Daily Archives: மே 3rd, 2019

பன்னீர் மூலமாகச் சாதித்துக்கொண்டார் மோடி!’ – வாரணாசி பயணத்தின் நோக்கம் என்ன?

பா.ஜ.க-வின் அங்கமாக பன்னீர்செல்வம் இருந்ததால்தான் இத்தனையும் அவர்களால் செய்ய முடிந்தது. சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும்தான் பா.ஜ.க-வோடு நெருங்கிக் கொண்டிருக்கிறார் பன்னீர்.

Continue reading →

ஆட்சியைக் கலைப்பது சசிகலா நோக்கம் கிடையாது!’ – ஸ்டாலின், எடப்பாடி, தினகரன் முக்கோண மோதலின் பின்னணி

கொறடா என்ன உத்தரவு போட்டாலும் அதன்படியே செயல்படுவோம். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸுக்கு வரும் 7-ம் தேதி விளக்கம் கொடுக்க இருக்கிறேன். இந்த நோட்டீஸின் பின்னணியில் முதல்வரின் அச்சம் இருக்கிறது.

அ.தி.மு.க-வின் 3 எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அரசியல் களத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறார் சபாநாயகர் தனபால். `தி.மு.க-வையும் தினகரனையும் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை விமர்சிக்கிறார் தினகரன். சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் சபைக்கே வரப்போவதில்லை’ என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

Continue reading →

ஆடிப்போன எஸ்பி-க்கள்; சசிகலாவுக்குக் கண்டம்; அடுத்த தலைமைச் செயலாளர்!?’ – யார்கிட்டயும் சொல்லாதீங்க

தமிழக நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு டிஜிபி-யாக அசுதோஷ் சுக்லா பதவியேற்றதும், வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் தமிழகம் முழுக்க உள்ள எஸ்பி, டிஐஜி, ஐஜி உள்ளிட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்று பேசினார். ”உங்களில் சில எஸ்பி-கள் பணத்தை போலீஸ் வாகனத்துல கடத்துனதெல்லாம் எனக்குத் தெரியும். இதுவரை எப்படியோ… இதோ, நான் வந்துட்டேன். இனிமேலும் அப்படி நடந்தா, கடுமையான நடவடிக்கை எடுப்பேன்” என்றாராம்.

Continue reading →

வங்கம் முதல் வடகிழக்கு வரை… பிரமிக்க வைக்கிறது பி.ஜே.பி!

அகில இந்திய கட்சி’ என்கிற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் கொடுக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி! ஒருகாலத்தில் ‘ஹிந்தி’ பேசும் மாநிலங்களில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியவர்கள், அடித்தளம் இல்லாமல் இருந்த மேற்கு வங்கம், ஒடிஷா போன்ற மாநிலங்களிலும் இப்போது வலுப்பெற்று வருகிறார்கள். ஒடிஷாவில், காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு அருகே வந்து நிற்கிறார்கள். மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட்களை காலி செய்துகொண்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களிலும் பி.ஜே.பி கொடி பறக்கிறது.

மேற்கு வங்கம்

Continue reading →

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி, கிர்ணி பழம் சாப்பிடலாமா? கூடாதா?

கிர்ணிப் பழம் என்பது என்ன?

முலாம் பழம் என்பது மிகவும் பிரபலமான ஒரு பழ வகையாகும். குகுர்பிடசியா குடும்பத்தைச் சேர்ந்த முலாம் பழம் 500 கிராம் முதல் 5 கிலோ வரை வளரும் பழமாகும். முலாம் பழத்தின் தாவர பெயர், குகுமிஸ் மெலோ. இதனை கிர்ணிப் பழம், முள் வெள்ளரி என்று பல பேர்களில் அழைப்பார்கள்.

Continue reading →