அர்ட்டிகேரியா என்கிற காணாக்கடி

பலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்ற பொருள் என்பதே இதற்கு அர்த்தம்.தற்போதுள்ள வாழ்க்கை முறையில் நாம் சாப்பிடும் உணவில் / நாம் சுவாசிக்கும் காற்றில் / நம் சுற்றுப்புறச்சூழலில் என்னவெல்லாம் கலந்திருக்கிறது என்பதை நாம் அறியோம். அதனால் இந்த காணாக்கடி இப்பொழுது நிறைய பேரை பாதிக்கிறது.

Urticaria-காணாக்கடியின் அறிகுறிகள் யாவை?

உடல் முழுவதும் திடீரென்று பட்டை பட்டையாக சிவந்து தடித்து போகும். அரிப்பு அதிகமாகி, கொஞ்ச நேரத்தில் தானாகவே மறைந்துவிடும். இப்படி ஏற்படுவது தொண்டை, கண் இமை போன்ற இடங்களையும் பாதித்தால் Angioedema என்றழைப்போம். ஒவ்வாமையின் உச்சகட்டமான Anaphylactic reaction-களில் Urticaria-வும் Angioedema-வும் சேர்ந்தே ஏற்படும். உடல் முழுவதிலும் தடித்துக்கொண்டு, மூச்சு விடுவதிலும் சிரமம் இருக்கும். இப்படி இருக்குமானால், உடனே மருத்துவரின் உதவியை நாடுவது உயிரைக் காப்பாற்றும்.
சிலருக்கு Urticaria வரும்போது வாந்தி, மயக்கம், உடல்வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் சேர்ந்தே காணப்படலாம்.
Urticaria எதனால் ஏற்படுகிறது?
மிகச்சிலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், பலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. Urticariaவை ஏற்படுத்தும் காரணிகளை பின் வருமாறு பிரிக்கலாம்.
Ingestion – நாம் உண்ணும் உணவு/ மாத்திரைகள்
Infection –  தொற்று நோய்கள்
Infestation – குடலில் கீரி பூச்சிகள் இருப்பது
Inhalants – நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பொருட்கள்
Insect bites – பூச்சிக்கடிகள்
Injections – மருந்துகள்
Instillation – கண்களில்/ காதுகளில் விடப்படும் சொட்டு மருந்துகள்
Inoculaction – தடுப்பூசிகள்

மேற்கண்ட காரணிகளுடன் Implants மற்றும் Idiopathic போன்றவையும்முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Ingestion


சிலருக்கு மாத்திரை மருந்துகள் இம்மாதிரியான அலர்ஜியை ஏற்படுத்தலாம். உணவுகளில், மீன், பால், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், மாமிசங்கள் போன்ற பொருட்களும், உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணங்களும், மணமூட்டிகளும், இதனை ஏற்படுத்தலாம்.
Infection
பற்களில் உள்ள சொத்தை, தொண்டை/ காதுகளில் வலி/ சீழ் உண்டாதல் போன்றவை இதை ஏற்படுத்தலாம். வயிற்றில் ஏற்படும் தொற்றுகளான Helicobacter pylori அல்லது Campylobacter jejuni போன்ற கிருமிகளும் இதற்கு காரணமாகின்றன. Hepatitis ‘B’ Infection காரணமாகவும் வரக்கூடும். அது மட்டுமின்றி சுவாசக் குழாயிலும், சிறுநீர் பாதையில் மற்றும் பித்தப்பையில் உள்ள கிருமி தொற்றுகளாலும் கூட இது ஏற்படலாம்.
Infestation

குடலில் நாக்குப்பூச்சிகள் என்று அழைக்கப்படும் Ankylostoma, Ascariasis, Strongyloides, Echinococus, Toxacara canis இன்னும் பல தொற்றுப் புழுக்கள் இருப்பதும் கூட ஒரு காரணம்.
Inhalants

பூக்களின் மகரந்தத் தூள்கள், மிருகங்களின் முடிகள், பாக்டீரியாவின் Spore-கள், பூஞ்சைகளின் Mould-கள் மற்றும் வீட்டில் உள்ள தூசுகளாலும் உண்டாகலாம்.
Insect bites
கொசுக்கள், மூட்டைப்பூச்சிகள் கடித்தால் கூட அலர்ஜி ஏற்படலாம். தேனியோ குளவியோ கொட்டுவதால் Anaphylaxis கூட ஏற்படலாம்.
Instillation
சில மருந்து ஒவ்வாமை இருப்பவர்களுக்கு அதே மருந்தை கண்களுக்கு/ காதுகளுக்கு சொட்டு மருந்தாக உபயோகப்படுத்தும்போது இது வரலாம்.
Innoculaction
தடுப்பூசிகள் போட்டால் சிலருக்கு அலர்ஜியினால் இது போன்று தடிப்புகள் ஏற்படலாம்.
Implants
பற்களில் அல்லது எலும்புகளில் வைக்கப்படும் Prosthesis-க்கு ஒவ்வாமை இருந்தால்கூட Urticaria ஏற்படலாம்.
Idiopathic
சிலருக்கு மன அழுத்தம் இருந்தால் கூட Urticaria ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பசும் பால் கூட அலர்ஜியை ஏற்படுத்தும்.Urticaria பாதிக்கும் கால அளவை பொறுத்து Acute  மற்றும் Chronic Urticaria என்று பிரிப்போம். Urticaria 6 வாரங்களுக்குள் இருந்தால் Acute Urticaria என்றும், 6 வாரங்களுக்கு மேல் இருந்தால் Chronic Urticaria என்றும் பிரிப்போம்.
Chronic spontaneous Urticaria என்னும் வகை மிகவும் அதிகமாக காணப்படுவது. திடுதிடுப்பென்று எந்த காரணமும் இல்லாமல் வருவது 7-22 சதவீதம் பேர் இவ்வகையால் பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு 1 முதல் 5 வருடம் வரை இது திடீரென்று வருவதும், மறைவதும், பின்னர் வருவதுமாக இருக்கலாம். இவ்வகை Urticaria-வால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர், 6 மாதங்களில் குணமடைய சாத்தியம் உண்டு. மீதி 20 சதவீதம் பேருக்கு 5-10 வருடங்களில் குணமாகலாம்.
மற்றவர்களின் நோயின் போக்கு கணிக்க இயலாது. 50 வருடங்களாக பாதிக்கப்பட்டவர்களும் இருப்பதாக ஆராய்ச்சி கட்டுரைகள் சொல்கின்றன. ஒரு சில வாரங்களில் குணமானவர்களும் உண்டு. எத்தனை இடங்களில் சிவந்து வீங்கி இருந்தது என்பதை வைத்து இதை மிதமான, நடுத்தரமான அல்லது தீவிரமான அளவில் பாதித்திருப்பதைப் பிரிக்கலாம்.
20 சதவிகித இடங்களில் சிவந்து வீங்கி இருப்பது மிதமானது, 20 முதல் 50 இடங்களில் சிவந்து வீங்கி இருப்பது நடுத்தரமானது, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிவந்து வீங்கி இருப்பது தீவிரமான பாதிப்பு.
மேற்சொன்ன விதங்கள் எல்லாம் தானாகவே ஏற்படுவது. இன்னொரு வகையில் இந்த Urticaria வானது சில காரணங்களால் ஏற்படும். அந்த காரணத்தை பொறுத்து மாறுபடும். குளிர்ந்த காற்று/ ஐஸ் கட்டிகளால் ஏற்படும் அலர்ஜியை Cold Urticaria எனப்படும்.
அழுத்தத்தால் ஏற்படும் அலர்ஜியை, Pressure Urticaria என்றும், வெப்பத்தினால் வருவதை Heat Urticaria, புற ஊதாக்கதிர்கள் அல்லது சூரிய வெளிச்சத்தினால் வருவதை Solar Urticaria, Vibratory Tools-களினால் வருவது Vibratory Angioedema, ஈர துணியினால் வருவதை Aquagenic urticaria, உடற்பயிற்சியினால் அல்லது சுடு தண்ணீரில் குளிப்பதால் வரும் வகை Cholinergic urticaria சிலருக்கு சில பொருட்களை தொடுவதனால் கூட Contact urticaria வரலாம்.


எப்படி சமாளிக்கலாம்?

முதலில் என்ன காரணத்தினால் இது ஏற்படுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். பல் சொத்தை, காதில் சீழ் வடிதல் அல்லது உடலில் எந்த உறுப்பிலேனும் தொற்றுநோய் இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். வேறு நோய்களுக்காக ஏதேனும் மருந்து உட்கொண்டால் அதன் விபரத்தை டாக்டரிடம் சொல்ல வேண்டும். சில வலி மாத்திரைகள் கூட அலர்ஜி ஏற்படுத்தலாம். அது மட்டுமின்றி தைராய்டு சுரப்பியில் உள்ள சில பிரச்னைகளால் கூட இம்மாதிரி அலர்ஜி உண்டாகலாம்.
தேவைப்பட்டால் மருத்துவர் சில ரத்தப் பரிசோதனைகளை செய்து பார்க்கக்கூடும். இம்மாதிரி ஏற்படும் Urticaria-வைக் கட்டுப்படுத்த Antihistamine மாத்திரைகளான Cetrizine, Levocetrizine, Loratidine, Fexofenadine, Bepotastine, Olopatadine போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். சிலருக்கு இம்மருந்துகள் வேலை செய்ய ஆரம்பிக்க 2 வாரம் வரை ஆகும்.
அதனால் 2 வாரம் வரை பொறுத்திருந்து பார்த்துதான் டாக்டர் பரிசோதிப்பார். வேறு மருந்தை மாற்றுவதற்கு முன் Levocetirizine, Fexofenadine மற்றும் Destoratadine மாத்திரைகளின் அளவை 4 மடங்கு உயர்த்திப் பார்க்கலாம் நோயின் வீரியம் மிக அதிகமாக இருந்தால் மருத்துவர் Corticosteroids, Cyclosporine, Omalizumab, Methotrexate போன்ற மருந்துகளையும் உபயோகப்படுத்தலாம்.
மற்றொரு முக்கியமான விஷயம் நம்மில் பலருக்கு Eczema-விற்கும் Psoriasis-கும் உள்ள வேற்றுமை இன்னும் தெரியவில்லை. சோரியாசிஸ் சருமம் வேகமாக வளர்கிறது. அது சருமத்தை மட்டுமல்லாமல் நகம், Scalp மற்றும் எலும்புகளையும் பாதிக்கக்கூடியது. எக்ஸிமா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமையால் ஏற்படுவது.
Eczema -வில் பலவகைகள் உள்ளன. Atopic eczema, Stasis eczema, Dyshidrotic eczema, Nummular eczema, Asteatotic eczema, Allergic contact dermatitis, Irritant Contact Dermatitis.Eczema-வால் பாதிக்கப்பட்ட சரும எரிச்சல், அரிப்பு உண்டாகும். சருமத்தில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இரண்டு நோய்களுக்குமான சிகிச்சை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான களிம்புகளாக இருந்தாலும் இந்த இரண்டின் போக்கும் வெவ்வேறாக இருக்கும்.

%d bloggers like this: