சன் கிளாஸ் – ஸ்டைலுக்கா… பாதுகாப்புக்கா?

ண்களைப் பாதுகாக்கக் கோடையில் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு, ‘சன் கிளாஸ்’தான். பல விலைகளில், பல தரங்களில் சன் கிளாஸ்கள் கிடைக்கின்றன. சாலையோரங்களில்கூட சிலர் கடைவிரித்து விற்பனைசெய்கிறார்கள். பெரும்பாலானோர் சைஸையும் கலரையும் பார்த்து வாங்கிவிடுவார்கள். 

‘‘சிலர், ஸ்டைலுக்காகச் சிறிய அளவு சன் கிளாஸ் வாங்குவார்கள். அது தவறு. சூரிய ஓளியிலிருந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் இதைப் பயன்படுத்துகிறோம். அதற்கு,பெரிய சைஸ் கிளாஸ்தான் பொருத்தமானது…’’ என்கிற கண் மருத்துவர் நவீன், சன் கிளாஸ் வாங்கும்போது கவனிக்கவேண்டிய அம்சங்களைச் சொல்கிறார்.

“கோடையில், வெப்பமும் அதிலிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். அவை நேரடியாக நம் கண்களில் படும்போது, சென்சிடிவ் தசைகள் பாதிக்கப்படவும், பார்வைக் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, புறஊதாக் கதிர்களிலிருந்து காக்கும் சன் கிளாஸ்களையே வாங்க வேண்டும். 

 

பெரிய கடைகளில், அதற்கான பிரத்யேகமான கருவியை வைத்து, சன் கிளாஸின் தன்மையைப் பரிசோதித்து வாங்க முடியும். அதற்காக, ‘சாலையோரக் கடைகளில் விற்கப்படும் சன் கிளாஸ்கள் எல்லாமே தரமற்றவை’ என்றும் சொல்லிவிட முடியாது. சில இடங்களில் ‘யு.வி புரொட்டெக்டடு ‘சன் கிளாஸ்களும் கிடைக்கின்றன. ஆனால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதற்கான வசதிகள் அங்கு இருக்காது. அதேபோல, ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும்போதும் நாம் பரிசோதித்து வாங்க வாய்ப்பில்லை. முடிந்தவரை, 100 சதவிகிதம் ‘யு.வி புரொட்டெக்டெடு‘ கிளாஸ்களை வாங்கி அணிவதே சிறந்தது.

இவை தவிர, ‘மெர்குரி டின்ட் சன் கிளாஸ்’தானா என்று பார்க்கவேண்டியதும் முக்கியம். இந்த வகைக் கண்ணாடிகளில், கண்ணை நோக்கி வரும் ஒளி, அப்படியே கிளாஸில்பட்டு, திரும்பிவிடும். கண்ணாடியைப் பார்க்கும்போதே நமக்குத் தெரியும். சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிபோலப் பிரதிபலிக்கும். இது நம் கண்களுக்கு, பாதுகாப்பு அரணாகச் செயல்படும். 

 

சன் கிளாஸைப் பொறுத்தவரை, நேரடியாகக் கடைகளில், பிராண்டடு தயாரிப்புகளையே வாங்க வேண்டும். முதலில், கண் பாதுகாப்புக்கான அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பார்த்த பிறகுதான், கலர், டிசைன் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். ஸ்டைலைவிட நம் கண்களின் பாதுகாப்பு மிக அவசியம்.’’


ல திசைகளிலிருந்து வரும் சூரிய ஒளியை, ஒரே வழியில் அனுமதிக்கும் திறன் ‘போலராய்டு கிளாஸு’க்கு உண்டு. இப்படி சூரிய ஒளியை ஒரு திசையில் மட்டும் உள்வாங்குவது, கண்களின் பாதுகாப்புக்கு நல்லது. அதனால், சன் கிளாஸ் வாங்கும்போது அது ‘போலராய்டு கிளாஸ்’தானா என அணிந்து பார்த்து வாங்க வேண்டும். ஒரு பொருள், சாதாரண சன் கிளாஸில் பார்க்கும்போது தெரிவதைவிட, போலராய்டு கிளாஸில் இன்னும் அடர்த்தியாகத் (Dark) தெரியும். பாலைவனைப் பகுதிகள், பனிப்பிரதேசங்களில் அணிந்துகொள்ள வசதியானது ‘போலராய்டு கிளாஸ்.’ 

%d bloggers like this: