மூன்று மணி நேரம் நடந்த ஆலோசனை! – அமைச்சரவையை முடிவுசெய்த மோடி, அமித் ஷா

ரேந்திர மோடி, மீண்டும் பதவியேற்கப்போகிறார். அமைச்சரவையை மாற்றப்போகிறார். கூட்டணிக் கட்சிகளில் யார் யாருக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி இருந்துவருகிறது. நாளை, பிரதமர் பதவியேற்கப்போகிறார். விரைவில் அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போகிறவர்களின் பட்டியலை வெளியிடப்போகிறார்கள். 

இந்நிலையில், இன்று 3 மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், 6 கட்சிகளுக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கொடுக்கப் போவதாக மோடி, அமித் ஷா முடிவுசெய்துள்ளனர். பஞ்சாபிலிருந்து ஷிரோன்மணி அகாலிதள், உத்தரப்பிரதேசத்திலிருந்து அப்னாதள் என்ற கட்சி, பீகாரில் நிதிஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பீகாரிலிருந்து மற்றுமொரு கட்சியான லோக் ஜனசக்தி, மகாராஷ்டிராவிலிருந்து சிவசேனா, தமிழகத்திலிருந்து அ.தி.மு.க என்று 6 கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கப்போகும் பா.ஜ.க-வின் அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போகின்றன. இதில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒன்று முதல் மூன்று இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

%d bloggers like this: