Advertisements

கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

வெயில் தாக்குதல் காரணமாக வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதனால் அடிக்கடி தாகம் எடுக்கும். போதிய தண்ணீர் குடிக்காமை, சிறுநீர் கழியாமல் அடக்கி வைத்தல் போன்றவை காரணமாக

சிறுநீர்ப்பையில் நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்குதல் ஏற்படலாம். இது பெரும்பாலும் பெண்களையும் சின்னப் பிள்ளைகளையுமே தாக்குகிறது.

சிறுநீர் கழியும்போது வலியும்வேதனையும் இருக்கும். சொட்டுச்சொட்டாக சிறுநீர் கழியும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம்வரும், ஆனால் வலியை நினைத்துதள்ளிப் போடுவார்கள். காய்ச்சல், குளிர், அடிவயிற்றில் வலி, சாப்பிடமுடியாமை, வாந்தி போன்றபிரச்னைகளும் உண்டாகலாம்.

இந்தப் பிரச்னையால்தாக்கப்பட்டவர்களுக்கு இளநீர், மோர், தண்ணீர், தண்ணீர் சத்து நிரம்பியகாய்கறிகள், பழங்கள்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

தினமும் இரண்டு முறை குளிப்பதும்பருத்தி போன்ற மென்மையானஆடை அணிவதும் இந்தப் பாதிப்புவராமல் காப்பாற்றும். கோடையில்நிறைய தண்ணீர் குடித்தால்தான்சிறுநீரகத்தைக் காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

Advertisements
%d bloggers like this: