டேர்ம் இன்ஷூரன்ஸ்… குடும்பத்தைக் காக்கும் பாராசூட்!
விண்ணிலிருந்து குதிக்கும் விளையாட்டு வீரர்கள் பாராசூட் இல்லாமல் குதிப்பார்களா? நிச்சயமாகக் குதிக்கமாட்டார்கள். பாதுகாப்பான முறையில் தரையிறங்கவே அவர்கள் விரும்புவார்கள். ஆயுள் காப்பீடு என்பது ஒரு குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் நபர் எதிர்பாராத வகையில் இறந்தால், அந்தக் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கும் ஒரு பாராசூட் எனலாம்.
சிற்றரத்தை – பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!
இஞ்சியின் நெருங்கிய உறவினர் அரத்தை. வாசனை மற்றும் மருத்துவக் குணத்தில் இஞ்சிக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல. வாசனையால் மதிமயக்கி உணவை நோக்கி நம்மைச் சுண்டியிழுக்கும் `சுகந்த அஸ்திரம்’ அரத்தை. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்றொரு மருத்துவப் பழமொழி உண்டு. சளி, இருமல், இரைப்பு போன்ற கப நோய்களை உணவின் மூலம் விரட்ட, வேர்க்கிழங்கான அரத்தைக்கு அஞ்சறைப் பெட்டிக்குள் இடம் ஒதுக்குங்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல பெற்றோருக்கு 10 ஆலோசனைகள்!
பள்ளி திறக்க சில நாள்களே இருப்பதால் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப்போடுவதில் தொடங்கி, புத்தகப்பை மற்றும் ஷூ சாக்ஸ் வாங்குவது எனப் பெற்றோர் பிஸியாக இருப்பார்கள். நீண்ட விடுமுறையில் நேரம் காலம் பார்க்காமல் விளையாட்டு, டூர் எனப் பிள்ளைகள் நினைத்த மாதிரி இருந்திருப்பார்கள். இந்தச் சூழலில், இப்போது பள்ளிக்கு அனுப்புவது பெற்றோருக்குக் கொஞ்சம் சிரமமான டாஸ்க்தான். சில குழந்தைகள் அழுது அடம்பிடிப்பார்கள்.
ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க!” – எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி
நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக இருந்தபோது, தமிழகத்தில் மற்றொரு பரபரப்பும் சேர்ந்தே இருந்தது. எடப்பாடி ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக வாக்காளர்கள் முடிவு செய்ய காத்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, 9 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றதால் ஆட்சி தக்க வைக்கப்பட்டது.
கடைசிநேரக் காட்சிகள்: மந்திரி பதவி… அ.தி.மு.க-வை அலறவிட்ட பி.ஜே.பி!
குடியரசு மாளிகையில் கோலாகலமாக அரங்கேறியது பிரதமர் பதவியேற்பு விழா. என்னதான் தமிழகம் பி.ஜே.பி-யை புறக்கணித்தாலும்… இரண்டு தமிழர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்து, பெருந்தன்மையைக் காட்டியுள்ளார் மோடி” என்று டெல்லி அப்டேட்களைச் சுடச்சுட நமக்கு தர ஆரம்பித்த கழுகாரிடம் “புரிகிறது… புரிகிறது… நன்றாகவே நக்கல் அடிக்கிறீர்கள். எல்லாம் சரி… மத்திய அமைச்சரவைப் பட்டியல் அறிவிப்பதில் எதற்காக இவ்வளவு தாமதம் ஏற்பட்டது?” என்றோம்.
முந்திய எடப்பாடி; பிந்திய ஓ.பி.எஸ்!’ – தனியே தன்னந்தனியே வைத்திலிங்கம்
மத்தியில் அ.தி.மு.க-வுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல அ.தி.மு.க-வின் சீனியர் எம்.பி-க்களும் வருத்தத்தில் உள்ளனர். இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனிமேல் மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட முடியாது என்று சீனியர் அ.தி.மு.க எம்.பி-க்கள் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் வைத்திலிங்கம் டெல்லியிலிருந்து சென்னைக்குத் தனியாக வந்துள்ளார்.