சம்மர் டிப்ஸ்

தேங்காய்ப்பால் – அரை கப், கடலை மாவு – 50 கிராம், கஸ்தூரி மஞ்சள்தூள் – 4 டீஸ்பூன், தேவையான அளவு தண்ணீர்… இவை அனைத்தையும் கலந்துவைத்துக்கொள்ளுங்கள். தினமும் நீங்கள் இரண்டு முறை குளிப்பவராக இருந்தால், ஏதாவது ஒருமுறை, முகம் மற்றும் உடல் முழுவதும் இந்தக் கலவையை தேய்த்துக் குளிக்கவும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும். வியர்வை நாற்றம் நீங்கும். வியர்க்குரு வராமல் தடுக்கும்.

 

வெள்ளரிக்காய்ச்சாறு, உருளைக்கிழங்கு சாறு, சிறிதளவு பால், சிவப்பு சந்தனத்தூள் சிறிதளவு ஆகியவற்றைக் கலந்து, கண்களைச் சுற்றித் தேய்த்துக்கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ச்சியான நீரில் கண்களைக் கழுவுங்கள். இது வெயிலால் ஏற்படும் கண் எரிச்சலைக் குறைக்கும்; கண்களைச் சுற்றி வரும் கருவளையமும் மறையும்.

%d bloggers like this: