Advertisements

சென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ!

கறுப்புக்கண்ணாடியுடன் வந்த கழுகார், ‘‘வெயில் கொளுத்துகிறது. பிரசாரம் இப்போதுதான் சூடு பிடித்துள்ளது’’ என்றபடி நேரடியாக விஷயத்துக்கு வந்தார். 

‘‘எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின் பிரசாரங்கள் எப்படிப்போகின்றன?’’
“இருவரும் ஒருவரை ஒருவர் போட்டுத் தாக்குகிறார்கள். கொடநாடு, பொள்ளாச்சி விவகாரத்தைவைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஸ்டாலின் அஸ்திரம் வீசுகிறார். சாதிக்பாட்ஷா மனைவி மீதான தாக்குதல், பிரியாணிக் கடை சூறை போன்றவற்றைப் பேசி, பதிலடி தருகிறார் எடப்பாடி. சென்னையில் மர்மமான முறையில் இறந்துபோன தி.மு.க மகளிரணி பொறுப்பிலிருந்த கே.கே.நகர் பால்மலர் விவகாரம், சபரீசனுக்கும் போலி மருந்து வியாபாரிகளுக்கும் இருந்த தொடர்புகள் என்று சில விஷயங்களை எடுத்துவிட்டுத் தேர்தல் களத்தில் அனல் கிளப்பப் போகிறதாம் ஆளும்கட்சி.’’
‘‘மக்கள் ஆதரவு எப்படியிருக்கிறது?’’

‘‘பிரசாரத்துக்குப் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக உளவுத்துறை சொல்லியிருப்பது எடப்பாடி தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ‘மோடிக்கு எதிரான சிறுபான்மையினர் ஓட்டுகளை தினகரன் பிரித்துவிடுவார்’ என்றும் எடப்பாடி கணக்குபோடுகிறார். அதேபோல், ‘கடைசி கட்டத்தில் தி.மு.க தரப்பு பணம்கொடுப்பதைத் தடுக்க, வருமானவரித் துறை மற்றும் பறக்கும் படையை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்’ என்பதில் ஆளும்தரப்பு உறுதியாக உள்ளது. தூத்துக்குடியில் அமித் ஷாவிடம் இதை சூசகமாக எடப்பாடி சொல்ல… அவரும் ஆமோதித்து விட்டாராம்!’’

‘‘அப்படியானால், ஆளும்கட்சி தரப்பில் மட்டும் பணம் கொடுக்கப்படுமா?’’
‘‘அதற்குத்தான் வாய்ப்பு அதிகம்… பணப் பட்டுவாடாவைத் தடுப்பது மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இரண்டு நாள்கள் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதி நேரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் வரவில்லை. தேர்தல் ஆணையர்களான அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் சென்னை, ஐ.டி.சி ஹோட்டலில், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள்’’
‘‘கட்சியினர் என்ன சொன்னார்களாம்?’’
‘‘தி.மு.க சார்பில் ஆர்.எஸ் பாரதி, என்.ஆர் இளங்கோ பேசும்போது, ‘அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்குத் தொகுதிகளின் இடைத்தேர்தலை உடனடியாக நடத்துங்கள். எதிர்க்கட்சியினர்மீது மட்டுமே வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், தமிழக அரசின் இலவசக் காப்பீடு திட்டப் பயனாளிகளின் வீடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி படத்துடன் காப்பீடு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்று சொன்னவர்கள், அதற்கான வீடியோ ஆதாரத்தையும் காண்பித்துள் ளனர். மேலும், ‘துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டில் உள்நோக்கம் இருக்கிறது’ என்றும் புகார் சொல்லியிருக்கிறார்கள்.”
“ஓஹோ”
“இன்னும் இருக்கிறது கேளும்… ‘வேலூரில் பிடிபட்ட தாக வீடியோவில் காட்டப் பட்டப் பணத்தில், கோவை பகுதியின் வார்டு எண் உள்ளது. சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்து, வேலூரில் வைத்து வீடியோ எடுத்து விட்டார்கள். தமிழகத்தில் தேர்தலுக்கு முன் மாற்றம் செய்யவேண்டிய பல அதிகாரி களை இடமாற்றம் செய்ய வில்லை. குறிப்பாக உள்ளாட்சித் துறையில் இருக்கும் பாஸ்கர் என்ற அதிகாரிமீது பல புகார்கள் இருந்தும் மாற்றவில்லை’ என்று வரிசையாகப் புகார் வாசித்துள்ளார்கள். அதுபற்றித் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவிடம் தேர்தல் ஆணையர்கள் விளக்கம் கேட்க அவர் ஏதோ சொல்லி மழுப்பி விட்டாராம். காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன், ‘தேர்தல் நேரத்தில் பிரச்னை என்று போன் செய்தால், தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் போனையே எடுப்பதில்லை’ என்று சொல்ல, டெல்லி அதிகாரிகள் சாகுவைப் பார்க்க, அவர் மெளனம் சாதித்திருக்கிறார்!’’

‘‘அ.தி.மு.க தரப்பில் என்ன சொன்னார்களாம்?’’
‘‘அமைச்சர் ஜெயக்குமார், ஜே.சி.டி பிரபாகரன், பாபுமுருகவேல் ஆகியோர் சந்தித்திருக்கிறார்கள். வருமானவரித் துறை பறிமுதல் செய்துள்ள பணத்தைவைத்து அது எந்த வங்கியிலிருந்து யார் பெயரில் எடுக்கப்பட்டது, எதற்காக எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘வேலூர் விவகாரத்தில் உண்மையை விசாரித்துச் சட்டத்தில் இடம் இருந்தால் தி.மு.க வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற அணுகுண்டையும் போட்டு விட்டு வந்துள்ளார்கள்’’
‘‘எல்லாம் சரி… வாக்காளர் களுக்குப் பணப் பட்டுவாடா எப்போது ஆரம்பிக்கிறது?’’
‘‘ஏப்ரல் 12 அல்லது 13-ல் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். அதற்குள் எத்தனைக் களேபரங்கள் நடக்குமோ?’’ என்ற கழுகார், சிறகுகளை விரித்துப் பறந்தார்.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை, ப.சிதம்பரம் தலைமையிலான குழு செய்துமுடித்துள்ளது. இதில் கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் ராஜிவ் கவுடா என்பவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவரான அவர், பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த நண்பர்கள் குழுவை ஆறு மாதங்களுக்கு முன்பே அழைத்துவந்து தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு மாநிலமாக இந்தக் குழு சுற்றுப்பயணம் செய்து, இறுதியாக இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளது. தேர்தல் அறிக்கைக்கு நல்ல வரவேற்பு என்பதால், அதைத் தயாரித்தக் குழுவுக்கு ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விருந்தும் அளித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: