ஒரே ஆள்… பத்து பேரு! அரசியல் வரலாற்றில் அல்லுதெறிக்கவிடும் அரவக்குறிச்சிக்கு அதிபயங்கர பிளான்…

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செந்தில்பாலாஜி, அமமுகவிலிருந்து வெளியேறி, திமுகவில் ஐக்கியமான ஐந்தே மாதத்தில் திமுக வேட்பாளர் ஆகியிருக்கிறார் செந்தில்பாலாஜி, இவரின் வளர்ச்சி திமுகவில்

மட்டுமல்ல அதிமுகவிலுள்ள பெரும்புள்ளிகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது. செந்திலை எப்படியாவது அரவக்குறிச்சியில் அடியோடு சாய்க்கவேண்டும் என்பதே அதிமுக அமைச்சர்களுக்கு இப்போதைய அஜெண்டாவாக இருக்கிறது. எப்படியும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதற்காக தொகுதிக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, செந்கோட்டையன், அன்பழகன், உட்பட முக்கியமான 10 அமைச்சர்கள் களமிறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி என்பதால், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஒரு ஒன்றியத்திற்கு ஒரு அமைச்சர் மற்றும் மூன்று எம்.எல்.ஏ என நியமித்துள்ளதால் வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். வேட்பாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இன்னும் கூடுதல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

செந்தில்பாலாஜியின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரை உள்ளனர். இதுதான் தமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு என்பதால் , செந்தில்பாலாஜியை பழி தீர்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்காக நேரடியாக தனிப்பட்ட முறையில் எந்த உதவியானாலும் செய்ய உள்ளதாக சொல்லிவருகிறாராம்.

அதிலும், தொகுதியில் கனிசமான அளவு வாக்கு வங்கி உள்ள வேட்டுவ கவுண்டர் மற்றும் முஸ்லீம் இன மக்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதுமட்டுமல்ல தினகரன் கட்சியிலிருந்து செந்தில்பாலாஜி திமுக சென்றபின் அவருக்கு எதிரான மனநிலையில் உள்ள அமமுக முக்கிய புள்ளிகளையும், லோக்கல் கைகளையும் தன் பக்கம் இழுக்கும் வேலையிலும் இறங்கியுள்ளாராம் விஜயபாஸ்கர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரமாண்டமாக நடந்த செயல்வீரர்கள் கூட்ட மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவிற்கு சோதனை வந்த போது காட்டிக்கொடுத்தவர் செந்தில்பாலாஜி. செந்தில்பாலாஜயை தோற்கடிக்க திட்டம் போடும் 10 தமிழக அமைச்சர்களும் கடந்த முறை செந்தில்பாலாஜி பணத்தை தண்ணீராக இறைத்தற்காகத் தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த முறையும் கட்டாயம் பணத்தை தண்ணீராக இறைப்பார். அதை நாம் காட்டிக்கொடுத்தால் தேர்தலை நிறுத்திவிடலாம் என்று களத்தில் நேரடியாக செந்தில்பாலாஜியை வெற்றி பெற முடியாது என்பதால் இப்படியான குறுக்கு வழியையும் பிளானில் வைத்துள்ளார்களாம்.

ஆனால் செந்தில்பாலாஜியோ ஒட்டுமொத்த அதிமுகவே திரண்டு வந்தாலும் ஜெயிக்கப்போறதென்னவோ நான் தான் என செம்ம கெத்தாக காத்திருக்கிறாராம்.

%d bloggers like this: