Advertisements

முக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கல்யாணமோ, பண்டிகையோ அதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்பிருந்தே பெண்கள் படிப்படியாகத் தங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும்.

வேலைகளை முடித்துவிட்டு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து தலைஉள்பட உடம்பு முழுவதும் நிதானமாக நன்றாக மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள். பிறகு இரண்டு முட்டையை எடுத்து அவற்றின்வெள்ளைக் கருவைத் தனியாகப் பிரித்து அடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து கருவோடு ஒரு டேபிள் ஸ்பூன் நீர் கலந்து, தலையில் தேய்த்து, நல்லஷாம்பூ கொண்டு கழுவிவிடுங்கள். ஒரு பெரிய கைக்குட்டையில் கால் கப்ஓட்ஸ் மீல், அரை கப் ஸ்டார்ச், அரை கப் பாலாடை உள்ள பால், அரை கப்பவுடர் பால் இட்டு முடிய வேண்டும். அந்த முடிப்பை உடல் முழுவதும்தேய்த்தால் உலர்ந்த சருமம் பளிச்சென்றாகும்.
மறுநாள் கை, கால்களை ப்யூமிங் கல் கொண்டு தேய்த்துச் சுத்தப்படுத்தவேண்டும். கை, கால்களை வெதுவெதுப்பான சோப் கலந்த நீரில் சற்றுநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு சுத்தமாகத் துடைத்துவிட்டு நகங்களைசீர்செய்து, விரும்பிய நிறத்தில் நக பாலிஷ் இடவும்.
மூன்றாவது நாள் முகத்தில் சிறிது பாலாடை அல்லது தரமான நர்ஷிங்கிரீம் கொண்டு மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீராவிபிடித்து மாஸ்க் போடவும். மாஸ்க்குகள் தற்போது கடைகளிலேயேகிடைக்கின்றன. வறண்ட சருமம் உடையவர்கள் முட்டையின் மஞ்சள் கரு, சிறிது தேன், கடலைமாவு ஆகியவற்றைக் கலந்து குழைத்துப் பூசலாம். எண்ணெய்ச் பசை சருமம் உடையவர்கள் முட்டையின் வெண்கருவையும்சிறிது எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து உபயோகிக்கலாம்.
நான்காவது நாளை, ஹென்னா எனப்படும் மருதாணி கொண்டுதலைமுடிக்குச் செழிப்பூட்டுவதற்கும், கை, கால்களில் உள்ள முடிகளைப்போக்குவதற்கும் (வாக்ஸிங் மூலம்) செலவிடலாம். மருதாணிப் பொடி, சிறிது தயிர், அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு, டீ டிக்காஷன் சிறிது, முட்டைஒன்று ஆகிய எல்லாவற்றையும் நன்கு கலந்து, தலையில் தேய்க்கவேண்டும். கடையில் கிடைக்கும் வாக்ஸை வாங்கி அதை முடி உள்ளஇடத்தில் பூசி, அதன் மேல் துணிப்பட்டையை அழுத்தி, எதிர்ப்புறமாய்இழுத்தால் அதனுடன் முடிகள் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.
ஐந்தாவது நாள் பண்டிகை, திருமணம் அல்லது வேறு விசேஷ நாள் அன்றுஉங்கள் வயது, நிறம், உடல்வாகு ஆகியவற்றிற்கு ஏற்ற உடைகள், நகைகள், ஹேர்ஸ்டைல், முக அலங்காரம் ஆகியன செய்து அழகாகத் தோற்றமளிக்கமுடியும்!
Advertisements
%d bloggers like this: