அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்!

லோக்சபா தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர முதல்வர் பழனிச்சாமி முடிவெடுத்து இருக்கிறார் என்கிறார்கள்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் இப்படி வரும் என்று அதிமுக கொஞ்சமும் நினைக்கவில்லை. குறைந்தது 5 இடங்களையாவது வெல்வோம் என்று அதிமுக நினைத்து கொண்டு இருந்தது.

ஆனால் தமிழகம் முழுக்க ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக லோக்சபா தேர்தலில் வென்றுள்ளது. இதனால் முதல்வர் பழனிச்சாமி தற்போது அதிமுகவில் சில மாற்றங்களை செய்ய உள்ளார்.

என்ன புகார்

தேர்தல் முடிவிற்கு பின், முதல்வர் பழனிச்சாமிக்கு தேர்தல் செயல்பாடு குறித்த அறிக்கை ஒன்று சென்றுள்ளது. இந்த அறிக்கையில் தமிழகத்தில் சில தொகுதியில் அதிமுக அமைச்சர்கள் செய்த தேர்தல் பணிகள் குறித்த விவரங்கள் அடங்கி இருக்கிறது. அதேபோல் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்தும் அறிக்கை சென்றுள்ளது.

செய்யவில்லை

இதில்தான் அதிமுக அமைச்சர்கள் சிலர் சரியாக தேர்தல் பணிகளை பார்க்கவில்லை என்று புகார் சென்றுள்ளது. முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பணிகளை கவனிக்கவில்லை. கூட்டணி தலைவர்களுடன் இருந்த பிணக்கம் காரணமாக தேர்தல் பணிகள் சரியாக நடக்கவில்லை என்று புகார் சென்றுள்ளது

விரைவில் நடவடிக்கை

இதனால் சில அமைச்சர்கள் மீது அதிமுக சார்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதற்காக வரும் ஜூன் 5ம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் முதல்வர் பழனிச்சாமி முடிவெடுத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். முக்கிய சில அமைச்சர்கள் வரும் 5ம் தேதி மாற்றப்பட இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது

6 பேர்

6 அமைச்சர்கள்

முக்கியமாக 6 அமைச்சர்கள் மீது அதிமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இவர்கள் வேண்டும் என்றே அதிமுகவில் தேர்தல் பணிகளை பார்க்காமல் இருந்தனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் விரைவில் நிறைய மாற்றங்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

One response

  1. அவ்வளவு தைரியம் இருக்கா எடப்பாடிக்கு.

%d bloggers like this: