Daily Archives: மே 22nd, 2019

மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகும்: தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக 5 மணிநேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நாடு முழுவதும் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேலூர் தொகுதி தவிர 542 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில், அந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றமான மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுக்களை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம் மின்னணு இயந்திரங்களை காட்டிய பின்னரே ஒட்டு என்னும் பணி நடைபெறும். காலை 9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி அளவில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளில் முன்னிலையில் உள்ளது என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாவதில் 5 மணிநேரம் வரை தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் மிரட்டுவாரா மோடி?

ருத்துக் கணிப்பை பி.ஜே.பி வரவேற்கிறது… அ.தி.மு.க கடுமையாக விமர்சித்திருக்கிறதே?’’ – எதிரில் வந்தமர்ந்த கழுகாரிடம் ஆரம்பித்தோம்.

‘‘ஓ… தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தையும் பி.ஜே.பி-யின் கருத்தையும் வைத்து நீர் சொல்கிறீர். அதற்கு முன் நடந்த கதையை நான் சொல்லவா?’’

‘‘சொல்லும்.’’

‘‘இறுதிக்கட்டத் தேர்தலுக்கு முந்தைய தினம் மோடியின் கேதார்நாத் விசிட் குறித்த செய்திகள், அனைத்து ஊடகங்களிலும் பிரதானப்படுத்தப்பட்டன. அதற்குப் பின்னால் மிகப் பெரிய ஊடகத் தந்திரம் இருக்கிறது. தேர்தல் தொடங்கியதிலிருந்தே பிரதமருக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதனால், மோடிக்கும் மேலாக இருந்து பி.ஜே.பி-யை லாபி செய்யும் குழுவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் மோடி சரிக்கட்டிவிடுவார் என்று அந்தக் குழுவினர் நினைத்தார்கள். ஆனால், அவருடைய உரைகளிலும் ஒன்றுமே இல்லை!’’

‘‘அதற்குத்தான் அமித் ஷாவை வைத்துப் பதிலடி கொடுத்தார்களே?’’

Continue reading →

மது தரும் பரிசு, 200 வகையான நோய்கள்… அலர்ட் நண்பர்களே!

மதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்னைகளையும் மதுக்குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

து அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதிக அளவில் புதிய குடிநோயாளிகள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறியிருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் மது அருந்துவோர் குறித்து ஆய்வொன்றை நடத்தியுள்ளது ஜெர்மனியிலுள்ள டி.யூ.டிரெஸ்டன் பல்கலைக்கழகம். 2010 முதல் 2017 வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த ஆய்வின் முடிவில், மதுவுக்கு அடிமையானவர்களை 200 வகையான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் `லான்செட்’ ஆங்கில இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Continue reading →

மனசை ரிலாக்ஸ் ஆக்கும் ஆப்கள்

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை எதை நோக்கி பயணம் செய்கிறது என்று நமக்கே தெரியாது. கல்லூரி வாழ்க்கை, வேலை, கல்யாணம், குடும்பம் என்று நாம் பல விஷயங்களுக்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம். இந்த ஓட்டத்தில் யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று நாம் நம் மனதில் பச்சைக்குத்திக் கொண்டு இருக்கிறோம். அது அலுவலக வேலையோ அல்லது குடும்பச் சுமையோ எதுவாக வேண்டும்  இருக்கலாம்.

இதில் அன்றாடம் நாம் பல சிக்கல்கள் மற்றும் தடைகளை கடந்து தான் நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம். இந்த அவசர வாழ்க்கையில் இலவசமாக நம்மை அறியாமல் நாம் எல்லாரும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் மனஉளைச்சல் அல்லது மனஅழுத்தம். இவை இரண்டுமே நம் அனைவரின் எதிரி. இவற்றை நம்மால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். உங்களின் மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சலை எவ்வாறு போக்கலாம் என்று வழிகாட்டுகிறது இந்த ஆப்கள்.

ஸ்ட்ரெஸ் ரிலீஃப் Continue reading →

கேடின்றி வாழவைப்பார் கேது பகவான்!

ருவரது குலம் செழித்தோங்கி திகழவேண்டும் எனில், அவருக்கு,  கேதுவின் திருவருள் பரிபூரணமாக வேண்டும். ஆமாம், குலம் செழிக்கவைக்கும் கிரக மூர்த்தி கேதுபகவான். கேதுவை ஞானகாரகன் எனப் போற்றுகிறது ஜோதிடம்.

கேது, காலன், எண்ணுபவன், மஹா கேது, ருத்ர பிரியர், தூம்ர கேது, விவர்ணகன்,  நறுமணம் ஏற்பவர், வைக்கோல் புகையின் வண்ணம் கொண்டவர் என்றெல்லாம் கேதுவைச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள், கேது பகவானை வழிபடுவதால் சகல பீடை களும் விலகும்; செல்வம், தான்யம், பசுக்கள் ஆகிய போகங்கள் பெருகும் என்றும் அறிவுறுத்துகின்றன அந்த நூல்கள்  (கேது: கால: கலயிதா தூம்ரகேதுர்விவர்ணக:).

Continue reading →

கூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க!

இது கோடை நேரம். பள்ளிகளுக்கு விடுமுறை. குழந்தைகள் அதிகம் வெளியில் சென்று ஆட்டம் போடுவார்கள். பெரியவர்களால் இந்த கோடையை சமாளிப்பது ரொம்பவே கடினம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பாவென வெயில் உச்சி மண்டையை பிளக்க, குழந்தை முதல் பெரியவர்கள் வரை சம்மரை சமாளிப்பது எப்படி? கோடை காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளில் இருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது என்ற கேள்விகளுக்கு அழகுக்கலை நிபுணர் ஹேமலதா விடையளித்தார். Continue reading →