தர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவின்போது சில இடங்களில் இயந்திரக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட்டது. மேலும், தர்மபுரி மாவட்டம் நத்தமேடு பகுதியில் கள்ள ஓட்டு பதியப்பட்டதாகவும், பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது. இதற்கான வீடியோ காட்சிகளும் வெளியாகின. தொட

ர்ந்து இதுகுறித்து அறிக்கையைத் தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்தும் வாங்கியிருந்தது. இதற்கிடையே, ஈரோடு, தேனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த ஈரோடு மாவட்ட ஆட்சியரோ, “சில இடங்களில் முறைகேடாக வாக்குப்பதிவு நடந்ததாகத் தெரியவந்ததால் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரிக்கை விடுத்திருக்கிறோம். அதற்கு ஏதுவாக இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. தர்மபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், ஈரோடு, கடலூரில் ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்த நிலையில் தற்போது 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

%d bloggers like this: