மனசை ரிலாக்ஸ் ஆக்கும் ஆப்கள்

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை எதை நோக்கி பயணம் செய்கிறது என்று நமக்கே தெரியாது. கல்லூரி வாழ்க்கை, வேலை, கல்யாணம், குடும்பம் என்று நாம் பல விஷயங்களுக்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம். இந்த ஓட்டத்தில் யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று நாம் நம் மனதில் பச்சைக்குத்திக் கொண்டு இருக்கிறோம். அது அலுவலக வேலையோ அல்லது குடும்பச் சுமையோ எதுவாக வேண்டும்  இருக்கலாம்.

இதில் அன்றாடம் நாம் பல சிக்கல்கள் மற்றும் தடைகளை கடந்து தான் நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம். இந்த அவசர வாழ்க்கையில் இலவசமாக நம்மை அறியாமல் நாம் எல்லாரும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் மனஉளைச்சல் அல்லது மனஅழுத்தம். இவை இரண்டுமே நம் அனைவரின் எதிரி. இவற்றை நம்மால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். உங்களின் மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சலை எவ்வாறு போக்கலாம் என்று வழிகாட்டுகிறது இந்த ஆப்கள்.

ஸ்ட்ரெஸ் ரிலீஃப்

ஐந்து நிமிடங்களில் உங்களின் மன அழுத்தத்தை போக்கக்கூடியது. இந்த ஆப்பில் உள்ள தியான மற்றும் மூச்சுப்பயிற்சிகள்  மன அழுத்தத்தை போக்க இசையும் உள்ளது. இசையைக் கேட்டுக் கொண்டே ஆப்பில் உள்ள பயிற்சிகளை நாம் செய்து வரலாம். இதன் மூலம் நமக்கு  தேவையான சக்தி, சகிப்புத்தன்மை மற்றும் கவனச்சிதறல்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். இதைத் தவிர இதில் பல தரப்பட்ட அம்சங்கள்  உள்ளன.

* ஒவ்வொரு முறை நாம் செய்யும் மூச்சுப்பயிற்சிக்கு சிறப்பு இசை உள்ளது.
* இந்த பயிற்சியினை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ேபாது, நம்முடைய சுவாச விகிதம் குறைவதுடன் இல்லாமல் நாம் அடுத்த கட்ட  பயிற்சியினை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
* இதில் உள்ள எட்டு நிமிட தியான பயிற்சி உங்க உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் புதுப்பிக்க உதவும்.
* மேம்பட்ட மூச்சுப்பயிற்சி மற்றும் 12 நிமிட தியான பயிற்சியும் இதில் உள்ளது. இந்த பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
* பயிற்சிகள் எடுத்துக் கொண்ட அடுத்த நிமிடமே மனசு ரிலாக்ஸ் ஆகும்.
*படபடப்பு மற்றும் கவனச்சிதறல் குறையும்.
* ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பையும் சீராக்கும்.
* உடற்பயிற்சி மேற்ெகாள்வதன் மூலம் உங்கள் நுரையீரல் திறனை அதிகரிக்கும்.
* தூக்கமின்மை நோய் பாதிப்பு குணமாகும்.
* தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

கார்டியா

டீப் பிரீத் ரிலாக்சேஷன்

தூக்கமின்மையா, படபடப்பு பிரச்னையா, மனச்சோர்வா எதுவாக இருந்தாலும் சில நிமிடங்களில் இந்த ஆப்பில் உள்ள பயிற்சியினை பின்பற்றினால், உடனடியாக தீர்வு கிடைக்கும். கார்டியா ஆப்பில் உள்ள மூச்சுப் பயிற்சிகளை பின்பற்றுவது மூலம் உங்களின் மூச்சு மற்றும் இதய துடிப்பு இரண்டும் சீராக துடிப்பதுடன் மட்டும் இல்லாமல் உங்கள் உடல் மற்றும் மனம் அனைத்தும் ரிலாக்சாக இருக்கும். இதில் இருக்கும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த உடற்பயிற்சியினை எல்லாரும் மேற்கொள்ளலாம்.இந்த ஆப்பில் உள்ள உடற்பயிற்சியினை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் மனஅழுத்தத்திற்கு தீர்வு கிடைக்கும். இதய பிரச்னை ஏற்படாது, மனம், உடல் ரிலாக்சாகும், கவனச் சிதறல் ஏற்படாது, தூக்கமின்மை பிரச்னை தீரும்.

கார்டியா ஆப் மூலம் இதய துடிப்பு மாறுபாடு குறித்த பயிற்சியினை உங்களின் மூச்சுப்பயிற்சி மூலம் சீராக்க முடியும். ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சுவாசிக்கும்போது, ​​உங்கள் இதய துடிப்பு அதிகரித்து அதன் பிறகு அதன் வழக்க நிலையை அடைகிறது. இதற்கு சுவாச ஒத்திசைவு என்று பெயர். அறிவியல் ஆய்வுகள் மூலம் இந்த பயிற்சிகள் உங்களின் மன அழுத்தம், பதட்ட நிலை, ரத்த அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றின் மீது பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கார்டியாக் கோஹெரன்ஸ்

இந்த ஆப் மூலம் உங்களின் சுவாசத்தை கட்டுப்படுத்த முடியும். முதலில் வழக்கமான முறையில் சுவாசிக்க வேண்டும். பின்னர் சுவாசத்தின் எண்ணிக்கையை நிமிடங்களுக்கு ஏற்ப குறைக்க வேண்டும். இதன் மூலம் ஒருவரின் சுவாசத்தை சீரான முறையில் கட்டுப்படுத்த முடியும்.கார்டியாக் கோஹெரன்சில் சுவாசம் குறித்த உடற்பயிற்சி முறைகள் உள்ளன. அதில் ஒரு நிமிடத்திற்கு நாம் எவ்வளவு சுவாசிக்க வேண்டும் என்று  குறிப்பிட்டு இருக்கும். அதன்படி பின்தொடர வேண்டும். உங்களின் தற்போதைய சுவாச எண்ணிக்கையை குரோனோமீட்டர் கொண்டு மதிப்பிடலாம். 

ஆப்பில் குறிப்பிட்டுள்ள உடற்பயிற்சியினை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது ஆப்பிலேயே குறிப்பிட்டு இருக்கும். அதை நாம் ஃபாலோ  செய்தாலே போதும். மூச்சுப் பயிற்சி எடுக்கும் போது அதற்கான நிபுணர்கள் உங்களை வழிநடத்துவார். மேலும் இதய மானிட்டர் குறித்த செயல்பாடும்  இதில் உள்ளது. செல்போனில் உள்ள பின்புற கேமராவில் உங்களின் விரலை வைத்தால் போதும், உங்க இதய துடிப்பு துல்லியமாக கணக்கிடப்படும்.  அதில் சிவப்பு நிறம் வந்தால் உங்களின் இதய துடிப்பு சீராக இல்லை என்றும் பச்சை நிறம் வந்தால், எந்த பிரச்னையும் இல்லை என்பதை  சுட்டிக்காட்டும்.

கார்டியாக் கோஹெரன்ஸ் என்றால் என்ன?

நம்முடைய மூளைக்கும் இதயத்திற்கும் ஒரு தொடர்புள்ளது. நாம் மனதால் பாதிக்கப்பட்டால் அது மூளையை தாக்கும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உங்களின் இதய துடிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் உங்களின் மன அழுத்தம் மற்றும்  உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியும். இதய துடிப்பை எளிதாக கட்டுப்படுத்த மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம். அதனை இந்த ஆப் மூலம் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.

செரினிட்டி:

கைடெட் மெடிடேஷன் மற்றும் மைண்ட்ஃபுல்னெஸ்

செரினிட்டி, பல விதமான தியானங்கள் மற்றும் நுண்ணறிவு நுட்பங்களை அளித்து மனதினை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க உதவுகிறது. இதில் உள்ள ஏழு நாள் இலவச பயிற்சிகள் மூலம் உங்களின் மனதை அமைதியாக வைக்க உதவும் பயிற்சியினை கற்றுக் கொள்ளலாம். இதில் பல முறைகள் உள்ளன. அடிப்படை தியானம் பயிற்சிகள் மூலம் உங்களின் திறன்களை விரிவாக்கவும், சுய விழிப்புணர்வு, மதிப்புகள் மற்றும் இலக்குகளை அடைவது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிலர் மன உளைச்சல் காரணமாக தூக்கமில்லாமல் தவிப்பார்கள். அவர்களின் மனதை அமைதிப்படுத்த இசை மற்றும் தசைகளை தளர செய்ய உதவும் யுக்திகள், நீங்கள் தூங்குவதற்கு வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மன அழுத்தம் போக்க உடல் மற்றும் மனதினை அமைதிப்படுத்த உதவும் தசை தளர்வு மற்றும் தியான பயிற்சிக்கான நுட்பங்களை பின்பற்றலாம். உங்கள் திறமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது உங்கள் மனதை அமைதிப்படுத்த குறுகிய தியான முறைகளும் இதில் உள்ளன. குழந்தைகளுக்கு படிப்பு மூலமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கான தியான பயிற்சியும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி  ஆரோக்கியமாக வாழுங்கள்.

%d bloggers like this: