Daily Archives: மே 24th, 2019

மீண்டும் மோடி! – தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அப்போது காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் அறிவுரை சொல்வது மாதிரி ஒரு ட்வீட் போட்டிருந்தார். ‘நிலைமை இப்படியே போனால், நாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலை மறந்துவிட வேண்டியதுதான். 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே திட்டமிட்டு நம்பிக்கையுடன் வேலை பார்க்கலாம்.’ உமர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை இப்போது தேர்தல் முடிவுகள் மூலம் நரேந்திர மோடி உணர்த்தியிருக்கிறார்.

Continue reading →

கணக்கு பலித்தது… குஷியில் எடப்பாடி!

இரண்டு மாதங்கள்கூட நீடிக்காது இந்த ஆட்சி” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது எதிர்க்கட்சிகள் கொக்கரித்தன. ஆனால், இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது இடைத்தேர்தல் களத்திலும் ஆட்சியைக் கரைசேர்த்து தன்னையும் நிரூபித்துள்ளார்.

Continue reading →

மீண்டும்… மிளிரும் மோடி… மிரட்டும் தமிழகம்!

ஏதேதோ எண்ண ரேகைகள் முகத்தில் தெறிக்க அமைதியாக வந்தமர்ந்தார் கழுகார்.
“என்ன நீர் ஏதும் தியானத்தை ஆரம்பிக்கப் போகிறீரோ” என்று கேட்டதுமே சிரித்த கழுகார், “சரி நீரே தொடங்கும்” என்றார்.
“மீண்டும் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டுவிட்டாரே மோடி. என்னதான் அந்த மேஜிக்?’’
‘‘சென்ற இதழ் அட்டையில் நீர் போட்டதுபோலவே மிரட்டிவிட்டார் மோடி. 300 என்ற எண்ணிக்கையை பி.ஜே.பி கூட்டணி தாண்டும் என்று கருத்துக்கணிப்புகள்

Continue reading →

எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! – கொந்தளித்த ஜெயக்குமார்

மகனை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கிவிட வேண்டுமென துடித்த அமைச்சர் ஜெயக்குமாரின் கனவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதாக புலம்புகிறது அ.தி.மு.க தரப்பு.

தென்சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட்டார். மகனை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கிவிட வேண்டுமெனத் துடித்த ஜெயக்குமாரின் கனவில், ஒரு லோடு மண்ணை அள்ளிப் போட்டுள்ளது மக்கள் நீதி மய்யம்.

Continue reading →