Advertisements

மலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி?

கடந்த 2014 தேர்தலில் மாநிலக் கட்சிகள் மட்டும் 176 இடங்களில் வெற்றிபெற்றன. அதைவிட இப்போது கூடுதலான இடங்களில் மாநிலக் கட்சிகள் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.”

மலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி?

ந்தியாவின் திசையைத் தீர்மானிக்கப் போகும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியா… இல்லை ராகுல் காந்தி ஆட்சியா… இவை இரண்டுமில்லாமல் மாற்று அணி ஆட்சியா என்கிற விவாதங்கள் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால், மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது பி.ஜே.பி.

காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்காத சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்ற காய்கள் நகர்த்தப்படுகின்றன. இந்த இரண்டு அணிகளைத் தாண்டி, தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் தேர்தலுக்குப் பிந்தைய மூன்றாவது அணியை உருவாக்குவதற்காக, மாநிலக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பி.ஜே.பி, காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் தவிர்த்துவிட்டு, நிஜமாகவே மாற்று அணியின் ஆட்சியை அமைக்க சந்திரசேகர ராவ் முயற்சி செய்கிறாரா… அல்லது மறைமுகமாக பி.ஜே.பி. ஆட்சி அமைவதற்காக களப்பணியை மேற்கொள்கிறாரா எனச் சந்தேகம் எழுப்புகிறார்கள் சில அரசியல் கட்சித் தலைவர்கள். சந்திரசேகர ராவின் எதிரியான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய பாடுபட்டுவருகிறார்.

மாநிலக் கட்சிகள் - சந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தான் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கைப் பறைசாற்றப்போகின்றன. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்துதான் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வந்திருக்கிறது. 1989 தேர்தலில் 27 இடங்களில் வென்ற மாநிலக் கட்சிகள் 1991-ல் 50 இடங்களையும் 1996 தேர்தலில் 129 இடங்களையும் 1998 தேர்தலில் 101 இடங்களையும் 1999 தேர்தலில் 158 இடங்களையும் 2004 தேர்தலில் 159 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இப்படி நாடாளுமன்றத்தில் உயர்ந்து வந்த மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு 2009  தேர்தலில் 146 ஆகச் சரிந்தது. ஆனால், அடுத்து வந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 176 ஆக மீண்டும் உயர்ந்தது.

1996 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி-க்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவகவுடா பிரதமர் ஆனார். அவருக்குக் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்தபோதும், மாநிலக் கட்சிகள்தாம் அப்போது முக்கியப் பங்காற்றின. 2004 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவதற்கு மாநிலக் கட்சிகள் முக்கிய ரோல் வகித்தன. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சியான அ.தி.மு.க. 37 இடங்களில் வென்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தபோதிலும், பி.ஜே.பி-க்கு தனி மெஜாரிட்டி கிடைத்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது.

மாநிலக் கட்சிகள்

எந்தவொரு பெரிய கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழலில்தான், மாநிலக் கட்சிகளுக்கு மவுசு அதிகரிக்கும். அதைக் கணக்குப் போட்டுத்தான் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் சிலர், பிரதமர் நாற்காலியின் மீது கண் பதித்திருக்கிறார்கள். பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது மாயாவதியின் நீண்டகாலக் கனவு. அதற்காக அவர் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் கூட்டணியும் சேர்ந்திருக்கிறார். மாயாவதி பிரதமர் ஆக ஆதரவு தர தயார் எனச் சொல்லியிருக்கிறார் அகிலேஷ் யாதவ். இந்தக் கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் 60 இடங்களைக் கைப்பற்றினால் அதுபோன்ற மாயாஜாலம் நடக்கலாம். மம்தா பானர்ஜி, தேவகவுடா, சரத்பவார் என மூன்றாவது அணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாகப் பலருடைய பெயர்களும் அடிபடுகின்றன.

“இடதுசாரிகள், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் 150-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிடுகின்றன. கடந்த 2014 தேர்தலில் மாநிலக் கட்சிகள் மட்டும் 176 இடங்களில் வெற்றிபெற்றன. அதைவிட இப்போது கூடுதலான இடங்களில் மாநிலக் கட்சிகள் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அப்படி நடந்து, பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மைக்கும் குறைவான இடங்கள் கிடைக்கும்பட்சத்தில் மத்தியில் மாநிலக் கட்சிகள் ஆட்சி மலரலாம். இல்லையெனில்  மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமையலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: