Daily Archives: மே 15th, 2019

ஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்! – சம்திங் சந்திப்புகள்

காயம் மேலே பாதாளம் கீழே…. ஆனந்த உலகம் நடுவினிலே” என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்த கழுகாரிடம், “செய்தியுடன் வருவீர் என்று பார்த்தால், பாடலுடன் வருகிறீரே” என்று கேட்டதும் ‘‘சொல்கிறேன்!’’ என்று புன்னகையுடன் நம் முன் அமர்ந்தார்.

‘‘ராவ் ரகசியங்கள் என்று கடந்த இதழில் நீர் சொன்னது போலவே சந்திப்பும் நடந்தேறிவிட்டதே?’’

Continue reading →

மலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி?

கடந்த 2014 தேர்தலில் மாநிலக் கட்சிகள் மட்டும் 176 இடங்களில் வெற்றிபெற்றன. அதைவிட இப்போது கூடுதலான இடங்களில் மாநிலக் கட்சிகள் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.”

மலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி?

ந்தியாவின் திசையைத் தீர்மானிக்கப் போகும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியா… இல்லை ராகுல் காந்தி ஆட்சியா… இவை இரண்டுமில்லாமல் மாற்று அணி ஆட்சியா என்கிற விவாதங்கள் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால், மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது பி.ஜே.பி.

Continue reading →

நிலாவில் குடியேற வழிகள்

 

காலனி ஆதிக்கநாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. சந்திரனில் வசிக்கவேண்டுமென்றால் சுவாசிக்க காற்று வேண்டும்… குடிக்க நீர் வேண்டும்… உண்ண உணவுவேண்டும்…சரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்… எரிபொருள் வேண்டும்… இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.

Continue reading →

வீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது?

ம் என்பது குறித்த பட்ஜெட்டை முன்கூட்டியே கணக்கிட முடியும். இருப்பினும், வட்டி  குறைந்தால், அதனால் ஏற்படும் வட்டிக் குறைப்பின் பலன்களை உங்களால் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

உங்கள் கடனுக்கான மாதாந்தரக் கடன் தவணை (இ.எம்.ஐ), உங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்துக்குக் குறைவாகவும், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம், தீர்மானிக்கப் பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில், நீங்கள் நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முறையைத் தேர்வுசெய்வது பாதுகாப்பானது.
மாறுபடும் வட்டி விகிதக் கடன் என்பது, நிலையான வட்டி விகிதக் கடனைக் காட்டிலும் உத்தேசமாக 1 முதல் 2.5% குறைவாக இருக்கும். மாறுபடும் வட்டி

Continue reading →

சம்மர் டிப்ஸ்

தேங்காய்ப்பால் – அரை கப், கடலை மாவு – 50 கிராம், கஸ்தூரி மஞ்சள்தூள் – 4 டீஸ்பூன், தேவையான அளவு தண்ணீர்… இவை அனைத்தையும் கலந்துவைத்துக்கொள்ளுங்கள். தினமும் நீங்கள் இரண்டு முறை குளிப்பவராக இருந்தால், ஏதாவது ஒருமுறை, முகம் மற்றும் உடல் முழுவதும் இந்தக் கலவையை தேய்த்துக் குளிக்கவும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும். வியர்வை நாற்றம் நீங்கும். வியர்க்குரு வராமல் தடுக்கும்.

Continue reading →

மிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்!

காரம்’ என்ற சொல் உச்சரிக்கப்பட்டதும் அனைவரது நினைவிலும் சட்டென துளிர்ப்பது `மிளகாய்’. சமீப காலமாக மற்ற அஞ்சறைப் பெட்டி பொருள்களைவிட அதிக அளவில் பயன்படுவது இதுதான்.

உலகப்புகழ் பெற்ற கோங்குரா, மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களின் விறுவிறு விற்பனைக்கு, சுறுசுறுவென வெம்மை தரும் மிளகாயின் தனித்துவமும் முக்கியக் காரணம். உண்ணும் நாக்கையே தீயாக எரியச் செய்தாலும், கண்களிலிருந்து கண்ணீரைத் தாரை தாரையாக வெளியேற்றினாலும் மிளகாய் மீதான நமது பாசம் எள்ளளவும் குறைவதில்லை.

Continue reading →