எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா?

எடை அதிகரிப்பு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. எடையை குறைப்பதற்கென்று பல வழிகளில் முயற்சித்தும் இறுதியில் தோல்வியடைந்து சோர்ந்து போனவர்களே அதிகம். அதிலும் கோடைகாலத்தில் உங்கள் எடையை குறைப்பது என்பது கடினமான ஒன்றாகும்.

கோடை காலத்தில் உங்கள் உடலில் இருக்கும் நீர்சத்துக்கள் பெரும்பாலும் வியர்வை வழியாக வெளியேறிவிடும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்போது எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமாகும். ஆனால் கோடைகாலத்தை சமாளிக்கவும், எடையை குறைக்கவும் ஒரே பழத்தை சாப்பிட்டால் போதும், அதுதான் அன்னாசி பழம். இந்த பதிவில் அன்னாசி பழம் எப்படி உங்கள் எடையை இயற்கையாக குறைக்க உதவுகிறது என்று பார்க்கலாம்.

நார்ச்சத்துக்கள்

அன்னாசி பழம் உங்களுடைய வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றதாகும். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இது செரிமானத்தை அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்படும் வயிற்று பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள அன்னாசி பழம் சிறந்த தேர்வாகும். உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் இது சிறந்த தேர்வாகும்.

மூட்டுவலி

வீக்கத்தை கட்டுப்படுத்தும் என்சைமான ப்ரோமெலின் அன்னாசி பழத்தில் அதிகம் இருப்பதால் அது மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது. மேலும் இந்த என்சைம் செரிமானத்தையும் ஊக்குவிக்கக்கூடும்.

கலோரிகள்

அன்னாசி பழத்தில் மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது கலோரிகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழம் உங்களுக்கு சிறந்த சுவையான எடை குறைக்கு உதவும் பொருளாக இருக்கும். எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த பழத்தை சாப்பிடுங்கள் வயிறும் நிறையும், கலோரிகளும் அதிகரிக்காது.

வைட்டமின் சி

அன்னாசி பழத்தில் நீங்கள் நினைப்பதை விட அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்றிகள் இருக்கிறது. வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இது இரண்டுமே மிகவும் அவசியமானதாகும். இவை இரண்டும் உங்கள் உடலில் இருக்கும் நச்சுப்பொருள்களை வெளியேற்றுவதில் முக்கியபங்கு வகிக்கிறது.

கார்போஹைட்ரேட்

அளவுக்கு மீறி சாப்பிடுவது என்பது அனைவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. அவ்வாறு அளவிற்கு மீறி சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இதில் அதிகளவு நல்ல கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது, இருப்பினும் கார்போஹட்ரேட்டை எப்பொழுதும் மிதமான அளவில் எடுத்து கொள்வதே நல்லது. குறிப்பாக எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

நீர்ச்சத்து

இது கோடைகாலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாகும், இது உங்களை உள்ளிருந்து குளிர்ச்சியாக உணரச்செய்யும். அன்னாசி பழத்தில் அதிகளவு நீர் உள்ளது, இது உங்கள் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். உடலில் நீர்சத்துக்கள் அதிகம் இருக்கும் போது எடையை குறைப்பது என்பது மிகவும் எளிதான ஒன்று. உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு டம்ளர் அன்னாசி பழ ஜூஸ் குடிப்பது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும். அன்னாசி பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை குறைத்து சருமத்தை பொலிவாக இருக்கவும் செய்யும்.

பசியை கட்டுப்படுத்தும்

அன்னாசி பழம் உங்கள் பசியை கட்டுப்படுத்தும் மற்றும் உங்களின் உணவுப்பழக்கத்தை குறைக்கும். ஆனால் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது ஏனெனில் இதில் அதிகளவு உள்ள ப்ரெக்டொஸ் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எந்த பழமாக இருந்தாலும் அதனை மிதமான அளவில் சாப்பிடுவதே நல்லது.

%d bloggers like this: