ஓ.பி.எஸ் மகன் மட்டும் வெற்றி பெற்றது எப்படி..? வெளியானது பரம ரகசியம்..!

தமிழகத்தில் 38 இடங்களில் 37 தொகுதிகளில் மண்ணை கவ்விய அதிமுக கூட்டணியில் ஒற்றை ஆளாய் வெற்றி பெற்றது ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத்

மட்டுமே.

அதனாலோ என்னவோ அவரது வெற்றியின் மீது விழுந்த சந்தேகக் கண்கள் இப்போதுவரை அகலாமல் அவர் மீது பதிந்து கிடக்கிறது. பாஜக நெருக்கத்தால் ஓட்டு மெஷினில் கோல்மால் செய்து அவர் வெற்றி பெற்றதாக ஒரு தரப்பும், பண மழை ஓ.பி.ஆரை வெற்றி பெற வைத்தது என மற்றொரு தரப்பும், ஆளாளுக்கு காரணம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒ.பி.ஆரின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது சகோதரர் ஜெயபிரதீப் என்கிறார்கள். வெற்றி பெறுவது சிரமம் என்கிற செய்திகள் வந்த நிலையில், சென்னையில் இருந்து ஒரு குழுவை தேனி தொகுதிக்கு வரவழைத்து தனிப்பட்ட முறையில் சர்வே எடுக்க வைத்திருக்கிறார் பிரதீப். சர்வே டீம் தந்த ரிப்போர்ட் படி எங்கெங்கே என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன.

அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை எல்லாம் கண்டுபிடித்து அத்தனையையும் சரி செய்து இருக்கிறார். அத்துடன் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னதாக கட்சியின் முக்கிய பொருப்பாளர்களை எல்லாம் அழைத்து கூட்டம் போட்ட பிரதீப் 45 நிமிடங்கள் உருக்கமாகப் பேசினாராம் பேசி முடித்தபோது அவரோடு சேர்ந்து அங்கிருந்த அத்தனை பேரும் கண்கலங்கி போனார்களாம். இந்த ட்ச தான் ரவீந்திரநாத்தை தோல்வியில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்கிறார்கள்.

%d bloggers like this: