அளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..?

எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்கும் பலசாலியாக நாம் இருந்தாலும், இந்த சளி தொல்லையை தீர்ப்பதில் நிச்சயம் தோற்று போவோம். உடலில் ஏற்படுகின்ற எண்ணற்ற பிரச்சினைகளை தீர்ப்பது நமக்கு சர்வ சாதாரணமான ஒன்று தான். என்றாலும் இந்த சளி தொல்லையை குணப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

சளி தொல்லையால் உடல் முழுக்க பலவித அபாயங்கள் பரவ கூடும். வெறும் சளி என்று மட்டும் இதை நினைத்து விடாதீர்கள். நாம் நினைப்பதை விடவும் இது மிக மோசமான விஷயமாக உள்ளது. நமக்கு தெரியாமலே சளி அதிக அளவில் உடலில் உற்பத்தி ஆகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

இதை நமது உடலில் உண்டாகின்ற சில அறிகுறிகளின் மூலமாக அறிய முடியும். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்தால் நுரையீரலில் ஏற்படுகின்ற பாதிப்புகளை தடுத்து, சுவாச கோளாறுகளில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சளி தொல்லை

பொதுவாக உடலில் எப்போதுமே இந்த சளி உருவாக்கி கொண்டே இருக்கும். ஆனால், இவற்றில் அளவும் வீரியமும் தான் மிக முக்கியம். சளியின் அளவும், அதன் கெட்டி தன்மையும் அதிகரித்தால் பல்வேறு பாதிப்புகள் இதனால் உண்டாகும்.

தொண்டை, மூக்கு, நுரையீரல், ஆகிய பகுதிகளில் தொற்றுகள் மற்றும் ஒவ்வாமையினால் இதன் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படும்.

வறண்ட தொண்டை

உங்களது தொண்டை பகுதி முற்றிலுமாக வறண்டு காணப்பட்டால் உடலில் அதிக அளவு சளி சேர்க்கிறது என அர்த்தமாம். இது நாளுக்கு நாள் அதிகமாகி உங்களது உடலை நேரடியாக பாதித்து விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, தொண்டை நீண்ட நாட்களாக வறட்சியாக இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

தலைவலி

பயங்கர தலைவலி ஏற்பட்டால் அதற்கும் சளி தொல்லைக்கும் தொடர்பு உண்டு. உங்களது தலையின் நடுப்பகுதியில் ஜெவ்வென்று இழுப்பது போன்ற உணர்வு இருந்தால் கட்டாயம் அதை பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள். இல்லையேல் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

நெஞ்சு

தூங்கும் போது பலருக்கும் இந்த உணர்வு ஏற்படுவதுண்டு. அதாவது, நெஞ்சு பகுதியில் கட்டியுள்ள சளியானது உங்களை தூங்கும் நேரத்திலும் மிக மோசமான விளைவை ஏற்படுத்த கூடும். பலருக்கு உஸ்..உஸ்.. என்கிற சத்தம் இரவு முழுவதும் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவ்வாறு இருந்தால் சளியில் அளவு அதிகமாக உள்ளது என அர்த்தமாம்.

MOST READ: வழுக்கையில் உடனே முடி வளர, வெங்காயத்த இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவங்க!

மூக்கு

மூக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சளியானது திரவ நிலையில் ஒழுகி கொண்டே இருந்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். உடலில் அதிக அளவில் சளி உற்பத்தியாவதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தீர்வு #1

சளியை விரைவாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி உள்ளது. இதற்கு தேவையான பொருட்கள் இதோ…

தேன் 1 ஸ்பூன்

பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 3 சொட்டுகள்

வெந்நீர் 1 கிளாஸ்

தயாரிப்பு முறை

வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பேக்கிங் சோடாவை கலந்து கொண்டு குடிக்கவும். இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் உள்ள சளி அனைத்துமே சீக்கிரமாக வெளியேறி விடும்.

தீர்வு #2

சளியை ஒழித்து கட்ட இந்த குறிப்பும் உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை…

தேன் 1 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் அரை ஸ்பூன்

அரிசி மாவு அரை ஸ்பூன்

மிக மெலிதான துணி 1

MOST READ: தும்பல் வந்தால் மூக்கை அடைக்காதீர்கள்! மீறி அடைத்தால் என்னென்ன அபாயங்கள் உண்டாகும் தெரியுமா?

செய்முறை

முதலில் தேன் மற்றும் அரசி மாவை கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணையை கலந்து கொண்டு மெலிதான துணியில் இதனை தடவி நெஞ்சு பகுதியில் இரவு முழுவதும் வைத்து கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சளி தொல்லை நீங்கி விடும்.

%d bloggers like this: