உடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்!

உடல் வெப்பத்தை இயற்கை முறையில் தணிக்க முடியும். அதில் முக்கியமாக உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் வெப்பத்தை சீரான முறையில்

பராமரிக்க முடியும். அதிலும் தண்ணீரை மட்டும் தான் பருக வேண்டும் என்பதில்லை, குளிர்ச்சி தன்மை அதிகம் நிறைந்த பானங்களை பருகுவதன் மூலமும், உடல் வெப்பத்தை தணிக்க முடியும். சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய சில ஜூஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் குறைக்க முடியும்.

1.மோர்
மோர் உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் ஒன்று தான் மோர். இத்தகைய மோர் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இது செரிமான பிரச்சனையையும் சரிசெய்யும்.

2.இளநீர்

இளநீர் உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களுள் மிகவும் சக்தி வாய்ந்த பானம் என்றால் அது இளநீர் தான். எனவே தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இளநீரைப் பருகினால், நாளடைவில் உடல் வெப்பமானது சீராக இருக்கும்.

3.கரும்பு

கரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும்.

இதுமட்டுமல்லாது, மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.

குளுமைத்தன்மை கொண்டது உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

4.லஸ்ஸி.

அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பால், தயிர்,மோர் போன்றவற்றினால் மட்டுமல்ல தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதாலும் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.

உடனடியாக புத்துணர்சி அளிப்பதால் பலரும் லஸ்ஸியை விரும்பி குடிக்கிறார்கள். இதைத் தவிர லஸ்ஸி பல மருத்துவ பயன்களையும் தருகிறது. தயிருடன் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். சிலர் இதில் தேன், ஏலக்காய் உட்பட பல பொருட்களை மிக்ஸ் செய்தும் குடிக்கிறார்கள்.

5.தர்பூசணி

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.

தர்பூசணி விதைகளில் மிகவும் குறைவான கலோரி உள்ளது. மக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, புரதம், தாமிரம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன.

மக்னீசியம் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவும்; எலும்புகளின் அடர்த்தியைப் பாதிக்கும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற நோய்களுக்கு எதிராகப் போராடும்.

%d bloggers like this: