இந்த வாரம் அப்ளை செய்ய வேண்டிய அரசு பணிகள்!

அரசு வேலைக்குப் போக வேண்டும் என அதற்காக தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் மூன்று முக்கிய வேலைகளுக்கு அப்ளை செய்ய வேண்டும்.

1. RRB Group D 2019

இந்தியா முழுக்க இருக்கும் 1,03,769 காலியிடங்களை நிரப்புகிறது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்.

கடந்த மாதம் 12-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஏப்ரல் 12, 2019.

தகுதி

இதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதற்கு விண்ணப்பிக்க //www.rrbchennai.gov.in/ தளத்தை அணுகவும்.

2. TNUSRB Recruitment 2019

தமிழ்நாடு யூனிஃபார்ம்டு சர்வீஸ் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 8826 கான்ஸ்டபிள் பணிகளுக்கான காலியிடங்கள் இருப்பதாக சென்ற மாதம் 8-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

இதற்கு ஏப்ரல் 8, 2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி

விண்ணப்பதாரர்கள் குறைந்தப் பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதற்கு விண்ணப்பிக்க //www.tnusrbonline.org/ என்ற தளத்தை விசிட் செய்யவும்.

3. TCIL Recruitment 2019

டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட், டெல்லியில் அசிஸ்டெண்ட் மற்றும் ஜே.இ பணிகளுக்கான காலியிடங்களை அறிவித்திருக்கிறது.

மொத்தம் 28 காலியிடங்களைக் கொண்டுள்ள இந்தப் பணிக்கு, ஏப்ரல் 11, 2019 தான் விண்ணப்பிக்கக் கடைசி தேதி.

இதற்கு விண்ணப்பிக்கவும், மேலும் விபரங்களுக்கும் //www.tcil-india.com/ தளத்தை அணுகவும்!

%d bloggers like this: