Advertisements

Daily Archives: ஏப்ரல் 21st, 2019

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? 

மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம்.

Continue reading →

Advertisements

இதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்!

ரு வருடத்தில் பெரும்பாலான நாள்கள் நமக்கு வெயில் காலம்தான். என்றாலும், கோடைக்காலம் வரப்போகிறது என்றாலே சற்று அதிகம் கவலைப்படத் தொடங்கிவிடுவோம். `இந்த வருஷம் வெயில் அதிகமாக இருக்கும்னு சொல்றாங்க… அதனால கண்டிப்பா ஏ.சி வாங்கிரணும்’ என்பது போன்ற திட்டமிடல்கள் அதிகரிக்கும். ஆனால், பிற காலநிலைகளைப்போலவே கோடைக்காலமும் பூமிக்குத் தேவையாக இருக்கிறது. பொதுவாக, கோடைக்காலத்தில் அம்மை, கண்வலி போன்ற நோய்கள் பாதித்தால், அதிகமாக பயப்படுவோம். ஆனால் இயற்கை, இந்த வெயில் காலத்திலும் மனிதகுலத்துக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கத்தான் செய்கிறது.

Continue reading →

72% விலையா… அலையா?

வாக்குப்பதிவு, கடைசிக்கட்ட அக்கப்போர்கள் என்று நள்ளிரவைத் தாண்டியும் சுற்றிச்சுழன்ற கழுகார், பரிதி தோன்றும் வேளையில் படுசுறுசுறுப்புடன் அலுவலகம் வந்தமர்ந்தார். சுடச்சுட நாம் கொடுத்த ஃபில்டர் காபியை ருசித்துக் குடித்தவரிடம், ‘‘72 சதவிகித வாக்குப்பதிவுக் கணக்கைப் பார்த்தால் ஆளும்கட்சிக்கு எதிரான அலையாக இது இருக்குமோ?’’ என்றோம்.

 

பலமாகத் தலையாட்டியவர், ‘‘அலையா… விலையா… என்றுதான் அனைத்துக் கட்சிகளுமே குழம்பிக் கொண்டிருக்கின்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனாலும், தமிழகத்தில் வீசியதோ ‘லேடி’ அலை. அப்போது 73 சதவிகித வாக்குகள் பதிவாகின. இப்போது வாக்குப்பதிவு சதவிகிதத்தின் இறுதிகட்ட நிலவரம் இன்னமும் கிடைக்கவில்லை. என்றாலும் சுமார் 72 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. `இது, மோடிக்கு எதிரான அலையா, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிரான அலையா அல்லது வாரியிறைக்கப்பட்டதற்குக் கிடைத்த விலையா?’ என்று அ.தி.மு.க., தி.மு.க கூட்டணி என அனைவரையுமே குழப்பத்தில்தான் ஆழ்த்தி யுள்ளது.’’

Continue reading →

உடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்?!

கடல் அலைக்கும், கடற்கரைக்கும் இருக்கும் பிணைப்பை உடன்பிறப்புகளுக்கு உதாரணமாக சொல்லலாம். காதலர்கள் மட்டுமா கடல் அலைகளில் கால் நனைக்க தகுதியானவர்கள்? உடன் பிறப்புகளுடன் கடற்கரைக்கு… 

குழந்தைப் பருவத்தில் உடன் பிறந்தவர்களுடன் பயணிக்கும்போது சண்டைகளும் சச்சரவுகளுமே அதிகம் நிறைந்திருக்கும். ஆனால், இளமைப்பருவத்தில் மேற்கொள்ளும் பயணத்தின்போது உடன்பிறப்புகளுக்குள் பகிர்ந்துகொள்ள ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும். `மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது’போல,  `சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், அவர்களைவிடச் சிறந்த நட்பு இந்த உலகில் வேறில்லை’ என்பதும். நண்பர்களுடன் பயணிப்பது ஆனந்தம்தான். ஆனால் அண்ணனுடனோ, தங்கையுடனோ, தம்பியுடனோ பயணிக்கும்போது பாசமும், அக்கறையும், அன்பும், நட்பும் ஒருசேர வெளிப்படுவதை நம்மால் உணர முடியும்.

Continue reading →