Daily Archives: ஏப்ரல் 24th, 2019

பிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்!

தமிழகம் முழுக்கப் பரவலாக மழை பெய்யக்கூடும்’ என்கிற வானிலை அறிக்கையின்படி, சென்னையிலும் கருமேகங்கள் திரண்டன. அதற்கு நடுவே குளுகுளுவென வந்திறங்கிய கழுகார், செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

“ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆடு – புலி அரசியல் சுறுசுறுவென அரங்கேற ஆரம்பித்துவிட்டது. மே 23-ம் தேதி மத்தியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கப் போவது யார் என்பதற்கான விடை தெரிந்துவிடும். தமிழக முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி நீடிக்கவேண்டும் என்றால், 10 எம்.எல்.ஏ-க்கள் கண்டிப்பாகத் தேவை. இதை எளிதில் எட்டிவிடலாம் என்று அ.தி.மு.க தரப்பு உறுதியாக நம்பிக் கொண்டிருக்க, ‘ஆட்சிக்குச் சிக்கல்’ என்று மத்திய உளவுத்துறை ‘நோட்’ போட்டிருப்பது, எடப்பாடி தரப்பை அப்செட் ஆக்கிவிட்டதாம்.’’

Continue reading →

சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்!

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. இது நமக்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உணர்த்துகிறது எனச் சொல்லலாம். வீட்டை வாங்கும்போது வெளிப்படை யாகத் தெரியும் கட்டணங்கள் குறித்து நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். குறைவான விலை, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் ஆகியவற்றை விளக்கமாகத் தெரிந்துவைத்திருக்கும் நாம், அத்தியாவசியமான பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்.

Continue reading →

கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன?!

ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை’ என்பார்கள். அதேபோல் மனிதர்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உடலமைப்பைக் கொண்டிருக்கிறார்கள். உயரம், குரல், எடை, தலைமுடி, நிறம் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் ஆரோக்கியமான நபர் என்பதை உருவத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லிவிட முடியாது. ஓரளவு கணிக்கலாம்… அவ்வளவுதான்! விஷயத்துக்கு வருவோம். Continue reading →

ஹெட்செட் பயன்படுத்துவோர் கவனத்துக்கு…

செல்போன் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டதைப் போலவே, ஹெட் செட்டும் அத்தியாவசியப் பொருளாக மாறி விட்டது. ஆனால், இத்தகைய அதீத பயன்பாடு காது கேளாமை பிரச்னையிலிருந்து உளவியல் ரீதியான பிரச்னைகள் வரை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் சத்யபாமாவிடம் இதுபற்றிக் கேட்டோம்…

Continue reading →