சம்மரில் ஏன் சளி பிடிக்கிறது?

கோடைக்காலத்தில் பலர் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே நீண்டநேரம் இருப்பார்கள். அந்த அறைகளில் 24 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையே இருக்கும். இந்தத் தட்பவெப்ப மாற்றம் ஏற்றுக்கொள்ளாமல்தான் சளி பிடிக்கிறது. சிலர், வெளியே சென்றுவிட்டு வியர்க்க விறுவிறுக்க ஏ.சி அறைக்குள் தஞ்சமடைவார்கள். ஏ.சி-யை 18 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் வைத்திருப்பார்கள். தொண்டையில் குளிர்க் காற்றுப்படுவதால் இவர்களுக்கும் சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. 

 

குளிரூட்டப்பட்ட அறையில் உறங்குபவர்களுக்கு காற்றோட்டம் குறைவாக இருப்பதாலும், குளிர்ந்த காற்று படுவதாலும் தொற்று எளிதாகப் பரவும். குளிர்ச்சியான குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அருந்துபவர்களுக்கும் சளி பிடிக்கும். கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜூஸ் குடிப்பவர்களுக்கு, தொண்டையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குளிரூட்டப்பட்ட பேருந்து, ரயில், கார் போன்றவற்றில் பயணிக்கும்போது யாருக்காவது சளி பிடித்தால் அருகிலிருப்பவர்களுக்கும் பரவக்கூடும். 

 

தீர்வுகள்!

* குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்போது வெப்பநிலையை மிதமாக வைத்திருக்க வேண்டும்.

* தினமும் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறைந்தால், உடல் வெப்பநிலை மாற்றமடையும். அதனாலும் சளி பிடிக்கலாம்.

%d bloggers like this: