ஃபேவரட் கலரில் பர்சனாலிட்டியைக் கண்டறிவது எப்படி?

வண்ணங்களே பிடிக்காது என்கிற நபர் இருக்க முடியுமா? அப்படி அவருக்கு குறிப்பிட்ட வண்ணம் பிடிக்கிறதெனில் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் தெரியுமா? ஆம். உங்களுக்கு பிடித்த நிறத்திற்கும் உங்கள் குணத்திற்கும் தொடர்பு உண்டு. சரியாக இருக்கிறதா என்பதை மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

<!–more–>

கருப்பு

கலைத்திறன் சார்ந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு கருப்பு மிகவும் பிடித்த நிறமாக இருக்கும். அவர்கள் மிகவும் மென்மையான குணம் படைத்தவர்கள். அதேசமயம் அவர்கள் பரந்தமனதுடன் இருக்கமாட்டார்கள். தனக்குள்ளேயே பல சிந்தனைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையை ரசித்து வாழ்வார்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கத்துடன் ரசிப்பார்கள். அதேபோல் அவர்களிடமிருந்து விஷயங்களை அவ்வளவு எளிதாக வாங்கிவிட முடியாது. தனக்கு மிகவும் நெருக்கமானவர்களைத் தவிற மற்றவர்களிடம் தன் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.

வெள்ளை

வெள்ளை நிறம் பிடித்தவர்கள் எப்போதும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். வாதிடும் பழக்கம் கொண்டவராக இருப்பார்கள். குழப்பமில்லாத தெளிவான சிந்தனை, தெளிவான முடிவுகளை எடுப்பார்கள்.

சிவப்பு

தனக்கு சிவப்பு மட்டுமே பிடிக்கும் என்பவர்கள் மிகவும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முழுமையானதாக இருக்கும். தன்னுடைய விடா முயற்சியால் வெற்றி காண்பார்கள். தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பார்கள்.

நீலம்

நீல நிறம்தான் எனக்கு பிடிக்கும் என அடம்பிடிப்பவர்கள் மிகவும் இலகிய மனம் படைத்தவர்கள். அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர். சுத்தத்தை முதன்மையாக நினைப்பவர். வேலை விஷயத்திலும் பர்ஃபெக்‌ஷனை எதிர்பார்ப்பார்கள். நிலையான குணம் கொண்டவராக இருப்பீர்கள்.

பச்சை

பாசக்காரப் பிள்ளை என மற்றவர்களால் பாராட்டுப் பெரும் குணம் கொண்டவர்களுக்கு பச்சை நிறம் மிகவும் பிடிக்கும். உண்மையாகவும், நேர்மையாகவும் மற்றவர்களிடம் வெளிப்படைத் தன்மையுடனும் பழகுவார்கள். மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும்.

மஞ்சள்

கற்றலில் ஆர்வம் அதிகம் கொண்டவரா நீங்கள், உங்களுக்கு மஞ்சள்தான் பிடிக்கும். புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருப்பீர்கள். மகிழ்ச்சி உங்கள் வாழ்கையில் எப்போதும் நிறைந்திருக்கும்.

மகிழ்ச்சியை எப்படி வரவைக்க வேண்டும் என்கிற ரகசியம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். பிரச்னைகள் வாழ்க்கையில் இருந்தாலும் சோர்ந்துவிடாமல் எதிர்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் காட்டிக்கொள்ளவே மாட்டீர்கள். பிரகாச முகத்துடனும், சிரிப்புடனுமே இருப்பீர்கள்.

ஊதா நிறம்

ஊதா நிறம் பிடித்தவர்கள் தனித்துவமானவராக இருப்பார்கள். கலை சார்ந்த ரசனை அதிகம். மற்றவர்களை மதிப்பதில் உங்களை மிஞ்ச யாருமில்லை. அதேசமயம் கோபம் வந்தால் அதை வெளிப்படுத்துவதிலும் உங்களை மிஞ்ச முடியாது.

பிரவுன்

பிரவுன் நிறத்தை முதன்மையாக விரும்புவோர் மற்றவர்களுக்கு நல்ல நண்பராக இருப்பார்கள். மற்றவர்களுடன் நம்பகமாக இருக்கவும், நம்பகத்தன்மை வளர்க்கவும் கடினமாக முயற்சி செய்வீர்கள். கடந்து போகக் கூடிய விஷயங்கள் மீது அத்தனை அக்கறை, கவனம் செலுத்த மாட்டீர்கள். நிலையான விஷயங்களை மட்டுமே விரும்புவீர்கள். அது உறவாக இருந்தாலும் நிலையானதாக நீடிக்க வேண்டும் என்பதைதான் விரும்புவீர்கள்.

%d bloggers like this: