Daily Archives: மே 16th, 2019

உங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்!

நம் நாட்டில் மட்டும் கருவிழிப் பிரச்னைகளால் பார்வையின்றி தவிப்போர் சுமார் 1.8 லட்சம் பேர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலக அளவில் இந்தியாவில்தான் கருவிழி பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. கண் தானம் மூலமாக இவற்றில் பெரும்பான்மையானோருக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும். இதனை Treatable blindness என்கிறோம். Continue reading →

ஆண்களையும் அச்சுறுத்தும் சிறுநீர்க்கசிவு!

சாதாரணமாக இருமும்போதும் தும்மும்போதும்கூட சிலருக்கு சிறுநீர்க்கசிவு இருக்கும். இதனால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி, கடுமையான மன உளைச்சலுக்குத் தள்ளப்படுவார்கள். சிறுநீர்க்கசிவு என்பது வெறும் உடல்நலப் பிரச்னையல்ல; மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இம்சை. இது பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், ஆண்கள் மற்றும் பள்ளி செல்லும் பருவத்திலுள்ள குழந்தைகளையும்கூட இது பாதிக்கலாம். 

Continue reading →

ஞானப்பல் நல்லதா?

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்கத் தொடங்கும். முதலில் தோன்றுபவை பால் பற்கள்; அவை விழுந்த பிறகே நிரந்தரமான பற்கள் முளைக்கும். 13 வயதுக்குள் மொத்தம் 28 பற்கள் முளைத்துவிடும். மீதமுள்ள நான்கு பற்கள் 17 வயதுக்கு மேல் முளைக்கும். அவைதான், `ஞானப்பற்கள்’ (Wisdom Teeth) என அழைக்கப்படுகின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து, சற்று வளர்ந்து பக்குவமான நிலையிலும், அறிவுத்திறனுடன் இருக்கும் நிலையிலும் இவை முளைப்பதால், ‘ஞானப்பல்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

Continue reading →

நாளை என்பதில்லை நரசிம்மரிடம்! – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19

தாருகாவனம்’ என்று நான்மறைகள் போற்றும் மிகப் பழைமை வாய்ந்த தலம் `முன்னூர்’ எனப்படும் `முந்நூற்று மங்கலம்’. புருஷோத்தம நல்லூர், திரிசதபுரம், ராஜநாராயண சதுர்வேதி மங்கலம் என்று பல பெயர்களில் வரலாற்று ஏடுகள் முன்னூரைக் குறிப்பிடுகின்றன.   

தவயோகிகளும் வேதவிற்பன்னர்களும் வாழ்ந்ததால் சிறப்புப் பெற்ற இந்தத் தலத்தில் ஸ்ரீபதியான வைகுண்டவாசன், `ஸ்ரீஅருளாளப்பெருமான்’ எனும் திருநாமத்தோடு, தன் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில், கற்பனைகள் அனைத்தையும் மிஞ்சும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார்!

பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்குப் புருஷோத்தமபுரி என்ற ஒரு திரு நாமம் உண்டு. இந்த ஆலயம் அமைந்த பகுதியை (தற்போதைய ஒடிசா மாநிலம்) ஆண்ட `கஜபதி’ வம்ச மன்னர்களுக்கு, முன்னூர் அபிமானத்தலம் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்தத் தலத்துக்கு `புருஷோத்தம நல்லூர்’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில், `சித்திர மேழி விண்ணகர் எம்பெருமாள்’ என இந்தத் தலத்தின் பெருமாள் பூஜிக்கப்பட்டாராம். ஆகவே, இத்தலம் பராந்தகச் சோழனின் காலத்துக்கும் முந்தையது என்பதை அறிய முடிகின்றது. சோழர்களும் பாண்டியர்களும் இத்தலத்துக்குப் பல கொடைகளை அளித்துள்ளனர்.

இந்தத் தலத்தில் அருள்மிகு நரசிம்மர் குடியேறிய கதை,  மிகவும் சிலிர்ப்பானது.

Continue reading →