Monthly Archives: மே, 2019

பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?!

கட்டுரையில் நுழையும் முன் பெற்றோருக்கு சில கேள்விகள்…உங்கள் குழந்தை விரும்பும் பெற்றோரா நீங்கள்?! உங்களது பதில் ‘ஆம்’ எனில் குழந்தையின் எந்த வயது வரை நீங்கள் பிடித்தமானவராக இருந்தீர்கள்? உங்கள் குழந்தைக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை? உங்கள் குழந்தைக்குப் பிடித்தமானவராக மாற நீங்கள் முயற்சித்ததுண்டா? Continue reading →

ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் அதிர்ந்து போவீர்கள்தானே?

நேற்றுவரை உங்களை ‘அக்கா’ என அழைத்திருப்பார்கள். இன்று யாரோ ‘ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் ஒரு நிமிடம் அதிர்ந்து போவீர்கள்தானே?

கல்யாணத்துக்காகப் பார்த்துப் பார்த்து தைத்த டிசைனர் பிளவுஸை திடீரென ஒருநாள் எடுத்துப் போட்டால், முழங்கைக்கு மேல் நுழையாததைப் பார்த்தால் அழுகை வரும்தானே?

Continue reading →

சுழற்சி முறையில் அமைச்சரவை! – தொடங்கியது பங்காளிச் சண்டை

பி.எம் மோடி… பி.எம் மோடி’’ என்று நம் காதில் விழும்படி முணுமுணுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘ஓ… இன்றைக்கு வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமோ?’’ என்றோம்.
‘‘வெயிலின் தாக்கமல்ல, மோடியின் தாக்கம் அதிகம். தேர்தலின்போது திரைக்கு வராமல் தடைசெய்யப்பட்டிருந்த மோடியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘பி.எம். மோடி’ ரிலீஸ் ஆகிவிட்டது. ரயில்வே நிலையத்தில் டீ விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கும்போதே, சௌக்கிதார்களுடன்தான் தொடங்கியிருக்கிறார் மோடி. அநேகமாக அப்போதே அச்சாரம் போட்டுவிட்டார்போல. ஒருவேளை தேர்தலுக்கு முன் படம் ரிலீஸ் ஆகியிருந் தால், இன்னும் கூடுதலான தொகுதிகளைக் கூட அள்ளியிருப்பார் போல.’’

Continue reading →

தி.மு.க பிரமுகர்களைக் குறிவைக்கும் பி.ஜே.பி”- அடுத்த அதிர்ச்சியில் அறிவாலயம்!

நாடு முழுவதும் பி.ஜே.பி அலை சுழற்றி அடித்த போதும், தமிழகத்தில் அந்தக் கட்சி ஒரு இடத்தை கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சரிகட்ட அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவருகிறது பி.ஜே.பி. அதற்கான மாஸ்டர் பிளான் இப்போது செயலுக்கு வர ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள்.

Continue reading →

கையெழுத்திட மறுத்த ஓ.பன்னீர்செல்வம்’- அ.தி.மு.கவின் அமைச்சரவை ஏமாற்றத்துக்குக் காரணம்

பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க-வில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததற்கு அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பிடிவாதமும் ஒரு காரணம் என்ற புகைச்சல் அ.தி.மு.க தரப்பில் இப்போது எழுந்துள்ளது.

Continue reading →

மோடி அமைச்சரவை பட்டியல்: புதிய அமைச்சர்கள் முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு பலமாக நிலவி வரும் நிலையில், இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

Continue reading →

வைத்திலிங்கமும் இல்லை.. ரவீந்திரநாத்தும் இல்லை.. அதிமுகவை சேர்க்காமல் கைவிட்ட பாஜக!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுகிறது. இருப்பினும் அதன் முழு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக காணப்படுகிறது கட்சி வட்டாரம்.

தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்தது. முழுமையான வெற்றியை அது பெறாமல் போனதே அதற்குக் காரணம். மறுபக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி, வாரணாசி என பிசியாக இருந்து வந்தார்.

Continue reading →

திருடனுக்கு தேள் கொட்டிய கதை’ – அவஸ்தையில் எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தொகுதிக்குப் பொறுப்பாளர்களான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களிடம் ‘ஏன் தோற்றோம்?’ எனக் கேள்வி எழுப்ப முடியாமல் எடப்பாடி பழனிசாமி பரிதவிக்கிறாராம்.

நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க, தேனி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வெற்றியடையவைக்காத மாவட்டச் செயலாளர்களும் தொகுதிக்குப் பொறுப்பான அமைச்சர்களும் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக எதுவும் செய்ய முடியாமல் பரிதவிக்கிறாராம்.

Continue reading →

சுழற்சி முறையில் அமைச்சரவை! – தொடங்கியது பங்காளிச் சண்டை

பி.எம் மோடி… பி.எம் மோடி’’ என்று நம் காதில் விழும்படி முணுமுணுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘ஓ… இன்றைக்கு வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமோ?’’ என்றோம்.
‘‘வெயிலின் தாக்கமல்ல, மோடியின் தாக்கம் அதிகம். தேர்தலின்போது திரைக்கு வராமல் தடைசெய்யப்பட்டிருந்த மோடியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘பி.எம். மோடி’ ரிலீஸ் ஆகிவிட்டது. ரயில்வே நிலையத்தில் டீ விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கும்போதே, சௌக்கிதார்களுடன்தான்

Continue reading →

மூன்று மணி நேரம் நடந்த ஆலோசனை! – அமைச்சரவையை முடிவுசெய்த மோடி, அமித் ஷா

ரேந்திர மோடி, மீண்டும் பதவியேற்கப்போகிறார். அமைச்சரவையை மாற்றப்போகிறார். கூட்டணிக் கட்சிகளில் யார் யாருக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி இருந்துவருகிறது. நாளை, பிரதமர் பதவியேற்கப்போகிறார். விரைவில் அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போகிறவர்களின் பட்டியலை வெளியிடப்போகிறார்கள். 

இந்நிலையில், இன்று 3 மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், 6 கட்சிகளுக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கொடுக்கப் போவதாக மோடி, அமித் ஷா முடிவுசெய்துள்ளனர். பஞ்சாபிலிருந்து ஷிரோன்மணி அகாலிதள், உத்தரப்பிரதேசத்திலிருந்து அப்னாதள் என்ற கட்சி, பீகாரில் நிதிஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பீகாரிலிருந்து மற்றுமொரு கட்சியான லோக் ஜனசக்தி, மகாராஷ்டிராவிலிருந்து சிவசேனா, தமிழகத்திலிருந்து அ.தி.மு.க என்று 6 கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கப்போகும் பா.ஜ.க-வின் அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போகின்றன. இதில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒன்று முதல் மூன்று இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.