18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள்! – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்!

மீண்டும் மோடியா… ராகுல் காந்தியா’ என்பதைத் தீர்மானிக்கப்போகும் 17-வது நாடாளுமன்றத் தேர்தல், தேசம் முழுவதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இப்போது நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறும் 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, இந்த இடைத்தேர்தலை ‘மினி’ சட்டமன்றத் தேர்தல் என்றே வர்ணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 

இடைத்தேர்தலில் குறைந்தது எட்டு தொகுதிகளில் வெற்றிபெற்றாகவேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு. அவர்கள் அந்த எட்டிலும் வெற்றிபெறக் கூடாது என்கிற முனைப்பில் இருக்கிறது தி.மு.க. இன்னொரு பக்கம் தினகரனின் அ.ம.மு.க தீவிரமாக வேலை பார்க்கிறது. இப்படியான தேர்தல் களத்தில்,  மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ளக் களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம்.

இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். அடுத்து யார் முதல்வர், யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விகளை எழுப்பி, சின்னம் பொறித்த சர்வே படிவங்களை வாக்காளர்களிடம் அளித்துப் பூர்த்திசெய்யும் வழக்கமான சம்பிரதாயங்களை எல்லாம் உடைத்து, அறிவியல்பூர்வமான படிவத்தைத் தயார் செய்தோம். ஒன்பது கேள்விகளுடன் நுணுக்கமாக சர்வே படிவம் தயாரிக்கப்பட்டது.

 

ஒரு தொகுதிக்குச் சுமார் 600 நபர்களிடம் சர்வே எடுக்கத் தீர்மானித்தோம். இதற்காக விகடன் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 90 பேர் தொகுதிகளில் சர்வே பணியை மேற்கொண்டார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். தொகுதியின் புவியியல் அமைப்பு, எல்லைகள், ஊர்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தொகுதியின் முக்கியமான ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயணித்தது சர்வே டீம்.

ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், இளைஞர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் எனப் பல தரப்பினரும் பங்குபெறும் வகையில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. 18 தொகுதிகளில் மொத்தமாக 10,472 பேரைச் சந்தித்தது ஜூ.வி டீம். சர்வேயில் பங்கேற்றவர்களிடம் செல்போன் எண்கள் பெறப்பட்டன. சர்வே பணி முடிந்து, கணக்கிடும் பணியை மேற்கொண்டபோது, நூறு நபர்களுக்கு பத்து நபர்கள் வீதம் சர்வேயில் பங்கு பெற்ற வாக்காளர்களிடம் பேசி, அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்பினார்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. சர்வே படிவங்களை ஆய்வு செய்தபோது அவற்றில் 899 படிவங்கள் செல்லாதவை என்று கண்டறியப்பட்டன. அவற்றை ஒதுக்கிவிட்டு, 9,573 படிவங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டோம்.

 

சில தொகுதிகளில் தினகரனின் அ.ம.மு.க., அ.தி.மு.க-வின் வெற்றியைப் பறிக்கிறது. தேனி எம்.பி தொகுதிக்குள் வரும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபைத் தொகுதிகளில் அ.ம.மு.க-வின் தாக்கம் அதிகம். அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும் தொகுதிகளில்கூட அ.ம.மு.க ஆதிக்கத்தால் தோல்வியைத் தழுவலாம். தி.மு.க வெற்றிபெற முடியாத தொகுதிகளில்கூட அக்கட்சி வெற்றிபெறுவதற்கு அ.ம.மு.க காரணமாக அமையலாம். பரமக்குடி தொகுதியில், கமல்ஹாசனுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.

மார்ச் இறுதியில்தான் சர்வே பணியை மேற்கொண்டோம். அப்போதையசூழலில் மக்களின் மனநிலையை இந்தக் கருத்துக்கணிப்பு பிரதிபலிக்கிறது. நமது கருத்துக்கணிப்புக்குப் பிறகு, பிரசாரம் மிகத் தீவிரமாக நடக்க ஆரம்பித்திருக்கிறது. எட்டுத்திக்கிலும் பாயத் தொடங்கியிருக்கிறது பணம். கருத்துக்கணிப்புக்கும் வாக்குப்பதிவுக்கும் இடைப்பட்ட 15 நாள்களில் கள நிலவரத்தை இதுபோன்ற காரணிகள் தீர்மானிக்கலாம். அது கணிப்புகளையும் புரட்டிப்போடலாம்.

இதோ… 18 தொகுதிகளின் சர்வே ரிசல்ட் இங்கே அணிவகுக்கின்றன!

– சர்வே டீம்.


தி.மு.க-வில் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க-வில் வைத்தியநாதன், அ.ம.மு.க-வில் டி.ஏ.ஏழுமலை போட்டியிடுகிறார்கள். வைத்தியநாதன் ஏற்கெனவே பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றியதால், தொகுதியில் நன்கு அறிமுகம் உண்டு. மத்திய, மாநில அரசுகளின்மீதான அதிருப்தி மக்கள் மத்தியில் கடுமையாக உள்ளது. பிரசாரத்தில் தி.மு.க-வினர் தீயாக வேலைசெய்கிறார்கள். ஏற்கெனவே எம்.பி-யாக இருந்ததால், கிருஷ்ணசாமிக்கு தொகுதியில் அறிமுகம் தேவையில்லை. பூந்தமல்லியில் சூரியனுக்கே வெற்றி.


.தி.மு.க-வில் ஆர்.எஸ்.ராஜேஷ், தி.மு.க-வில் ஆர்.டி.சேகர், அ.ம.மு.க-வில் வெற்றிவேல், ம.நீ.ம-த்தில் பிரியதர்ஷினி போட்டியிடுகின்றனர். ஆர்.டி.சேகரின் வெற்றிக்காக சேகர்பாபு தீவிரமாக வேலை பார்க்கிறார். ரயில்வே யூனியன் கண்ணையா தரப்பினர் வாக்குசேகரிப்பும் தி.மு.க-வுக்கு ப்ளஸ். எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆர்.டி சேகர் ஒடிக்கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு இங்கு பரவலான செல்வாக்கு உண்டு. தி.மு.க ஓங்கியிருக்கிறது.


தி.மு.க-வில் இதயவர்மன், அ.தி.மு.க-வில் எஸ்.ஆறுமுகம், அ.ம.மு.க-வில் கோதண்டபாணி போட்டியிடுகின்றனர். தொகுதியில் வன்னியர், பட்டியல் சமூகத்தினர் அதிகம். இதயவர்மன் செலவுகளில் தாராளம் காட்டுகிறார். சொந்தக் கட்சியில் நடக்கும் உள்ளடி வேலைகள் இவருக்கு மைனஸ். அ.தி.மு.க வேட்பாளர் ஆறுமுகத்துக்கு திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் உள்ள பா.ம.க வாக்குகள் பெரும் பலம். தி.மு.க முந்துகிறது.


அ.தி.மு.க-வில் வெங்குப்பட்டு சம்பத், தி.மு.க-வில் அசோகன், அ.ம.மு.க-வில் மணி போட்டியிடுகிறார்கள். வன்னியர், முதலியார் சமூக வாக்குகள்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும். சம்பத் வன்னியர் என்பதுவும், பா.ம.க கைகோத்திருப்பதுவும் ப்ளஸ். அசோகனும் மணியும் முதலியார் என்பதால், அந்தச் சமூக வாக்குகள் பிளவுபடலாம். அரக்கோணம் எம்.பி தொகுதியின் காஸ்ட்லி வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சோளிங்கரை ஸ்பெஷலாகக் கவனிக்கிறார். அ.தி.மு.க வாக்குகளை ஓரளவுக்குப் பிரித்து அ.ம.மு.க சவால் கொடுக்கும். இங்கே உதயசூரியனுக்கு ஆதரவு அதிகம்.


.தி.மு.க-வில் கஸ்பா மூர்த்தி, தி.மு.க-வில் காத்தவராயன், அ.ம.மு.க-வில் ஜெயந்தி பத்மநாபன் போட்டியிடுகிறார்கள். தனித்தொகுதி என்றாலும் இஸ்லாமியர், வன்னியர், முதலியார் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். கஸ்பா மூர்த்தி எளிமையானவர் என்பது ப்ளஸ். அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் குழிபறிப்பதும், பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்காததும் மைனஸ். ஜெயந்தி பத்மநாபன், ‘‘என் தோல்விபற்றிக் கவலை இல்லை. தி.மு.க வெற்றிக்கு, அ.ம.மு.க காரணமாக இருக்கும்’’ என்று சொல்லியிருப்பது, தி.மு.க-வுக்கு டபுள் ப்ளஸ்.


.தி.மு.க-வில் ஜோதிராமலிங்க ராஜா, தி.மு.க-வில் வில்வநாதன், அ.ம.மு.க-வில் பாலசுப்பிரமணி போட்டியிடுகிறார்கள். தலைமையிடத்தில் பிடிவாதம்பிடித்து ஜோதிராமலிங்க ராஜாவை, அமைச்சர் கே.சி.வீரமணி நிறுத்தியுள்ளார். சாதிரீதியான வாக்குகள் ஜோதிராமலிங்க ராஜாவுக்கு மைனஸ். வேலூர் எம்.பி தொகுதிக்குள்தான் ஆம்பூர் தொகுதி இருக்கிறது. மகனுக்காக துரைமுருகன் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார். கணிசமாக இருக்கும் இஸ்லாமியர் வாக்குகள் தி.மு.க-வுக்குச் செல்கிறது. தி.மு.க ஜெயிக்கும்.


தி.மு.க-வில் ஆ.மணி, அ.தி.மு.க-வில் கோவிந்தசாமி, அ.ம.மு.க-வில் டி.கே.ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர். முல்லைவேந்தன் தேர்தல் பணியில் ஒதுங்கியிருப்பது ஆ.மணிக்கு மைனஸ். முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் தனிப்பட்ட செல்வாக்கு டி.கே.ராஜேந்திரனுக்கு ப்ளஸ். கருத்துக் கணிப்பின்படி, அ.தி.மு.க. இங்கே ஒரு அடி முந்துகிறது. கடைசி நேரத்தில் அ.ம.மு.க தீவிரமாக வேலைப் பார்க்கலாம். நிலைமை அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கிறது.


தி.மு.க-வில் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க-வில் சம்பத்குமார், அ.ம.மு.க-வில் ஆர்.ஆர்.முருகன் போட்டியிடுகின்றனர். ஆளும்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, எட்டு வழிச்சாலை பாதிப்பு ஆகியவை கிருஷ்ணகுமாருக்கு ப்ளஸ். முல்லைவேந்தன் ஒதுங்கியிருப்பது மைனஸ். ஆர்.ஆர்.முருகன் கரன்ஸியை அள்ளிவிடுகிறார். முருகனின் பரிசுப் பெட்டி சின்னத்துக்கு அடுத்து, குக்கர் சின்னத்தில் இன்னொரு முருகன் போட்டியிடுவது அவருக்குப் பாதிப்பை உண்டாக்கலாம். இங்கு தி.மு.க-வுக்கே வெற்றி.


.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ தேன்மொழி சேகர், தி.மு.க-வில் செளந்தரபாண்டியன், அ.ம.மு.க-வில் தங்கதுரை போட்டியிடுகின்றனர். தேன்மொழி சேகருக்குத் தொகுதியில் நல்ல அறிமுகம் உண்டு. கடந்த முறை இரட்டை இலையில் ஜெயித்தவர் தங்கதுரை. இவர் டி.டி.வி தினகரனின் செல்வாக்கை மட்டுமே நம்பியிருக்கிறார். செளந்தரபாண்டியன் வழக்கறிஞர். இதே பகுதியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் வாக்குகள் பலமாக இருக்கின்றன. அ.தி.மு.க-வில் வாக்குகள் பிரிவது இவருக்குக் கூடுதல் பலம். இங்கு தி.மு.க-வுக்கே வெற்றி.


தி.மு.க-வில் டி.கே.ஜி நீலமேகம், அ.தி.மு.க-வில் காந்தி, அ.ம.மு.க-வில் ரெங்கசாமி போட்டியிடுகின்றனர். நீலமேகத்துக்குத் தொகுதியில் நல்ல அறிமுகம் உண்டு. ஸ்மார்ட் சிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார் அவர். காந்திக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாதது மைனஸ். ரெங்கசாமி, அமைதியானவர், நல்லவர் எனப் பெயரெடுத்திருக்கிறார். கடைசி நேரத்தில் ‘காந்தி’, ‘நோட்டை’ இறக்கப்போவதாகவும் தகவல். அ.ம.மு.க பிரிக்கும் ஓட்டுகள் தி.மு.க-வுக்குக் கூடுதல் பலம்.


அ.தி.மு.க-வில் ஜோதி, தி.மு.க-வில் எஸ்.ஏ.சத்யா, அ.ம.மு.க-வில் பெங்களூரு புகழேந்தி, ம.நீ.ம-த்தில் ஜெயபால் போட்டியிடுகின்றனர். மக்களுக்கான போராட்டத்தில் தன் கணவர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிபோனதாகச் சொல்லி வாக்குக்கேட்கிறார் ஜோதி. சத்யா முன்பு நகராட்சித் தலைவராக இருந்து செய்த பணிகள் வெகுவாகப் பேசப்படுகிறது. தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அவருக்குக் கூடுதல் பலம். அ.ம.மு.க-வை விடவும் ம.நீ.ம-த்துக்கு செல்வாக்கு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலை, தி.மு.க-வை வெற்றிபெற வைக்கும்.


.தி.மு.க-வில் நாகராஜன், தி.மு.க-வில் இலக்கியதாசன், அ.ம.மு.க-வில் மாரியப்பன் கென்னடி போட்டியிடுகிறார்கள். நாகராஜன் இளையான்குடி யூனியனில் நன்கு அறிமுகமானவர். இங்கே முஸ்லிம் வாக்காளர்கள்தான் அதிகம். அ.தி.மு.க-வுக்கு அவர்களின் வாக்குகள் கிடைப்பது சந்தேகமே. தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை பலமாக இருக்கின்றன. மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என அதிருப்தி நிலவுகிறது. இங்கு உதயசூரியனுக்கே வெற்றி.


தி.மு.க-வில் மகாராஜன், அ.தி.மு.க-வில் லோகிராஜன் அ.ம.மு.க-வில் வழக்கறிஞர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள். பட்டியல் சமூகத்தினர் மத்தியில் தினகரனுக்கு ஆதரவு இருக்கிறது. அ.தி.மு.க-வின் கோட்டை என்று சொல்லப்படும் ஆண்டிபட்டித் தொகுதியில் எம்.ஜி.ஆரின் வாக்குகள் பிரிவது உதயசூரியனுக்கு சாதகம். சர்வேயில் இரண்டாவது இடத்தில் அ.ம.மு.க இருக்கிறது. இங்கு எம்.ஜி.ஆரின் தொகுதி கருணாநிதியின் கட்சிக்குப் போகும்.


.தி.மு.க-வில் மயில்வேல், தி.மு.க-வில் சரவணக்குமார், அ.ம.மு.க-வில் முன்னாள் பெரியகுளம் எம்.எல்.ஏ-வான கதிர்காமு போட்டியிடுகிறார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் பெரியகுளம். ஆனால், அங்கு அவருக்கு அதிருப்தி அதிகம். தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் வேட்பாளருக்காகக் கடுமையாக வேலைசெய்கிறார்கள். அ.ம.மு.க-வுக்குப் பெரியகுளத்தில் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அ.தி.மு.க வாக்குகள் பிரிவதால் தி.மு.க-வுக்கே வெற்றி.


தி.மு.க-வில் வி.சீனிவாசன், அ.தி.மு.க-வில் ராஜவர்மன், அ.ம.மு.க-வில் எஸ்.ஜி சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்கள். மாதக்கணக்கில் வேலையில்லாமல் தவித்த பட்டாசுத் தொழிலாளர்கள் அ.தி.மு.க மீது பட்டாசாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள். ஆளும்கட்சிமீது  கடும் அதிருப்தி நிலவுகிறது. ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால், அந்த வாக்குகளுடன் பட்டாசுத் தொழிலாளர்களின் வாக்குகளையும் தி.மு.க பெறும். அ.தி.மு.க-வின் வாக்குகள் இரண்டாகப் பிரிந்துள்ளதால் சூரியனுக்கே வெற்றி.


.தி.மு.க-வில் சதன் பிரபாகர், தி.மு.க-வில் சம்பத்குமார், அ.ம.மு.க-வில் டாக்டர் முத்தையா, ம.நீ.ம-த்தில் சங்கர் போட்டியிடுகிறார்கள். கமல்ஹாசனின் சொந்த ஊரான இங்கு சங்கர் ஓரளவு வாக்குகளைப் பெறுவார். ஆளும்கட்சிமீதான அதிருப்தி, கம்யூனிஸ்ட் வாக்குவங்கி, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனின் பிரசாரம் ஆகியவை தி.மு.க-வுக்கு ப்ளஸ். முதலிடம் பிடிக்கிறது தி.மு.க.


.தி.மு.க-வில் சின்னப்பன், தி.மு.க-வில் ஜெயக்குமார், அ.ம.மு.க-வில் ஜோதிமணி போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காததால், போட்டி வேட்பாளராகக் குதித்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ-வான மார்கண்டேயன். ஆளும்கட்சிமீதான அதிருப்தியும் அ.தி.மு.க ஓட்டுகளின் பிளவும் ஜெயக்குமாருக்கு ப்ளஸ். கனிமொழி தூத்துக்குடி எம்.பி தொகுதியில் போட்டியிடுவதால் தி.மு.க-வினர் தீயாக வேலை பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வின் வாக்குகள் இங்கே மூன்றாகச் சிதறுவதால், தி.மு.க-வுக்கே வெற்றி.


டந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றிபெற்றார். இப்போது தி.மு.க-வில் பூண்டி கலைவாணன், அ.தி.மு.க-வில் ஜீவானந்தம், அ.ம.மு.க-வில் எஸ்.காமராஜ் போட்டியிடுகிறார்கள். பூண்டி கலைவாணன் தொகுதி மக்களுக்குப் பரிச்சயமானவர். ‘ஜீவானந்தம் அமைச்சராக இருந்தபோது சொந்த ஊரான நாகப்பட்டினத்துக்கே எதுவும் செய்யாதவர், திருவாரூருக்கு வந்து என்ன செய்யப்போகிறார்?’ என்கிற அதிருப்தி இவர்மீது இருக்கிறது. இங்கு தி.மு.க-வுக்கே வெற்றி.

%d bloggers like this: