Advertisements

நாளை என்பதில்லை நரசிம்மரிடம்! – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19

தாருகாவனம்’ என்று நான்மறைகள் போற்றும் மிகப் பழைமை வாய்ந்த தலம் `முன்னூர்’ எனப்படும் `முந்நூற்று மங்கலம்’. புருஷோத்தம நல்லூர், திரிசதபுரம், ராஜநாராயண சதுர்வேதி மங்கலம் என்று பல பெயர்களில் வரலாற்று ஏடுகள் முன்னூரைக் குறிப்பிடுகின்றன.   

தவயோகிகளும் வேதவிற்பன்னர்களும் வாழ்ந்ததால் சிறப்புப் பெற்ற இந்தத் தலத்தில் ஸ்ரீபதியான வைகுண்டவாசன், `ஸ்ரீஅருளாளப்பெருமான்’ எனும் திருநாமத்தோடு, தன் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில், கற்பனைகள் அனைத்தையும் மிஞ்சும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார்!

பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்குப் புருஷோத்தமபுரி என்ற ஒரு திரு நாமம் உண்டு. இந்த ஆலயம் அமைந்த பகுதியை (தற்போதைய ஒடிசா மாநிலம்) ஆண்ட `கஜபதி’ வம்ச மன்னர்களுக்கு, முன்னூர் அபிமானத்தலம் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்தத் தலத்துக்கு `புருஷோத்தம நல்லூர்’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில், `சித்திர மேழி விண்ணகர் எம்பெருமாள்’ என இந்தத் தலத்தின் பெருமாள் பூஜிக்கப்பட்டாராம். ஆகவே, இத்தலம் பராந்தகச் சோழனின் காலத்துக்கும் முந்தையது என்பதை அறிய முடிகின்றது. சோழர்களும் பாண்டியர்களும் இத்தலத்துக்குப் பல கொடைகளை அளித்துள்ளனர்.

இந்தத் தலத்தில் அருள்மிகு நரசிம்மர் குடியேறிய கதை,  மிகவும் சிலிர்ப்பானது.

சிதிலமடைந்து கிடந்த இந்தத் தலத்தின் புனரமைப்புப் பணிகள், 2007 முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்றன. திருப்பணிகளின் பொருட்டு மண்ணை அகழ்ந்து கொண்டிருந்தபோது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

மண் அகழும் இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தவர், கற்குவியலுக்கு மத்தியில் கல்லால் ஆன திருமேனி ஒன்று தட்டுப் படுவதை உணர்ந்தார். அந்தச் சிலையைப் பொறுமையுடன் பூமியிலிருந்து வெளியே எடுத்தார்.

புராதனமான அந்தச் சிலை ஸ்ரீயோக நரசிம்மரின் சிலை  என்பதை அறிந்து, முன்னூர் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரீயோக நரசிம்மரின் திருமேனியைப் பயபக்தியோடு திருக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்தனர். அதுமட்டுமல்ல, ஸ்ரீயோக நரசிம்மர்  முன்னூரில் பூமியிலிருந்து தோன்றி தன் பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்த நாள் எது தெரியுமா?

19.1.2009 தை மாதம் 6 ஆம் நாள். இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா?

மிகச் சரியாக அந்தத் திருநாள், ஸ்ரீநரசிம்மர்  திருஅவதாரம் செய்த சுவாதி நட்சத்திரத் திருநாளாக அமைந்ததுதான்!

பிரகலாதவரதனின் திருவுள்ளத்தை எண்ணி இத்தல மக்கள் அனைவருக்கும் அளவில்லாத ஆச்சரியம் ஏற்பட்டது.

ஆம்! ஆராவமுதனான ஸ்ரீஅருளாளப் பெருமானின் திருக்கோயிலில், தமக்கும் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படவேண்டும் என அந்த `அழகிய சிங்கம்’ தனது திருவுள்ளத்தில் நினைத்து விட்டார் போலும்! அதன்படியே,  இத்தலத்தில் ஸ்ரீயோக நரசிம்மருக்கும் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. கோரைப் பற்களின்றி குழந்தை வடிவமாகத் திருக்காட்சி தருகிறார்,  ஸ்ரீயோக நரசிம்மர். வேறெங்கும் காண்பதற்கு அரிய அபூர்வ கோலம் இது என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

 

“இவரின் சந்நிதியில் சுவாதி நட்சத்திர நாள்களில் சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு ஸ்ரீயோக நரசிம்மரை வழிபட்டு, ஹோமத்தில் வைத்த ரக்ஷையை கையில் அணிந்துகொண்டால், கடன் பிரச்னைகள் விரைவில் தீர்ந்து  மன நிம்மதி ஏற்படும். அதேபோல், தேர்வு காலங்களில் இங்கே `ஸ்ரீவித்யா ப்ராப்தி ஹோமம்’ நடை பெறும். பள்ளி மாணவர்கள் அதில் கலந்து கொண்டு வணங்கி வழிபட்டால், தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம்” என்கிறார், இத்தலத்தின் அர்ச்சகர் ஸ்ரீகேசவ பட்டர். திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி. மீ. தூரத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர்.

`நாளை என்பதில்லை நரசிம்மரிடத்தில்’ என்பார்கள். நீங்களும் முன்னூர் ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு வாருங்கள். அவரை தரிசிக்கும் கணத்திலேயே உங்களின் பிரச்னைகள், அனைத்தும் விலகும்; வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

 


மங்களகிரி பானக நரசிம்மர்!

ராமபிரான் அவதார நோக்கம் நிறைவுற்று வைகுண்டத் துக்குக் கிளம்பும்போது, ஆஞ்சநேயர் கண்ணீர் மல்க அவரைத் தடுத்தார். அவரைத் தேற்றிய ராமன், `‘கவலைப் படாதே ஆஞ்சநேயா, ‘மங்கள கிரி’ க்ஷேத்திரத்தில் தங்கி, என் பக்தர்களுக்கு அருள்வாயாக’’ என்று அருள்பாலித்தார்.

அதன்படி இன்றும் ஆஞ்சநேயர் அரூபமாக அருளும் தலம் மங்களகிரி. இது தோதாத்ரி என்றும் அழைக்கப்படுகிறது. விஜயவாடா-குண்டூர் தேசிய நெடுஞ்சாலையில், விஜயவாடா புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மங்களகிரி. இங்குள்ள பானக நரசிம்மர், சிறந்த வரப்பிரசாதி. தாயாரின் திருநாமம் ஸ்ரீராஜலட்சுமி.

பக்தர்கள், தங்களது குறை தீரவும் விரும்பிய எண்ணங்கள் நிறைவேறவும் பானக நீரைச் சமர்ப்பிக்கின்றனர். கோயில் பட்டாச்சார்யர் பானகத்தை நரசிம்மருக்கு நிவேதித்து, தீப ஆராதனை செய்வார்.

அண்டாவில் நிரம்பி யிருக்கும் பானகத்தை சிறிய பாத்திரம் மூலம் மொண்டு மொண்டு பட்டர், பெருமாளின் வாயில் ஊற்ற, அண்டாவிலுள்ள பானக நீர் சரியாக பாதியளவு குறைந்தவுடன், ஸ்வாமி யின் வாயில் ‘க்ளக்… க்ளக்’ என்ற சத்தம் வரும். அப்போது பானகம் ஊற்றுவது நிறுத்தப்படும்!

பானகத்தில் பாதி பக்தர்களுக்குப் போகவேண்டும் என்பது நரசிம்மரின் சங்கல்பம் போலும்! இப்படி நைவேத்தியம் செய்யப்பட்ட பானகம் சுவையானது. வேறு எந்த ஓர் ஆலயத்திலும் இவ்வளவு சுவையான பானகம் கிடைக்காது. இங்கு பானக நீர் அல்லது இளநீர் தப்பித் தவறித் தரையில் சிந்தினாலும் அங்கு ஈ, எறும்பு மொய்ப்பதில்லையாம்!

ஒருமுறை சென்று இந்த நரசிம்மருக்கு பானகம் நைவேத்தியம் செய்து பாருங்கள்; நினைத்தது யாவும் இனிதே நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள்.


கதலி நரசிம்மர்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஜம்புலிபுத்தூரில் அமைந்திருக்கிறது கதலி நரசிங்கர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஸ்ரீவரதராஜர் சந்நிதியில், சிறிய சிலா விக்கிரமாக வாழைப்பூ போன்ற முக வடிவில் காட்சி தருகிறார் கதலிநரசிங்க பெருமாள் (கதலி என்றால் வாழை). அபிஷேக, நைவேத்திய, தீபாராதனை வேளைகளில் மட்டுமே இவரை தரிசிக்க இயலும். மற்ற நேரங்களில் இவரது திருவுருவம் கவசத்தால் மூடி வைக்கப்பட்டுள்ளது.

நவ நரசிம்மர்கள்!

ந்தவாசி-ஆரணி சாலையில், 27 கி.மீ. தொலைவிலுள்ளது ஆவணியாபுரம். நவ நரசிம்மர்கள் அருளும் இத்தலத்தில் துலாபார பிரார்த்தனை விசேஷம். இங்கே, தாயாரும் கருடாழ்வாரும் சிம்ம முகத்தோடு அருள்வது தனிச்சிறப்பாகும்.


`அஹோபிலம்… மகாபலம்’

வநரசிம்மர்கள் அருளும் தலம் அஹோபிலம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம். பெரும் தவத்தால் பெருமாளின் நரசிம்ம வடிவை தரிசித்து, `அஹோ பிலம் மகா பலம்’ என்று கருடன் சிறப்பித்துப் போற்றிய தலம் ஆதலால், இதற்கு கருடாசலம் என்றும் திருப்பெயர் உண்டு. இத்தலத்தை தரிசித்து வரும் பக்தர்களை, அதன் பிறகு துன்பங்களே அணுகாது!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: