விபரீத ராஜயோகம் என்றால் என்ன? அது யாருக்கெல்லாம் வாய்க்கும்?

மன்மோகன் சிங்குக்கு தனுசு லக்னமாகி, ஆறுக்குரிய சுக்கிரன், எட்டுக்குரிய சந்திரன், பன்னிரண்டாம் வீட்டுக்குரிய செவ்வாய் மூவரும் எட்டாமிடத்தில் இணைந்து அரசாளும் அமைப்பு என்று சொல்லக்கூடிய விபரீத ராஜயோகத்தைத் தந்தார்கள். அதனால் அரசனுக்கு நிகரான மிக உயரிய பிரதமர் பதவியை அடைந்தார்.

விபரீத ராஜயோகம் என்றால் என்ன? அது யாருக்கெல்லாம் வாய்க்கும்? #Astrology

”ராஜயோகம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்ல நிலையில் அமைந்திருக்கும்போது ஏற்படும்.  ஆனால், விபரீத ராஜயோகம் என்பது, எதிர்பாராத வழியில் ஒருவர் அதிகாரம் அல்லது  அந்தஸ்தை அடைவதைக் குறிக்கிறது. ‘விபரீதம்’ என்ற வார்த்தையே அதன் உள்ளர்த்தத்தை ஓரளவுக்கு விளங்க வைக்கும். முற்றிலும் எதிர்பாராத ஒரு நிலையில், சுலபமான வகையில் அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு மிகப் பெரிய அந்தஸ்து கிடைப்பது அல்லது அரசாளும் வாய்ப்பு கிடைப்பதே விபரீத ராஜயோகம்” என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.
விபரீத ராஜயோகம் பற்றி அவர் விரிவாகப் பேசினார்.

யோகம்

”யோகம் எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு, சேர்க்கை அல்லது இணைவு என்றுதான் பொருள். பெரும்பாலான நிலைகளில் இங்கே யோகம் என்றால் அதிர்ஷ்டம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ‘யோகம்’ என்ற வார்த்தை கிரகங்களின் ஒருவிதமான இணைவை மட்டுமே குறிக்கும். அதிர்ஷ்டத்தை அல்ல. ஒரு மனிதனுக்கு, தனி ஒரு கிரகம் மட்டும் எந்த ஒரு நன்மையையோ தீமையையோ தந்து விடுவதில்லை. ஒரு சம்பவம் அல்லது செயல் என்பது கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையால் நடக்கின்ற ஒன்று. வானில் கிரகங்கள் நல்ல சுபத்துவ அமைப்பில் இணையும்போது பிறக்கும் ஒருவர், பூமியில் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கும் தகுதியைப் பெறுகிறார். இதே கிரகங்கள் பாவத்துவ நிலையில் சேரும்போது பிறக்கும் ஒருவர் எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையையே அடைகிறார்.

மன்மோகன் சிங்

ஜோதிடத்தில் ராஜயோகங்கள் என்று அடைமொழியிடப்பட்டு மிகச் சில அமைப்புகளை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். அவற்றில், ‘விபரீத ராஜயோகம்’ என்பது முக்கியமானது. விபரீத ராஜயோகம் என்பது முற்றிலும் எதிர்பாராத ஒரு நிலையில், சுலபமான வகையில் அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு மிகப் பெரிய அந்தஸ்து கிடைப்பது அல்லது அரசனாகும் அமைப்பு கிடைப்பதே விபரீத ராஜயோகம்.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், அரசனாகும் வாய்ப்புக்கு ஒருவர் காத்திருக்க, இடையில் புகுந்த இன்னொருவருக்கு யானை மாலை போடுவதைப் போன்றது இந்த யோகம்.

ராசிகள்

ஜோதிடத்தில் 6, 8, 12 – ம் பாவங்கள்  மறைவு ஸ்தானங்கள் எனப்படும் சாதகமற்ற வீடுகளாக சுட்டிக் காட்டப்படுகின்றன. பாதக வீடுகள் எனப்படும் இந்த 6, 8, 12 – ம் பாவங்களின் அதிபதிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து அல்லது மேற்கண்ட 6, 8, 12 – ம் வீடுகளுக்குள்ளேயே மாறி பரிவர்த்தனை நிலையில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகம். இந்த நிலையில், இவர்களில்  ஒருவர் கண்டிப்பாக ஆட்சி நிலையில் இருப்பார். இதுவே முழுமையான ராஜயோகம். விபரீத ராஜயோகத்தைத் தரும் நிலையில் கிரகங்கள் இணையும்போது அவர்களுடன் ராகு-கேது, சனி போன்ற அசுப கிரகங்கள் இணைவது யோக பங்கத்தைத் தரும். 

மன்மோகன் சிங் ஜாதகம்

ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் யோகங்கள் எல்லாமே, கிரகங்கள் பங்கமற்ற நிலையில் அமர்ந்திருக்கும்போது மட்டுமே அந்த யோகத்தை  அனுபவிக்கும் தகுதியைத் தரும். லக்னாதிபதியும் வலுவாக இருக்கும் நிலையில், ஒருவர் நிச்சயமாக யோகத்தை  அனுபவித்தே தீருவார். ஆதித்ய குருஜிமேற்கண்ட விபரீத ராஜயோக அமைப்புக்கு நம் அனைவருக்கும் தெரிந்த உதாரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைச் சொல்லலாம்.

மன்மோகன் சிங்குக்கு தனுசு லக்னமாகி, ஆறுக்குரிய சுக்கிரன், எட்டுக்குரிய சந்திரன், பன்னிரண்டாம் வீட்டுக்குரிய செவ்வாய் மூவரும் எட்டாமிடத்தில் இணைந்து அரசாளும் அமைப்பு என்று சொல்லக்கூடிய விபரீத ராஜயோகத்தைத் தந்தார்கள். அதனால் அரசனுக்கு நிகரான மிக உயரிய பிரதமர் பதவியை அடைந்தார்.
விபரீத ராஜ யோகத்துக்கு  உதாரணமாக மன்மோகன் சிங்கின் ஜாதகத்தைப் பார்த்து இதை அறியலாம்” என்கிறார் அவர்.

%d bloggers like this: