அதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்?

பிரபல மொபைல் பத்திரிக்கை மின்னம்பலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் புலனாய்வு செய்தி ஒன்றிணை வெளியிட்டிருந்தது, அதில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் பொருளாளர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை என்றும் தேர்தல் முடிவு வந்ததும் அவரை

நீக்கிவிட்டு எ.ம. வேலுவை அந்த இடத்தில் அமர்த்த இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.

முன்பே வருமானவரித்துறை உங்கள் வீட்டில் சோதனை இடலாம் என்று எச்சரிக்கை விடுத்தும், அதனை துரைமுருகன் புறந்தள்ளிவிட்டு கண்கொள்ளாமல் இருந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்ததாக எண்ணுகிறாராம் ஸ்டாலின். மேலும் பாஜக தலைவர் தமிழிசையுடன் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியது, திமுகவினர் இன்றி தனது ஆதரவாளர்களுடன் பேசியது போன்றவை ஸ்டாலினுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் திருமாவளவனை சேர்க்க வேண்டாம் அது நிச்சயம் பல பகுதிகளில் திமுகவிற்கு எதிராக முடியும் என்று துரைமுருகன் எச்சரிக்க அதனை ஸ்டாலின் கேட்காதது, மேலும் தன்னை எந்த முக்கிய கூட்டத்திற்கும் அழைக்காமல் புறம் தள்ளுவது, ஆகிய காரணங்களால் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் துரைமுருகன்.

தான் அண்ணா காலத்தில் இருந்து அரசியலில் இருப்பவன் தன்னை மதிக்காமல் ஸ்டாலின் பொருளாளர், பதவியில் இருந்து நீக்கினால் உடனடியாக அடுத்த அதிரடி கொடுக்க தயாராக இருக்கிறாராம் துரைமுருகன்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிச்சயம் அழகிரி ரஜினியுடன் இணைய போகிறார், ரஜினிக்கும் பொதுமக்கள் இடையே செல்வாக்கு இருக்கிறது, எனவே தற்போதைய சூழலில் திமுகவில் இருந்து வெளியேறினால் ரஜினியுடன் இணைய துரைமுருகன் அதிரடி முடிவை எடுத்துவிட்டாராம்.

ஏற்கனவே ரஜினி ரசிகர்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று ஸ்டாலின் தொடர்ச்சியாக முயன்று, கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் இயக்க தலைவரை திமுகவில் இணைத்தார், அதை மிக பெரிய விழாவாக நடத்தி காட்டினார், அதற்கு அன்றே ஸ்டாலினை மறைமுகமாக எச்சரித்தார் ரஜினி. தற்போது அமைதியாக இருந்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் ரஜினி.

ஏற்கனவே வன்னியர் சமுதாய மக்களை திமுக புறக்கணிப்பதாக குற்றசாட்டு உள்ள நிலையில் துரைமுருகனும் வெளியேறினால் இது மிகப்பெரிய பாதிப்பை திமுகவிற்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.

%d bloggers like this: