரர்கள் ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் இருக்கும்பொழுது உடல் ரீதியாக ஏற்படும் பல பிரச்சனைகளை மேற்கொள்கின்றன. குறிப்பாக உடல் எடை இல்லாதது போன்று தோன்றுவதால் அவரிகளின் தசை மண்டலம் வலுவிலக்கச் செய்கிறது. மேலும் ஒரே அறையில் ஒரே நபருடன் பல நாட்கள் வேலை செய்வதாய் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.

தனிமை உணர்வு

இதனால் மன அழுத்தம் தனிமையுணர்வு இது எல்லாவற்றையும் விட காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சாலும் பெரும் பிரச்சனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பல பிரச்சனைகளை குறைப்பதற்காகவே நாசா இந்த ஆராய்ச்சியை நடத்துவதாகவும், இந்த ஆராய்ச்சி வெற்றியடையும் பட்சத்தில் விண்வெளி வீரர்கள் இன்னும் சுதந்திரமாக விண்வெளியில் வேலை செய்ய முடியும் என்கின்றனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.

%d bloggers like this: