திருடனுக்கு தேள் கொட்டிய கதை’ – அவஸ்தையில் எடப்பாடி பழனிசாமி!
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தொகுதிக்குப் பொறுப்பாளர்களான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களிடம் ‘ஏன் தோற்றோம்?’ எனக் கேள்வி எழுப்ப முடியாமல் எடப்பாடி பழனிசாமி பரிதவிக்கிறாராம்.
நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க, தேனி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வெற்றியடையவைக்காத மாவட்டச் செயலாளர்களும் தொகுதிக்குப் பொறுப்பான அமைச்சர்களும் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக எதுவும் செய்ய முடியாமல் பரிதவிக்கிறாராம்.
சுழற்சி முறையில் அமைச்சரவை! – தொடங்கியது பங்காளிச் சண்டை
பி.எம் மோடி… பி.எம் மோடி’’ என்று நம் காதில் விழும்படி முணுமுணுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘ஓ… இன்றைக்கு வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமோ?’’ என்றோம்.
‘‘வெயிலின் தாக்கமல்ல, மோடியின் தாக்கம் அதிகம். தேர்தலின்போது திரைக்கு வராமல் தடைசெய்யப்பட்டிருந்த மோடியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘பி.எம். மோடி’ ரிலீஸ் ஆகிவிட்டது. ரயில்வே நிலையத்தில் டீ விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கும்போதே, சௌக்கிதார்களுடன்தான்
மூன்று மணி நேரம் நடந்த ஆலோசனை! – அமைச்சரவையை முடிவுசெய்த மோடி, அமித் ஷா
ரேந்திர மோடி, மீண்டும் பதவியேற்கப்போகிறார். அமைச்சரவையை மாற்றப்போகிறார். கூட்டணிக் கட்சிகளில் யார் யாருக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி இருந்துவருகிறது. நாளை, பிரதமர் பதவியேற்கப்போகிறார். விரைவில் அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போகிறவர்களின் பட்டியலை வெளியிடப்போகிறார்கள்.
இந்நிலையில், இன்று 3 மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், 6 கட்சிகளுக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கொடுக்கப் போவதாக மோடி, அமித் ஷா முடிவுசெய்துள்ளனர். பஞ்சாபிலிருந்து ஷிரோன்மணி அகாலிதள், உத்தரப்பிரதேசத்திலிருந்து அப்னாதள் என்ற கட்சி, பீகாரில் நிதிஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பீகாரிலிருந்து மற்றுமொரு கட்சியான லோக் ஜனசக்தி, மகாராஷ்டிராவிலிருந்து சிவசேனா, தமிழகத்திலிருந்து அ.தி.மு.க என்று 6 கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கப்போகும் பா.ஜ.க-வின் அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போகின்றன. இதில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒன்று முதல் மூன்று இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
முதல்வருடன் மோதல் எதிரொலி: சி.வி.சண்முகம் பதவிக்கு ஆபத்து!
சென்னை தலைமைச் செயலகத்தில், கடந்த இரண்டு நாள்களாக ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் பெரிய மோதல் வெடித்துள்ளது என்பதுதான் அது.
ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!’
ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.ம.மு.க.,வை உடைக்கவும், அ.தி.மு.க.,வில் இணையவும் தயாராக இருப்பதாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் வாயிலாக, முதல்வர், இ.பி.எஸ்.,க்கு, அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் துாது விட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.